தமிழ் புத்தாண்டு

சித்திரைத்திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டா, தைத்திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டா என்ற தலைப்பில் நான் எழுத விரும்பியதற்கு காரணம்,  எல்லா இளைஞர்களும் தமிழக அரசுகள் புத்தாண்டு தினத்தை மாற்றி மாற்றி  அறிவித்த பொழுது மிகுந்த விவாதத்தில் ஈடுபட்டிருப்பார்கள். மேலும் இந்த தலைப்பை
அதிகமுறை விவாதப்பொருளுக்கு எடுத்திருப்பார்கள் என்று நம்புவதுதான்.
இந்த கட்டுரையின் நோக்கம் நான் பல்வேறு இணைய தளங்களிலிருந்து படித்த பல்வேறு விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவதும் மற்றும் அது குறித்த என்னுடைய எண்ணங்களையும் பகிர்கிறேன்.

தைத்திங்கள் முதல்நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிப்பதுதான், தமிழ் சான்றோர்
கூடிய மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டதாக தில்லைக்குமார் தன்னுடைய கட்டுரையில்
இவ்வாறாக குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவர் கிமு 31-ம் ஆண்டில் பிறந்ததாகவும் (கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகளுக்கு முன்),
60 ஆண்டு சுழற்சி முறையிலான ஆண்டு முறை தமிழருக்கு ஏற்புடையதன்று என்பதால்
தொடர்ச்சியான ஓர் ஆண்டு முறை வேண்டும் என்றும் பல தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி
முடிவெடுத்ததாகவும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

அவர்கள் எடுத்த முடிவுகள்திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042)  என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி. ஆகையால் தமிழ் புத்தாண்டை தை முதல் நாள் என கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

மேலும் தில்லைகுமார் தனது கட்டுரையில், தை முதல் நாளை கொண்டாடுவதில் உள்ள முரண்பாடான ஆராய்ச்சிகளையும் பின்வருமாறு விவரிக்கிறார்.
திருவள்ளுவரின் காலத்தை கி.மு.31 என்று கணித்ததில்தான் குழப்பம் வருகிறது. திருவள்ளுவர் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்ததற்கு வாய்ப்பில்லை என்று மேலை நாட்டுத் தமிழறிஞர்கள் நிலை நாட்டுகிறார்கள். அதில் முக்கியமானவர் செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களாவார். இவர் மொழியின் அடிப்படையில் தமிழ் நூல்களின் காலத்தை ஆய்ந்து திருக்குறள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற நூலில் நிறுவியுள்ளார். அவர் ஏன் அப்படி கூறுகிறார் என்பதை விரிவாகப் பார்ப்போம். தமிழர்களின் புனித நூலான திருக்குறளின் காலத்தைக் கணிப்பது மிகக்கடினமானதும், சர்ச்சைக்குரியதுமாகும். குறள் சங்கக் காலத்தைச் சேர்ந்தது இல்லை என்பது தமிழாய்ந்த அறிஞர்கள் முடிபு. குறளின் மொழி, முந்தைய நூல்களின் மேற்கோள் காட்டல், வட மொழிச் சொற்களின் பயன்பாடு, சமண மதத்தின் தாக்கம் ஆகியவைகளை வைத்துப் பார்க்கையில் திருக்குறள் சங்கக்காலத்திற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று உணரலாம். திருக்குறளின் மொழியையும் இலக்கணத்தையும் பார்க்கையில் அந்நாளில் மொழி வளர்ந்த நிலையை அடைந்திருக்கும் நிலையை அறியலாம். அதனால் அந்நூல் கி.பி.400-கி.பி.500 ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெளியலாம். குறள், திரு. சோமசுந்தர பாரதியார் (திருவள்ளுவர்), திரு இராசமாணிக்கனார் (தமிழ் மொழி வரலாறு) போன்றோர் கூறுவது போல் திருக்குறள் காலம் கி.மு.30-ம் அல்ல. திரு. வையாபுரிப் பிள்ளை (இலக்கிய மணி மாலை) கூறுவது போல் கி.பி.6-ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியதும் அல்ல.
மேலும் திருக்குறளில் சங்க இலக்கியங்களைக் காட்டிலும் அதிகமான வடமொழிச் சொற்களை காணலாம். சுவலபில் அவர்கள் திருக்குறளில்102 சொற்கள் வட மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அமரர் (121), அமிழ்தம் (11), ஆகுலம் (34), ஆசாரம் (1075), ஆதி (1), ஏமம் (306), கனம் (29), காமன் (1197), சிவிகை (37), தேவர் (1073) போன்ற பல வட மொழிச் சொற்கள் திருக்குறளிலுள்ளன என்கிறார்.
கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் பத்ரிநாத் தைத்திங்கள் முதல் நாளுக்கு எதிராக சில கேள்விகளை முன் வைக்கிறார். அவர் தன்னுடைய எழுத்துக்களில் இவ்வாறாக அணுகுகிறார். தை முதல் நாள்தான் ஆண்டின் முதல் நாளாக இருக்கவேண்டும்; ஏனெனில் அது solstice-க்கு அருகில் உள்ள நாள் என்பது அறிஞர் கூற்று. சோல்ஸ்டைஸ் என்பது கதிரவன் கடக அல்லது மகரக் கோட்டுக்கு நேர் மேலே வந்துவிட்டு திசைமாறிச் செல்லும் நாள். அது 22 டிசம்பர் 2011-ல் நடந்தது.

நம் வாழ்நாளில் இது ஜூன் 20-21; டிசம்பர் 21-22 ஆகிய தினங்களில்தான் திரும்பத் திரும்ப நடந்துகொண்டிருக்கப்போகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என்று பார்த்தால், பூமியின் அச்சு கொண்டுள்ள கோணம் மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றத்துக்கு ஏற்ப சோல்ஸ்டைஸ் மாறிக்கொண்டே இருக்கும். பழந்தமிழர் எத்தனை ஆண்டுகளுக்குமுன் என்ன காரணம் கொண்டு சோல்ஸ்டைஸை ஆண்டின் முதல் நாளாகத் தீர்மானித்தார்கள் என்பதற்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் தெளிவாக இல்லை. அதுவும் இன்று சோல்ஸ்டைஸிலிருந்து கிட்டத்தட்ட 25 நாள்கள் தள்ளிப்போயிருக்கும் நிலையில் அதன் காரணமாகத்தான் தை முதல் நாள் என்பது ஆண்டின் முதல் நாள் என்று ஒருவர் அழுத்திச் சொல்வது அறிவியலுக்கு உகந்ததாக இல்லை. சோல்ஸ்டைஸுக்கு நெருக்கமானது என்றால், மார்கழி 1-ம் தேதியை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?
சித்திரைத்திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக இருப்பதற்கு காரணங்களாக சில கட்டுரைகளை ஆய்வு செய்த பொழுது, விக்கி பிடியாவின் தகவல்களையும் இன்னும் மற்ற பிற தகவல்களையும் தர விரும்புகிறேன்.  விக்கி பிடியாவில்,

 
தமிழ் காலண்டர் தமிழ்நாடு பயன்படுத்தப்படும் ஒரு சூரிய மற்றும் விண்மீன் இந்து மதம் நாள்காட்டி ஆகும்.
தமிழ் புத்தாண்டையொட்டி nirayanam தட்சிணாயணத்தை கொண்டு பார்க்கும் போது, பொதுவாக கிரிகோரியன் ஆண்டின் 13 அல்லது 14 ஏப்ரல் அன்று சூரியன் விழுகிறது. 13 அல்லது 14 ஏப்ரல் பாரம்பரிய தமிழ் நாட்காட்டியில் சித்திரை 1 ஆக வருகிறது. வெப்பமண்டல தட்சிணாயணம் சுற்று வீழ்ச்சி, மற்றும்  நடுக்கம் அல்லது  23 டிகிரி angle  சேர்த்து, மார்ச் 22 , அன்று  இந்து மதத்தில் Nirayana Mesha சங்கராந்தி கிடைக்கிறது.  60 ஆண்டு சுழற்சி மிகவும் பழமையான  இந்தியா மற்றும் சீனாவின் மிக பாரம்பரிய நாள்காட்டி மூலம் அறியப்படுகிறது,  மக்கள் நம்பிக்கை, அல்லது சூரிய சித்தாந்த கோட்பாட்டின் அடிப்படையில் ஏப்ரல்  13 அல்லது 14 அன்று மேஷம்/சித்திரை வருவதால் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் புதிய ஆண்டு குறித்து  தமிழ் இலக்கியத்தில் பல குறிப்புகள் உள்ளன. நக்கீரர், நெடுநல்வாடை ஆசிரியர் சூரியன் மேஷம்/சித்திரையில் தொடங்கி  அடுத்தடுத்த 11 ராசிகளுக்கும் பயணப்படுவதாக   3 வது நூற்றாண்டில் எழுதிஉள்ளார். 3 வது நூற்றாண்டில் கூடலூர் கிழார்   மேஷ  ராசி / சித்திரை தான் ஆண்டின் ஆரம்ப நாள் என்று புறநாநூருவில் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியம் போன்ற நாள்களில் இருந்தும் சித்திரை அதாவது மேஷ வீட்டில் இருந்து தொடங்குவதால், அதன் அடிப்படையில் தமிழர்கள் சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதாக குறிப்பிடுகிறார்கள்.
 
இது போன்று இன்னும் பல ஆதாரங்களை இரு தரப்பிலும் வைக்கிறார்கள்.
 
என்னுடைய கருத்து:  தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. ஏனெனில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி  எழுதி இருப்பவர்கள் பெரும்பாலும் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்களாகவும் பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை
பின்பற்றுவர்களாகவும் இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் தமிழ் அறிஞர் மாநாட்டை கையாள்கிறார்கள். இல்லையேல் பெரும் சமூகமான இந்து மத மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் தமிழ் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் இன்றும் கூட இந்து மக்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது என் அபிப்ராயம்.  இரண்டாவதாக 2011 +31 என்று ஆங்கில வருடத்தில் இருந்து கூட்டி சொல்ல சொல்கிறார்கள். ஆனால்  திருவள்ளுவர் பிறந்த நாளை பள்ளியில் படிக்கும் காலம் கொண்டு இதுவரை எங்கும் நான் இதுதான் அவர் பிறந்த நாள் என்று படிக்கவில்லை. அதை காட்டிலும் எல்லா தமிழ் அறிஞர்களுக்கும் அவர் வாழ்ந்த காலம் எது என்பதில்
கருத்து மாறுபாடு கொண்டிருப்பதால் தான் என்னால் தைத்திங்கள் முதல்நாளை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனக்கும், என் அப்பா, அப்பாவிற்கு அப்பா என்று நாங்கள் இந்து மத கோட்பாட்டின் அடிப்படையில் சித்திரை திங்கள் முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்றால் ஏன் சித்திரையை தேர்ந்தேடுக்ககூடாது.  தைத்திங்கள் முதல் நாள் தமிழர் திருநாள் என்று சொல்கிறோம். ஆனால் பொங்கல் என்ற பெயரில் இந்துக்கள் மட்டுமே கொண்டாடி வருகிறார்கள். இதுகூட  பகுத்தறிவு பாதையில் இந்து மத மூடநம்பிக்கையை மட்டும் தைரியமாக பேசும் பகுத்தறிவுவாதிகளும் அரசியல்வாதிகளும்தான்  இன்னொரு அரசியல் சண்டையையும் மக்களிடம் குழப்பத்தையும் ஏற்படுத்த முயற்சிப்பதாக பார்க்கிறேன்.  உங்களின் பார்வையில் எது சரி என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். என்னுடைய கருத்துக்கு மாற்று கருத்து உள்ளவர்கள் நிச்சயமாக தெரிவிக்கலாம்.

3 responses

 1. தமிழ்ப் புத்தாண்டு என்று கூறினாலும், இதனைக் கொண்டாடுவது ஹிந்துக்கள் மட்டும்தான்.
  எனவே, பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டுவரும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின்
  தொடக்கமாகும்.

 2. தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.

  எல்லா ஆண்டுகளின் பெயர்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன .
  ஆகவே சம்ஸ்கிருத புத்தாண்டு என்று கொண்டாடிவிட்டு போங்களேன். உங்களை யார் தடுக்கப்போகிறார்கள்?

  தமிழ் புத்தாண்டு என்று தயவு செய்து சொல்லாதீர்கள் .அது தை முதல் நாளாகவே இருந்துவிட்டு போகட்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s