இஞ்சி துவையல்

This gallery contains 1 photo.

தேவையான பொருட்கள் : இஞ்சி – 1  விரல் நீளத் துண்டு தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6 கறிவேப்பிலை – 1 கொத்து உளுந்து – 2 டேபிள் ஸ்பூன் புளி – சிறிதளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் – சிறிதளவு கடுகு – 1 டீ ஸ்பூன் உளுந்து – 2 டீ ஸ்பூன்   … Continue reading

பிரம்மச்சாரி

This gallery contains 1 photo.

                      சாத்தையிலிருந்து சென்னை நோக்கிப் படையெடுத்து வந்தவர்களில் குமாரும் ஒருவன். பெருவாரியான  கிராமத்து இளைஞர்களின் வாழ்வாதாரமாக சென்னை விளங்குகிறது. தன் நண்பன் சுந்தரம் கொடுத்த முகவரியில், முகம் தெரியாத மனிதர்களுடன் வாழப் பழக ஆரம்பித்தான்.  சென்னையில் யார் ஒருவரின் பரிந்துரையும் இல்லாமல் வேலை  கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது.     குமாரின் குடும்பம் எளியது. தந்தை விவசாயி.குமாரின் படிப்பு டிப்ளோமா இன் எலெக்ட்ரிகல் அண்ட் எலேக்ட்ரோநிக்ஸ். … Continue reading

கொலையா? கொள்ளையா? எது கொடிய குற்றம் ?

This gallery contains 1 photo.

இன்றைய தலைப்புச்  செய்திகளில் வங்கிக் கொள்ளையடித்த ஐந்து பேரைக் காவல்துறை, தற்காப்பு கருதி சுட்டுக் கொன்றதாக பரபரப்பான செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. மனித நேய கமிட்டி இச்செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கொள்ளை அடித்தவர்கள் ஐவரும் வட மாநிலத்தவர்கள் என்று காவல் துறை குறிப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  நிறைய எழுத்தாளர்கள், கொன்றது குறித்து தங்கள் இணையதளங்களில் பின்வரும் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.  வே. மதிமாறன் இணையதளக்  கேள்விகள்: குற்றம் சாட்டப்பட்டவர்களை, குற்றவாளிகளை விசாரிப்பதுதான் காவல்துறையின் நடிவடிக்கை. ஆனால், விசாரனையற்ற தீர்ப்பாக இந்த … Continue reading

மேம்பாலம்

This gallery contains 1 photo.

இந்திய அரசு 5 மேம்பாலங்கள் கட்டுவதற்காக டெண்டர் விட்டிருந்தது. அதனடிப்படையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய விலைப்  பட்டியலோடு அரசை அணுகினார்கள்.  முதலாவதாக ஜப்பானை அழைத்தார்கள். உங்களுடைய விலைப் பட்டியலில் ஐம்பது  கோடி எனக் குறிப்பிடப்பட்டிருகிறதே, எதன் அடிப்படையில் என்று அரசு கேள்வி எழுப்பியது. ஜப்பான் சொன்னது, இதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் எங்கள் நாட்டைச் சேர்ந்தது என்றும், போக்குவரத்து செலவு மற்றும் எங்களுடைய லாபமாக 10 சதவீதமும் கணக்கில் கொண்டே 50  கோடி எனக் கோருகிறோம் என்றது. … Continue reading

கத்தரிக்காய் எள் மசாலா

This gallery contains 2 photos.

கத்தரிக்காய் எள்மசாலா சமைப்பது எப்படி என்பது பற்றியும், கத்தரிக்காய் குறித்த தகவல்களை  தெரிந்து கொள்ளும் பொருட்டு இது பிரசுரிக்கப்படுகிறது. தேவையான பொருட்கள் :  கத்தரிக்காய்   –  2௦௦ கிராம் ( 5 அல்லது 6 )  வெங்காயம் – 2  தக்காளி  – 1  மிளகாய் தூள் – 2   டீ ஸ்பூன்  மஞ்சள் தூள்     –  சிறிது  உப்பு – தேவையான அளவு வறுத்து பொடிக்க: வேர்கடலை – 2 டேபிள்ஸ்பூன் வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன் தாளிக்க : எண்ணெய் … Continue reading

நல்ல தலைவனை அடையாளம் காட்டாத ஊடகங்களும், அடையாளம் காணாத மக்களும்

This gallery contains 1 photo.

வாழ்ந்த தமிழகத் தலைவர்களான காமராஜர், ஜீவா,கக்கன் பெருமைகளை அறிந்த தமிழக மக்களுக்கு, இன்றும் அரசியலில் சிறந்த அரசியல்வாதி யாரேனும் உள்ளனரா என்றால், எந்த ஒரு தேடலும் இல்லாமல், உடனடியாக  யோக்கியமான அரசியல்வாதி யாரும்  இல்லை என்று பதில் அளிப்பார்கள். நல்ல மனிதனாக, எளிமையான மனிதனாக, விவசாயிகளின் நன்மைக்காகவே போராடிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல அரசியல்வாதியாக ,சிறந்த  தலைவராக தோழர் நல்லக் கண்ணு என் கண்களுக்குப் படுகிறார்.    நல்ல கண்ணு அவர்கள் 1929 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார். தன்னை … Continue reading

கோயில் கொடை

This gallery contains 2 photos.

                    கதிரவன் தன் கண்களை விழித்துக் கொள்ளும் நேரம்,  கதிரேசனின் கைபேசி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதிரேசன்  வேண்டா வெறுப்புடன் அழைப்பை ஏற்றான். கைபேசியில் அழைத்தது அக்காள் தெய்வநாயகிதான். தெய்வநாயகி கிராமத்து  நடுநிலை பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். கைபேசி அழைப்பை ஏற்ற தம்பியிடம், டேய் அப்பாவுக்கு ஒன்னை பார்க்கணுமாம்டா… ஒரு எட்டு செட்டிகுளத்துக்கு வந்துட்டு போப்பா  என்றாள். என்ன விஷயம் என்ற கதிரேசனிடம் அக்காள், அப்பாவுக்கு ஒடம்புக்கு முடியலடா.. ஒன்னை பார்த்து கோயில் விஷயமா … Continue reading

தமிழக மின்வெட்டும் மின் பற்றாக்குறையும்

This gallery contains 2 photos.

தமிழக  மின் பற்றாக்குறை: தமிழத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை அறிந்து கொள்ளும் முன், தமிழகம் இன்றளவில் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிவோம்.   கடந்த 53 ஆண்டுகளில் தமிழக நுகர்வோர் 4.3 இலட்சித்திலிருந்து இன்று 212 இலட்சமாக அதிகரித்துள்ளது. தலா ஒவ்வொருவரும் 21 அலகிலிருந்து ( Unit) 1080  அலகு வரை உபயோகிக்கிறார்கள்.  1990 -91 களில் 3000 MW ஆக இருந்த  மின்தேவை இன்று 11000 MW ஆக உயர்ந்துள்ளது. இதை அறிவித்துள்ளவர்  திரு முருகன், மேலாண்மை இயக்குனர் (TANTRANSCO). மின்  பற்றாக்குறை  கிட்டத்திட்ட மூன்று … Continue reading

விரல்களும் உள்ளங்கைகளும்

This gallery contains 1 photo.

நான் மென் பொருள் பற்றிய குறுகிய கால பயிற்சி எடுத்த போது, ஒரு பெண் என்னிடம் பேசலானாள்.  அவள் பேசும் போது, அவள் சொற்களைக் காட்டிலும் விரல்கள் அதிகம் பேசின. பேசியவள் சென்று விட்டாள்.  அதுநாள் வரை விரல்கள் பற்றிய எந்த எண்ணமும் இல்லாதவனாகவே இருந்தேன். நீளமான விரல்கள். நகங்கள், கழுகின் அலகு போன்ற கூர்மை. இளஞ் சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தன. எவ்வளவு வெண்மை. எவ்வளவு அழகு.   குழந்தையின் விரலும் பெண்ணின் விரலும் கடிப்பதற்கு அதிகம் தூண்டும். விரல்களில் கண்ணுக்கு தெரியாத … Continue reading