மேம்பாலம்

இந்திய அரசு 5 மேம்பாலங்கள் கட்டுவதற்காக டெண்டர் விட்டிருந்தது. அதனடிப்படையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய விலைப்  பட்டியலோடு அரசை அணுகினார்கள்.  முதலாவதாக ஜப்பானை அழைத்தார்கள். உங்களுடைய விலைப் பட்டியலில் ஐம்பது  கோடி எனக் குறிப்பிடப்பட்டிருகிறதே, எதன் அடிப்படையில் என்று அரசு கேள்வி எழுப்பியது. ஜப்பான் சொன்னது, இதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் எங்கள் நாட்டைச் சேர்ந்தது என்றும், போக்குவரத்து செலவு மற்றும் எங்களுடைய லாபமாக 10 சதவீதமும் கணக்கில் கொண்டே 50  கோடி எனக் கோருகிறோம் என்றது. அரசு திருப்தி அடையாமல், அமெரிக்காவை அழைத்தது.
அமெரிக்காவிடம், ஜப்பான் 50  கோடிதான் சொல்கிறது, ஆனால் நீங்கள் 100  கோடி என்பது எப்படி என்று கேட்டது. ஜப்பான் போலவே அமெரிக்காவும் எங்கள் நாட்டுப் பொருட்கள் ஜப்பானைக் காட்டிலும் தரம் வாய்ந்தவை என்றும், மனித வளச் செலவுகள் அதிகம் என்றும் மற்றும் லாபமாக 10 சதவீதமும் கணக்கில் கொண்டே 100  கோடி எனப் பட்டியலிட்டது.
இரண்டு நாட்டின் விளக்கத்திலும் திருப்தி அடையாத அரசு இறுதியில் இந்திய கம்பெனியை அழைத்தது.  150  கோடி என்ற விலையைப் பார்த்த அரசு அதிர்ச்சியோடு இந்திய கம்பெனியிடம், ஜப்பான், அமெரிக்காவே 100 கோடிக்கு மேல் செல்ல  வில்லை. நீங்கள் எதன் அடிப்படையில் 150 கோடி என்று கேட்டது. இந்திய கம்பெனி சொன்னதாம், 50 கோடி அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும்  கொடுக்க வேண்டியிருக்கும் மேலும் 50 கோடி எங்களது லாபமாக கணக்கில் கொண்டுள்ளோம்.  நீங்கள் மேம்பாலம் கட்டுவதற்கான பணியை எங்களுக்கு ஒதுக்கும் பட்சத்தில், நாங்கள் இதே பணியை ஜப்பானுக்கு 50 கோடிக்கு விட்டு தரமான முறையில் வேலை முடித்து தரத் தயார் என்றது. இந்திய அரசு, இந்தியக் கம்பெனிக்கு பணி ஒப்பந்த ஆணையில் உடனடியாக கையொப்பமிட்டு கொடுத்தது.
 
கதையின் நீதி: வியாபாரத் தந்திரம் தெரிந்தவன் பணம் சம்பாதிப்பான். இப்படி எடுத்துக் கொள்பவர்கள் இதை எடுத்துக்  கொள்ளுங்கள். இந்தியாவில் அதிகாரிகளும் அமைச்சர்களும் எப்படி ஊழல் செய்து நாட்டை கொள்ளை அடிக்கிறார்கள் என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம் என்று நினைப்பவர்கள் இப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்.

One response

  1. இந்த கட்டுரைக்கு மேலும் உதாரணம் தருகிறேன்.இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது . அது உரங்களின் மீதான மத்திய அரசின் மானியத்தை குறைப்பது என்று. இதில் வருத்தம் கலந்த நகைச்சுவை என்னவென்றால் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய உர துறை அமைச்சர் நமது அஞ்சாநெஞ்சன் அழகிரி கலந்து கொள்ளவில்லை. இதுவே உரம் சம்மந்தமான டெண்டர் விடுவதென்றால் முதலில் நின்றுப்பர் இவர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s