தமிழக மின்வெட்டும் மின் பற்றாக்குறையும்

தமிழக  மின் பற்றாக்குறை:

தமிழத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை அறிந்து கொள்ளும் முன், தமிழகம் இன்றளவில் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிவோம்.

 

கடந்த 53 ஆண்டுகளில் தமிழக நுகர்வோர் 4.3 இலட்சித்திலிருந்து இன்று 212 இலட்சமாக அதிகரித்துள்ளது. தலா ஒவ்வொருவரும் 21 அலகிலிருந்து ( Unit) 1080  அலகு வரை உபயோகிக்கிறார்கள்.  1990 -91 களில் 3000 MW ஆக இருந்த  மின்தேவை இன்று 11000 MW ஆக உயர்ந்துள்ளது. இதை அறிவித்துள்ளவர்  திரு முருகன், மேலாண்மை இயக்குனர் (TANTRANSCO). மின்  பற்றாக்குறை  கிட்டத்திட்ட மூன்று மடங்காக ஆகியுள்ளது.

இதற்கு காரணம், அதிக அளவு நுகர்வோர் மற்றும் நிறைய தொழிற்சாலைகளின் வரவுகளாகும். ஆனால், அரசுகளும் மின்வாரியமும் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பதே என்னுடைய கேள்வி. இதற்கு அரசுகளே முக்கிய பொறுப்பு ஏற்க  வேண்டும் என்ற திரு அழகேச பாண்டியன் அவர்களின் கருத்தை ஒத்துக் கொள்ள வேண்டிஉள்ளது. அரசு குறிப்பில்,மின் வாரியத்தின் மூலம் அரசுக்கு 53000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தியும் அரசுகளின்  நடவடிக்கையும் :

 இந்தியாவில் மின்சாரத்  துறை  ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு,  மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை தெற்கு, கிழக்கு, மேற்கு,வட கிழக்கு,வடக்கு ஆகியன.இதில் தெற்கு மண்டலத்தில் மட்டும், 46150 MW உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தி 170219  MW.
தமிழகத்தில் 5677 MW  மின்உற்பத்தியானது நீராதாரம்,நிலக்கரி மற்றும் வாயு மூலம் பெறப்படுகிறது. மத்திய மின் உற்பத்தியின் பங்கு தமிழ்நாட்டில் 2861 MW ஆகும். தனியார் மூலம் 1180 MW மின் உற்பத்தி ஆகிறது. மின் பற்றாக்குறை, உற்பத்தியைக் காட்டிலும் 2500 MW அதிகமாக உள்ளது.

 

தமிழ்நாட்டில் தான் அதிக அளவு அதாவது இந்தியாவிலேயே காற்றாலை மூலம் 6142 MW  உற்பத்தி ஆகிறது. ஆனால் காற்றாலை மூலம் உற்பத்தி செய்ய இயலாத போது  2000  முதல் 4000 MW வரை மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை அரசுகள் தனியார் மற்றும்

வெளி மாநிலங்களில் இருந்து கடன் வாங்கி தேவையை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது அல்லது மின் வெட்டு  அமுல்படுத்தி  சரிசெய்கிறது. ஒரு அலகிற்கு (unit) உச்ச பட்ச நேரத்திற்கு ரூபாய் 8 க்கும், இதர நேரங்களில் ரூபாய் 6 க்கும் அரசு விலை கொடுத்து வாங்குகிறது. மின் பற்றாக்குறையை  நீக்க நாணயமாற்று மூலம் ஒரு நாளைக்கு 12000 கோடி வரை செலவிடப்படுகிறது.

அரசு திட்டமிடுதலின் அவசியம்:

மற்ற மாநிலங்களில் உற்பத்தி தடைப்பட்டால், விலைக்கு வாங்குவது கூட இயலாத காரியம். தினமும் இலவசமாக கிடைக்க வேண்டிய 300MW மின்சாரம்  தெலுங்கானா பிரச்சினையின் போது கிடைக்காமல் போனது. இது போன்ற காலக் கட்டங்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நிலக்கரியை ஒரிசாவில்

இருந்து வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதிக மழை காரணமாக, நிலக்கரி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால் மின் உற்பத்தி பாதிக்கப் படும். இது தவிர்க்க முடியாது என்ற போதிலும், அரசும் மின்வாரியமும் முன் கூட்டியே திட்டமிட வேண்டும்.

அரசு எல்லா முடிவுகளையும் குறிப்பாக நிதி ஒதுக்கீட்டை தனது விருப்பத்திற்கு செய்து விட்டு மின் வாரியத்திடம் விளக்கம் கேட்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. மின் வாரியம் இன்று செய்கிற ஊழல்

மற்றும் பொறியாளர்களின் நிர்வாகத் திறமையின்மை, தகுந்த பணித்திறமையின்மை மேலும் நட்டத்தை ஏற்படுத்துகிறது.

கடன் வாங்கி மின் தட்டுப்பாட்டை நீக்க முயலுமானால் அது மேலும் தலைவலி தான்.

ந்த அரசு நீண்ட கால திட்டத்துடன், மின் நிலையங்களை அமைக்க முற்படுகிறதோ, அதேபோல  மின் வாரியம் தன் பொறுப்புணர்ந்து சிறந்த ஆலோசனை வழங்கும் பட்சத்தில்  மட்டுமே தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.  இன்னும் நுகர்வோர் மின் கட்டணம் குறித்த தகவல்களை பரிமாற விருப்பம் இருந்தாலும் அது கட்டுரையின் நோக்கத்தை சீர்குலைத்து விடும் என்பதால் குறிப்பிடப்படவில்லை. விருப்பமுள்ளவரகளுக்கு தர தயாராகவே இருக்கிறேன்.

5 responses

  1. Pingback: தமிழக மின்கட்டண உயர்வு: | LAKSHMANA PERUMAL

  2. நண்பர் நாகராஜனுக்கு மறுமொழிக்கு நன்றி. இரு தினங்களுக்கு முன்(02 /௦௪/2012 ) தமிழக மின் கட்டண உயர்வு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளி இட்டுள்ளேன். அதில் முந்தைய கட்டணத்தையும், தற்போதைய கட்டண உயர்வையும் அட்டவணையாக இணைத்துள்ளேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s