இஞ்சி துவையல்

தேவையான பொருட்கள் :
இஞ்சி – 1  விரல் நீளத் துண்டு
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
கறிவேப்பிலை – 1 கொத்து
உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
புளி – சிறிதளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – சிறிதளவு
கடுகு – 1 டீ ஸ்பூன்
உளுந்து – 2 டீ ஸ்பூன்
 
செய்முறை:
இஞ்சியை தோல் சீவி விட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
அதை எடுத்து விட்டு அதே எண்ணையில் இஞ்சி வதக்கவும்.
இஞ்சி லேசாக வதங்கிய பிறகு இஞ்சியுடன் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும்.
பிறகு வெறும் வாணலியில் உளுந்து இளம் சிவப்பாக வறுக்கவும்
எல்லாப் பொருட்களும் ஆறிய பிறகு புளி,உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.தேவையெனில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
பிறகு கடுகு,உளுந்து தாளித்து பரிமாறவும்.
 
 இஞ்சி சில உண்மைகள்:
இஞ்சி 5000  ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்ட முக்கிய நறுமணப் பொருளாகும்.
இஞ்சி (zingiber officinale),  ஏலக்காய் மற்றும் மஞ்சள்  குடும்பத்தில் இருந்து வந்தது.
இஞ்சி பசியின்மை,செரியாமை, வாயுத்தொல்லை மற்றும் வாந்தி ஆகியவற்றை போக்கும்.
முன் காலத்தில் இஞ்சியின் விலை ஒரு செம்மறி ஆட்டின் (sheep) விலை இருக்குமாம்.
இஞ்சியை உண்ணுபவர்கள் வயதான பிறகும் இளமையாய் உணர்வார்கள் என்று இத்தாலியின் புகழ் பெற்ற சலேர்னோ பல்கலைக் கழகம் தன் ஆய்வில் வெளியிட்டுள்ளது.

2 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s