அங்கீகாரம்

மகேஸ்வரிக்கு கதைப்புத்தகம் படிப்பது என்றால் அவ்வளவு  அலாதி. அதிலும் வாரம் தவறாமல் வரும் குமுதத்தின் ஒரு பக்கக்  கதையை, ஒவ்வொரு வாரமும் தவறாமல் வாசிப்பாள். குமுதத்தின் ஒரு பக்கக் கதை, இரட்டை அர்த்தத்திலோ, மிக சீரியசாகவோ ஆரம்பித்து, முடிவு சப்பையாக முடியும் என்று தெரிந்தும், எழுத்தின் சுவாராஷ்யமும்  அக்கதையின் முடிவு இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்ற  கதைக்கான கிளைமாக்ஸ் குறித்து எல்லாருக்கும் வருகிற கற்பனைதான், அவளுக்கும்  ஒரு பக்கக் கதையை வாசிக்கும் ஆவலை தூண்டியது. அம்மா திட்டுவதைப்பற்றியோ, அண்ணன் மக்கு ஈஸ்வரி என்று சொல்வதைப்பற்றியோ  பொருட்படுத்தாமல் கதை வாசிப்பதில் மூழ்கி விடுவாள். அன்று சனிக்கிழமை. வழக்கம் போல், குமுதத்தில் வந்த ஒரு பக்கக்கதையை படித்துக்கொண்டிருந்தவள், அண்ணன் ரிஷியை கூப்பிட்டாள். அண்ணே, நீயும் கதை எழுதுறேன்.. கதை எழுதுறேன்னு சொல்றே.. முதல்ல இந்த கதையைப்படி. பிறகு நல்ல கதையா எழுது என்றவள், அம்மா கூப்பிட சமையலறைக்குள் சென்று விட்டாள். ரிஷியும் அந்த பக்கத்தில் உள்ள கதையை படிக்கலானான். தான்   புனைப்பெயரில் எழுதிய கதை குமுதத்தில் வந்தது கண்டு  அளவில்லா  மகிழ்ச்சி அடைந்தான். அதுவும் தான் முதன்முதலாக ஒரு வார இதழுக்கு அனுப்பிய கதை வெளிவந்தது அவனுக்கு மகிழ்ச்சியோடு ஆச்சர்யத்தையும் தன்னம்பிக்கையையும்  தந்தது. ச்சே .. எத்தனைக் கதைகளை இதுவரை எழுதி இதே தங்கையிடமும், நண்பர்களிடமும் காண்பித்திருப்பேன். எல்லோரும், டேய்.. நீ எழுதி இருக்கிற இந்தக்கதை , அந்த படக்கதை தானே என்றோ அல்லது இத எங்கயோ படிச்சா மாதிரி இருக்கே என்றோ,  தன்னுடைய கதையை கிண்டல் அடித்தது  நினைவுக்கு வந்தது.  ரிஷி  பழைய டைரியிலும், பரணிலும்  தூக்கிப்போட்ட கதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பும் பணியில் ஆயத்தமானான்.  அண்ணனின்  கதைக்கு அங்கீகாரம் கிடைத்ததை  அறிந்த போது, மகேஸ்வரியின்  கண்கள் குளமாகின. அது வேதனைக் கண்ணீர்  மட்டுமல்ல.. ஆனந்தக் கண்ணீரும் கூட.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s