நீயா நானாவில் எனது பார்வை

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நீயா நானாவில் கிராமத்து மற்றும் சிறு நகரத்து இளைஞர்கள்
ஏன் மாநகரத்து பெண்களை திருமணம் செய்ய விரும்பவில்லை என்ற ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.
ஒவ்வொரு விஷயமாக கோபிநாத் நிகழ்ச்சியை எடுத்து சென்றார். ஒரு இடத்தில், எனக்கு
கிராமத்து மற்றும் சிறு நகரத்து இளைஞர்கள்,  மாநகரத்து பெண்களை திருமணம் செய்யாமல்
இருப்பதற்கு பின்னால் இருக்கும் உளவியல் காரணத்தை அறிய விரும்புவதாக சொன்னார்.
அப்பொழுது ஒரு இளைஞர், நகரத்து பெண்கள்  ஆண்களுடன் தியேட்டர் மற்றும் பைக்கில்
செல்வதாக தெரிவித்தார். உடனே கோபிநாத், அந்த இளைஞரிடம் நீங்கள் சொல்வதை ஏற்று
கொள்ள முடியாது. இது மாநகரத்து பெண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. அதனால்
அதை ஏற்றுகொள்ள முடியாது என்றார். உடனே ஒவ்வொரு பெண்ணாக கொதித்து எழுந்தார்கள்.
இங்குதான் எனக்கு  மாற்றுகருத்து உள்ளது. உளவியல் காரணத்தை அறிய விரும்புவதாக
சொன்ன கோபிநாத், அதை சபை நாகரிகம் மற்றும் பெண்ணை தவறாக கொச்சைபடுத்துவதாக!
 சொல்லி  ஆட்சேபித்தார்.  சிறு நகரத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆணால், பைக்கிலோ அல்லது தியேட்டருக்கோ அழைத்து செல்வது என்பது கடினம். ஆனால் மாநகரத்தில் வீட்டிற்கு தெரிய வராது என்பதால் சுதந்திரமாக இருக்கிறார்கள். இப்படி செல்கிற  மாநகர பெண்கள் மீது தனக்கு ஏற்பட்ட ஐயத்தைதான் அந்த இளைஞர்
சொல்கிறார். சில பெண்கள் சுதந்திரம் அல்லது வீட்டிற்கு தெரியாது என்று நினைத்து கொண்டு
 தைரியமாக செல்வதால் அல்லது தவறான பாதையில் செல்வதாக அந்த இளைஞர் கருதுகிறார்.
 அவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற எண்ணம் அந்த இளைஞர் மனதில் ஆழ பதிந்துள்ளது.
 எத்தனை பெண்கள் அவ்வாறு செல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. உளவியல் ரீதியில் பார்த்தால், என்ன தவறு என்று  எனக்கு புரியவில்லை. ஒரு நிகழ்ச்சியை நடத்தும் போது உண்மையான உளவியல்
  காரணத்தைஅறிய முற்படுவாரேயானால், கோபிநாத் அதை ஆட்சேபப்பிதில் எனக்கு உடன்பாடில்லை.
மேலும் பெரும்பாலான பெண்கள் தங்களின் பேச்சில், கிராமத்து மற்றும் சிறு நகரத்து இளைஞர்கள் கிராமத்து
 பெண்களை திருமணம் செய்வதற்கு  காரணம், கிராமத்து பெண்கள் அடங்கிப்போவார்கள், உள்ளேயே புழுங்கி
தவிப்பார்கள் என்று மாநகரத்து பெண்களின் கருத்துக்கு எந்த ஆட்சேபனையையும் கோபிநாத் தெரிவிக்காததுதான்
 ஆச்சர்யம். எனக்கு என்னவோ அந்த நிகழ்ச்சி பெண்மை புரட்சி ஏற்படுத்தவே நடத்தப்பட்டதோ என்று நினைக்கிறேன். நீயா நானாவில், ஏன் மாநகரத்து பெண்கள், சிறு நகரத்து அல்லது கிராமத்து இளைஞர்களை திருமணம் செய்ய விரும்பவில்லை என்று  தலைப்பை வைப்பார்களா என  தெரியவில்லை.மேலும் நிகழ்ச்சிக்கு வந்த நடுவர்கள் யாரும், கிராமத்து
இளைஞர்களின் பார்வையில் இருந்து பார்க்க முற்படாதவர்களாகவும், தங்களை பெண்மை புரட்சிக்கான
அடையாலவாதிகளாகவே காண்பிக்க முற்பட்டார்கள். ஆங்காங்கு நகரத்து பெண்களுக்கு அறிவுரை வழங்கி
கொண்டிருந்தார்கள். ஒரு சபையில் ஆண் வைக்கும் வாதத்திற்கு கோபிநாத் கண்டனம் செய்தால், பெண் வாதத்தையும் கண்டனம் செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.

4 responses

 1. நீங்கள் சொல்வதில் எனக்கு சற்றுதான் உடன்பாடு உள்ளது . ஏனென்றால் அந்த நீயா நானா வில் அந்த நபர் பேசிய விதம் சற்று முகம் சுளிக்க வைப்பதாகவே இருந்தது . அந்த நீயா நானாவில் எந்த பெண்களும் ஒரு ஆண் பொது இடத்தில செய்கிற விதத்தை யாருமே கூறவில்லை .அனைத்து ஆண்களின் பார்வை பெண்களை சந்தேக படுதாகவே இருந்தது வருத்தமளித்தது .ஆனால் கிராமத்தில் பெண்ணை வண்டியில் அழைத்து செல்ல முடியாது என்பது ஏற்று கொள்வதாக இல்லை .நகரத்தை ஒப்பிடும் பொது கிராமத்தில் தான் இந்த மாதிரி அதிகமான பிரச்சனைகள் உள்ளது .நகரத்தில் கல்யாணத்துக்கு முன்பு அனால் கிராமத்தில் கல்யாணத்துக்கு பின்பு நிறைய உள்ளது.ஆண்களும் தான் தவறு செய்கிறார்கள் .ஆனால் நகரத்து பெண்கள் ஊரு சுத்துறாங்க அது பண்ணுறாங்க இது பண்ணுறாங்க என்று சொல்வது தவறு என்று ஒத்து கொண்டுதான் ஆக வேண்டும் .நான் கோபிநாத் சொல்வது சரி என்றுதான் என்னுடைய பிரைன் சொல்லுகிறது . கோபிநாத் மிக தெளிவாக ஒரு கேள்வி ஒன்றை வைத்தார் .உங்களுடைய சகோதிரிக்கு என்ன என்ன ப்ரீடம் தருவீங்க ?எல்லா ஆண்களின் பதில் சுயநலமாகத்தான் இருந்தது.அவர்களுடை பதில் இருந்து கோபிநாத் சொன்னது உங்களுடைய தங்கைகளுக்கு திருமணம் நடக்காது.ஆண்களை பொதுவான குணம் சுயநலம் அதிகம் பெண்களை ஒப்பிடும்போது.தான் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் அனால் வருகின்ற மனைவி யோக்கியம இருக்கனும் . பெண்களை பொறுத்துதான் ஒரு நல்ல சமுகம் உருவாகும் என்று சாலினி கூறியது மிகவும் உண்மை.

 2. thambi rajkumar
  அந்த நபர் பேசிய விதம் சற்று முகம் சுளிக்க வைப்பதாகவே இருந்தது .—-
  nanba
  dont look that guy face his way of telling looking like a rude but he told the correct one for some city girls or boys misuse this chance of bike riding. In this riding the girl is very very good girl but but that biking guy …..? in case that biking guy very good person but that girl…? in india ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்வது போல் ஒருத்திக்கு ஒருவன் என்றும் சொல்லவேண்டும் இல்லை என்றால்
  பெண்கள்ளில் யாரும் கண்ணகி இல்லை என்று சொல்லும் நிலை தோன்றும்.இந்த உணர்வு தான் நல்ல சமுதாயத்தை உருவாக்கும்

  பெண்கள் சுதந்திரம் என்பது ஆணுடன் போட்டி போடுவதுஅல்ல.

 3. “நீயா நானாவில், ஏன் மாநகரத்து பெண்கள், சிறு நகரத்து அல்லது கிராமத்து இளைஞர்களை திருமணம் செய்ய விரும்பவில்லை என்று தலைப்பை வைப்பார்களா என தெரியவில்லை”

  அந்த நிகழ்ச்சியிலேயே கோபிநாத் கேட்டதாகவே நினைவு. எத்தனை பெண்கள் கிராமத்து பையன்களை மணந்துகொள்வார்கள் என்று.

  • நான் எதற்காக அத்தலைப்பில் விவாதிக்க வேண்டும் என்று கோரினேன் என்றால், மாநகரப் பெண்கள் எம்மாதிரியான உளவியல் அடிப்படையில் கிராமத்து மாணவர்களை நிராகரிக்க முற்படுகிறார்கள் என்பதும், ஆனால் நிச்சயமாக நிகழ்ச்சியை கோபிநாத் அவர்கள் எடுத்துச் செல்வதில் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதற்காகத்தான் இது போன்ற தலைப்பில் விவாதிப்பார்களா என்று கேள்வி எழுப்பினேன். மற்றபடி, நீயா நானா நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கும் நேயர்களில் நானும் ஒருவனே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s