கொலையா? கொள்ளையா? எது கொடிய குற்றம் ?

இன்றைய தலைப்புச்  செய்திகளில் வங்கிக் கொள்ளையடித்த ஐந்து பேரைக் காவல்துறை, தற்காப்பு கருதி சுட்டுக் கொன்றதாக பரபரப்பான செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. மனித நேய கமிட்டி இச்செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கொள்ளை அடித்தவர்கள் ஐவரும் வட மாநிலத்தவர்கள் என்று காவல் துறை குறிப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  நிறைய எழுத்தாளர்கள், கொன்றது குறித்து தங்கள் இணையதளங்களில் பின்வரும் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.
 வே. மதிமாறன் இணையதளக்  கேள்விகள்:
குற்றம் சாட்டப்பட்டவர்களை, குற்றவாளிகளை விசாரிப்பதுதான் காவல்துறையின் நடிவடிக்கை. ஆனால், விசாரனையற்ற தீர்ப்பாக இந்த மரணதண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.அவர்கள்தான் திருடர்கள் என்றே இருக்கட்டும். அதற்கு துப்பாக்கி சூடா தண்டனை?

ஆனால், ‘எங்களை அவர்கள் சுட்டார்கள், பதிலுக்கு நாங்கள் சுட்டோம்’ என்கிறது காவல் துறை.

சுற்றி வளைக்கப்பட்டு, ஒரு வீட்டுக்குள் இருப்பவர்கள், எப்படி தப்பி ஓட முடியும்? சுற்றி வளைக்கப்பட்ட அவர்களின் நிலை கைதிகளின் நிலைதானே. கூடுதல் காவலர்களை வர வைத்து, காத்திருந்தால் நிச்சயம் அவர்களை கைது செய்திருக்கிலாம்.

இப்படி சுட்டுக் கொல்வதினால், மற்ற கொள்ளையர்களுக்கு பாடமாக இருக்கும் என்று நினைத்து அதை செய்தார்களோ?

ஆனால், இது போன்ற என்கவுன்டர்கள் பலமுறை நடத்தியிருக்கிறார்கள். அப்படி இருந்தும் மீண்டும் இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டிருக்கிறது என்பதே, இது தீர்வல்ல என்பதற்கு சாட்சி.

அவர்கள் 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதினால், பதில்கள் அற்ற பல கேள்விகள் இருக்கின்றன.

அவர்கள்தான் சம்பந்தப்பட்ட வங்கி கொள்ளையர்களா?

ஒருவரின் படத்தை வைத்து மற்ற நால்வரையும் குற்றவாளிகளாக முடிவு செய்தது எப்படி?

5 பேருமே குற்றவாளிகள் என்பதற்கு என்ன ஆதாரம்? யாரோ ஒருவர் சொன்ன தகவலின் அடிப்படையில் எப்படி முடிவுக்கு வரமுடியும்?

அவர்களில் தம்பி, உறவினர், நண்பர்கள் யாராவது உடன் தங்கியிருக்கலாம் அல்லவா?

அவர்கள் வங்கி கொள்ளயைர்கள் அல்லாமல், காவல்துறையே அடிக்கடி சொல்வதுபோல், நாட்டுக்கே ஆபத்து விளைவிக்கிற பயங்கரமான தீவிராவதிகளாக இருந்தால், அவர்களின் பின்னணியை யார் அறிவது?

சுட்டுக் கொன்றதற்கு பிறகு ‘அவர்கள்தான் வங்கி கொள்ளையர்கள்’ என்ற முன் முடிவோடு விசாரனையை தொடங்குவது என்ன நியாயம்?

அங்கிருக்கும் பணம் அந்த வங்கியில் இருந்த பணம்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

ஏனென்றால், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் எண்களை வங்கியில் குறித்து வைக்கவில்லை என்று காவல் துறையே சொல்லியிருக்கிறது.

தமிழ் பேப்பர் :

இந்தச் செய்திகளையும் அலசல்களையும் மென்று புசித்தபடி தன் வழியில் சென்றுகொண்டிருக்கிறது படித்தவர்கள் அடங்கிய பெரும்கூட்டம். பிடித்திருக்கலாம்,கொன்றிருக்கவேண்டியதில்லைஎன்னும் அதிகபட்ச முணுமுணுப்புடன் விவாதம் முடித்துக்கொள்ளப்பட்டுவிட்டது. மேலதிகம் விவாதம் தொடராததற்குக் காரணம், கொல்லப்பட்டவர்கள் கொள்ளையர்கள் என்று நமக்கு நாமே கற்பித்துக்கொள்ளும் தர்க்க நியாயம்.

செப்டெம்பர் 2011 பரமக்குடி சம்பவத்தை எப்படிப் பார்க்கிறோம்?  பட்டவர்த்தனமாகக் காவல் துறையினர் நடத்திய படுகொலை என்றா அல்லது ‘கலவரத்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்றா? காஷ்மிர் பிரச்னையை எப்படி பார்க்கிறோம்? வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் பேராட்டங்களை? பெருகிவரும் விவசாயிகள் தற்கொலையை?

இன்னும் பல  கேள்விகளை தமிழ் பேப்பர் முன்வைக்கிறது.

என் கருத்து: ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதனடிப்படையில்  மட்டுமே காவல் துறை இயங்குகிறது. இங்கு ஒவ்வொருவரும்  சரி இது, தவறு இது என்பதை அவரவர் பார்வையின் கொண்டே முடிவெடுக்கிறார்கள். பெரும்பான்மையான மக்கள் எது சரி என்று தீர்மானிக்கிறார்களோ அதுதான் சரி என்றாகி விட்டது. பலமுள்ளவர்கள் செய்தால் அது நீதி. நியாயமா என்றால் இல்லை. இது மாதிரியான நடவடிக்கைகளை மனதில் கொண்டே  நீதியும் நியாயமும் என்ற கட்டுரை எழுதினேன்.

 எனக்குத் தெரிந்து சாதாரண பொதுமக்கள் இதைத் தீர செயலாகவே பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். உலகெங்கும் மனித நேயக் கமிட்டி, கூச்சலிடுவதோடு சரி. இல்லையேல் அமெரிக்கா போன்ற அதிகாரமிக்க நாடுகளின் செயல்பாட்டிற்கு என்ன தண்டனை வாங்கி கொடுத்துள்ளது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் திரிவது மட்டுமே மிஞ்சும். 

One response

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s