இலட்சியம்

இலட்சியம் என்பது ஒரு குறிக்கோளை அடைவது  என்று சொல்கிறார்கள்.ஒவ்வொரு மனிதனும் குறிக்கோள்  வைத்து கொண்டு அதை நோக்கிய பயணத்தில் எப்படி அதை அடைகிறான் என்பதையே இலட்சியம் என்று வைத்துகொள்வோம்.  அதற்கு ஒரு வயது அல்லது பக்குவம் தேவைப்படுகிறது. அப்படியானால் பிளஸ் டூ படிக்கிற ஒரு மாணவனுக்கு பக்குவம் வந்துவிட்டதா என்ற கேள்வி எழும். அப்படி பார்க்கையில் பக்குவம் முழுமையாக இல்லை என்றே கருதுகிறேன். ஆனால் அவனுடைய ஆசைப்படி எதையோ ஒன்றை படிக்க ஆசைப்படுகிறான். அது பெரும்பாலும் தன்னை சுற்றி உள்ளவர்கள் என்ன படிக்கிறார்களோ அதையோ அல்லது பெரும்பாலும் எல்லோரும் நினைக்கிற மருத்துவ படிப்பையோ அல்லது பொறியியல் படிப்பையோ படிக்க  விரும்புகிறான். ஆகையால் முதலில் அவனுடைய படிப்பை, தேர்வு செய்கிற ஒரு இடத்தில் முழுமையான எந்த இலட்சியமும் இல்லை என்று தான் தோன்றுகிறது. பள்ளி வாழ்க்கையிலிருந்து ஒருவன் வாழ்நாளை    தீர்மானிக்கக் கூடிய  கல்வியை  முழுமையான இலட்சியப்பார்வையோடு  மேற்படிப்பை தேர்ந்தெடுப்பதாக  எனக்கு தெரியவில்லை. நிச்சயம் படிப்பு மட்டுமே ஒருவனது இலட்சியத்தை தரும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சராசரி மனிதர்களுக்கு அதுதான் முக்கியமாக இருக்கிறது.ஆதலால் என்னை பொறுத்தவரையில் ஆசைகளும் கனவுகளும் எண்ணங்களும் ஈடேற்கிற ஒவ்வொரு விசயத்தையும் தான் இலட்சியம் என்று நினைக்கிறன். ஏனெனில் நான் எலெக்ட்ரிகல் அண்ட் ஏலேக்ட்ரோநிக்ஸ் படிப்பை தேர்வு செய்த பொழுது, என் அண்ணன் படித்த படிப்பையே நானும் படிப்பேன் என்று சொன்னேன். படித்து முடித்த பிறகு, எல்லா கிராமத்து மாணவர்களை போல நகரம் நோக்கி ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன். கிராமத்தில் நான் இருந்தபொழுது என்னுடைய சில கனவுகளில் மிக முக்கியமானவைகளாக விமானத்தில் பறப்பது, நிறைய ஊர்களை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை, நைட் கிளப் எப்படி இயங்குகிறது என பார்க்க வேண்டும் என்றுதான் இருந்தது. சென்னை மாநகரத்தில் வந்த பிறகுதான், இப்படி ஒரு பரபரப்பான நகரத்தில் இருப்பது ஆரம்ப காலக்கட்டத்தில் சந்தோஷமாக இருந்தது. வேலைக்கு அம்பத்தூர், பெருங்குடி, கிண்டி மற்றும்  இன்னபிற இடங்களுக்கு அலைந்தது நினைவில் என்றும் நீங்கா வண்ணம் இருக்கிறது. முன்னேறிய நடிகர்கள், இயக்குனர்கள் என எல்லோரும் தாங்கள் கஷ்டப்பட்ட  கதைகளை இலட்சியத்தை அடைந்த  பொழுதுதான் theriவிக்கிறார்கள். சில காலங்களுக்கு ஒரு சின்ன கம்பெனியில் டிசைன் என்ஜினீயர் ஆக பணியாற்றினேன். பிறகு சிறிது காலம் மென்பொருள் பற்றிய கல்வி படித்தேன். வேலை கிடைக்கததால் மீண்டும் எலெக்ட்ரிகல் வேலை தேடினேன். என்னுடைய அண்ணன் ஒரு வேலை இருக்கிறது, ஆனால் அது மிக்க கடினம். வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு செல்ல வேண்டும். சாப்ட்வேர் என்ஜினீயர் போல் நிறைய பைசா பார்க்கலாம் என்றார். எனக்கு வேலை எப்படி இருக்கும் என்பதை காட்டிலும், ஐயா எல்லா இடங்களையும் பார்க்கலாம் என்று எண்ணினேன். அந்த வேலையின் பெயர்  டெஸ்டிங் அண்ட் கமிஷன்னிங். அண்ணனின் தயவால், வேலையில் சேர்ந்தேன். எடுத்த உடனேயே பஞ்சாப் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அன்று என்னுடைய முதல் கனவு நிறைவேறியது. இரண்டு பிளஸ் அரை வருடம் கழித்து, சவுதி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.மெல்ல என்னுடைய இரண்டாவது  கனவு, ஆசை நிறைவேறியது. ஆனால் நைட் கிளப் எப்படி இருக்கும் என்ற என்னுடைய ஆசை மட்டும் அப்படியே இருந்தது. இந்தியாவில் சென்று பார்க்கலாம் என்றால் மனம் இடம் கொடுக்க வில்லை. காரணம் நான் நல்லவன் என்பதால் அல்ல. காசு இந்தியாவில் அதிகம் தர வேண்டி இருக்கும் என்பதால் எங்கும் செல்ல வில்லை. மேலும் சற்று கூச்சமாக இருந்தது என்றுதான்  சொல்வேன். சவூதிக்கு பின்னர், அதே கம்பெனி மூலம் துபாய் செல்லும் வாய்ப்பு  கிடைத்தது. அங்கு என்னுடைய நைட் கிளப் பார்க்கும்  எண்ணம் நிறைவேறியது. இன்னும் ஐரோப்பிய நாடுகள் செல்ல வேண்டும் என்ற என்னுடைய ஆசைகூட நிறைவேறியது. என்னுடைய சிற்றின்பங்களாகவே மேற் கொண்டவற்றை பார்க்கிறேன். என்னுள்ளும் சில இலட்சியம் இருந்தது. நான் படிக்கும் போது, ஒருசில கஷ்டப்பட்ட மாணவர்களை பார்த்திருக்கிறேன். நான் டெஸ்டிங் பீல்டுக்கு வந்த பிறகு, கிராமத்தில் ஒரு நல்ல படிக்கும் மாணவனை ஆசிரியர் பயிற்சி தொடுத்து, மாஸ்டர் டிகிரி வரை படிக்க வைத்த பொழுது மிக்க சந்தோசம் அடைந்தேன்.   ரத்த தானம் மற்றும் கிராமத்துக்கு இலவச கண் சிகிச்சை ஏற்பாடு செய்து நடத்திய பொழுது என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இவையெல்லாம் திட்டமிட்டு நான் செய்யவில்லை. ஆனால் அதற்கான நிலையில் நான் இருந்த  போதோ அல்லது அதை நோக்கிய என்னுடைய ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றிய  தருணத்தையே இலட்சியம் என்று கருதுகிறேன்.   உங்களுடைய ஆசை, கனவு, எண்ணம் நிறைவேறினால் அது இலட்சியம். நாம் நினைத்த எல்லாவற்றையும் அடைந்தோமா என்று நமக்கு தெரிய வில்லை. நான் இப்படித்தான் ஆவேன் என்பதை யாரும் முன்கூட்டி தீர்மானிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் உங்களுடைய பயணம் அது நோக்கிய படிக்கல்லாக இருந்தாலே உங்களுடைய இலட்சியத்தை நிச்சயம் ஒருநாள் அடையலாம். இதுதான் என்னுடைய வாழ்நாள் இலட்சியம் என்று கட்டம் போட்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இலட்சியம் மற்றும் கொள்கை பிடிப்பு உள்ளவர்களால் அதிகம் இன்னலுக்குல்லாவதும் துன்பப்படுவதும் அவர்களும், அவர்களைக் காட்டிலும் அவர்கள் குடும்பமும்தான். அடையாத இலட்சியம் ஏளனத்துக்கு உள்ளாகிறது என்பதை காட்டிலும் குடும்பம் சிதைகிறது என்ற வலி வாட்டுகிறது. அடைந்த இலட்சியமும் உறுதியான கொள்கையும் வாழ்ந்த பின்னும் போற்றப்படும்  . ஆனால் இலட்சியத்தை அடையாதவரை அது ஏளனமாகவே பார்க்கப்படுகிறது.  இலட்சியம் ஒரு கொள்கையாக பார்ப்பவனுக்கு அது ஒரு போராட்டம்.  எண்ணம், கனவு, ஆசை நிறைவேறுகிற விஷயங்களாக பார்ப்பவர்களுக்கு அது ஒரு வரப் பிரசாதமாகவே பார்க்கிறேன். நீங்கள்  எப்படிப்பட்ட இலட்சியத்தை வைக்கவிரும்புகிறிர்கள் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

5 responses

  1. மரணம் மெய் என்பது எவ்வளவு உண்மையோ வாழ்வு பொய் என்பது அவ்வளவு பெரிய பொய்யே .வாழ்கையீன் ஒவ்வொரு நிமிடமும் உண்மையானது .அந்த நிமிடங்கள் இலட்சியங்களால் போற்ற படுகின்றன .காலம் இறந்து விடுகிறது ஆனால் மனிதனின் செயல்கள் வாழ்துகொண்டுதான் இருக்கிறது .
    நமது இலச்சியம் என்று கூறுவது மருத்துவராவது , engineer ஆவது மற்றும் பல .இவை அனைத்தும் நாம் தேர்வு செய்த துறைகள் .
    இந்த துறையில் வாழ நினைப்பது நமது விருப்பம் ஆனால் இந்த துறையை வாழ வைப்பது சிலரின் இலட்சியம் .அவர்கள் தான் நாம் உரையாடும போது
    scientist என்று கூறுகிறோம் .அவர்கள் தான் இறந்தும் நம்முடன் வாழ்துகொண்டுதான் இருக்கிறார்கள் . சிலரால் மட்டும் தான் அது முடியும் இல்லையென்றால் இலச்சியம் எது? விருப்பம் எது ? என்று சுத்த வேண்டியதுதான் என்னையும் சேர்த்துதான் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s