லோகாயுக்தாவும் மாநிலங்கள் உரிமையும்

This gallery contains 1 photo.

இன்று நான் எழுதிய லோகாயுக்தாவும் மாநிலங்கள் உரிமையும் என்ற கட்டுரை, தமிழ் பேப்பர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பேப்பர் இணைய தளம் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பது மிகப் பாராட்டுதலுக்கு உரியது. அவ்வகையில், நானும் தமிழ் பேப்பர் இணையதளத்திற்கு மிக்க நன்றிக்  கடமைப்பட்டுள்ளேன். தமிழ் பேப்பர் மேலும் மேலும் உயர என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பின்வரும் பிணையை அழுத்தி லோக் ஆயுக்தா குறித்த எனது பார்வையை காணலாம். http://www.tamilpaper.net/?p=5711 

தலைமுறை – சிறுகதை

This gallery contains 2 photos.

  கிராம நிர்வாக அதிகாரியாய் இருந்த காலத்தில் இருந்தே கோபால் பிள்ளை இன்று வரை விடிகாலை நான்கு  மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார். நான்கு மணிக்கு எழுவதை இன்று வரை சிரமமாக பார்த்ததில்லை. இப்போது வயதாகி விட்டதால் தூக்கமும்  வரமாட்டேன்கிறது. காலைக் கடனை எல்லாம், பம்ப்செட் அருகில் உள்ள உடைமரப் புதர்களில் கழிப்பதுதான் அந்த ஊரில் உள்ள ஆண்களின் வழக்கம். கோபால் பிள்ளையும் எழுந்தவுடன் கையில் பல்பொடியையும், சோப்பு வில்லையும் எடுத்துக் கொண்டு பம்ப்செட்டில் குளிக்க கிளம்பி விடுவார். நட்சத்திரங்கள் கலையாத வானம். அழகான நிலா. இருந்தும் சாலைகளின் ஓரத்தில் உள்ள மரங்களின் கிளைகளில் உள்ள இலைகளின் … Continue reading

உளுந்தம் பருப்பு சாதம்

தேவையானப் பொருட்கள்: அரிசி – 2 டம்ளர் உடைத்த உளுந்தம் பருப்பு – 1 /2  டம்ளர் (தொலியுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் குத்துப் பருப்பு பயன்படுத்தலாம்) வெந்தயம் – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – 4  டேபிள் ஸ்பூன் பூண்டு – 8 பற்கள் நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்   செய்முறை: வெறும் வாணலியில் உளுந்தம் பருப்பை லேசாக வறுத்து கொள்ளவும்.வெந்தயத்தையும் உளுந்துடன் சேர்த்து … Continue reading

சொக்கத் தங்கம் – குறுங்கதை

சொக்கலிங்கத்திற்கு, அப்பா தன்னை சொக்கு…சொக்கு.. என்று அழைத்ததை விட மக்கு… மக்கு.. என்று அழைத்ததுதான் அதிகம் என்பதில் வருத்தமுண்டு. சொக்கு படிப்பில் சூரப் புலி அல்ல. பெரும்பாலான நேரங்களில் அனைத்துப் பாடங்களிலும் பாஸ் பண்ணுவான். சில நேரங்களில் ஓரிரு பாடங்களில் பெயிலாகி விடுவதும் உண்டு.   பல நேரங்களில்  சொக்கு பெயிலான போதெல்லாம், பள்ளியில் அப்பாவைக் கூப்பிட்டு வா என்பதும், ராஜலிங்கம் போய் ஆசிரியர் பேசுகிற ஏச்சு பேச்சுக்களை வாங்குவதும் வழக்கம். பெரும்பாலான நேரங்களில், பையன் படிப்பு சரி இல்லன்னா அடுத்தமுறை டி.சி.யை கொடுத்து விடுவோம்  … Continue reading

மனைவி – சிறுகதை

This gallery contains 1 photo.

கார்த்திக்கிற்கு தேவியை இப்போதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பாக   கார்த்திக்கிற்கும், தேவிக்கும் திருமணம்  ஊர் மெச்சுகிற அளவுக்கு வெகு விமரிசையாக  நடந்தது.   தேவி கார்த்திக்கிற்கு சொந்த தாய்மாமன் மகள். தேவி பன்னிரெண்டாம் வகுப்பு வரையில்தான் படித்திருந்தாள். தேவி வெகுளி. அழகு.. கொள்ளை அழகு. சேலை கட்டியிருந்தால் அவள் அழகை மிஞ்ச ஆளில்லை. லட்சுமி கடாட்சமான முகம் என்றால் தேவிக்கு அது நூறு சதவிகிதம் பொருந்தும்.   எதுவெல்லாம் பிடித்துப்போய் தேவியைக் கார்த்திக் கல்யாணம் செய்தானோ அதுவெல்லாம் இன்று அவனுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக அவளது வெகுளித்தனமான பேச்சு. அடுத்து அவள் அணியும் சேலை என்ற ஆடை.  மனிதர்களின் … Continue reading

சங்கரன் கோவில் தேர்தல் முடிவு சர்வே

சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிவுகள் ஓர் அலசல்

This gallery contains 2 photos.

சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிவுகள்: முத்துச் செல்வி – அதிமுக – 94,977 ஜவஹர் சூரியக்குமார் – திமுக – 26,220 சதன் திருமலைக்குமார் – மதிமுக -20,678 முத்துக்குமார் – தேமுதிக – 12,144 முருகன்- பாஜக – 1633   சங்கரன் கோவில் இடைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற தலைப்பில்  ஏற்கனவே ஒரு கட்டுரை  எழுதி இருந்தேன். அதில் என்னுடைய பார்வையில் அதிமுக வெற்றி பெறும் என்பதை எழுதி இருந்தேன்.  ஆனால் என்னுடைய கணிப்பில் … Continue reading

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாகம் 3

This gallery contains 1 photo.

“நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை … Continue reading

பரத்தை – கவிதை

This gallery contains 1 photo.

நித்தம் நித்தம் வயிறு கழுவ  சித்தம் விற்கிறாள்!   எச்சம்தான்! –  இருந்தாலும் இனிக்கிறாள்   இருட்டில்தான்- இவள் வாழ்க்கை வெளிச்சம்   கட்டழகு உள்ளவரை களப்பணியில் குறையில்லை வருபவர்களின் எண்ணிக்கையிலும் குறையில்லை வரவிலும் குறையில்லை   வாடிக்கையாளர்களுக்கு தகுதி தேவையில்லை பரத்தையின் உடல் வாலிபத்திற்கே – தேவை தகுதி   உழைப்பு அவளது.. சுரண்டல்கள் காவலர்களது   வேசி, தேசி பிராத்தல், தேவடியாள் பட்டப்பெயர்களுக்குப் பஞ்சமில்லை   படுக்கைப் பகிர்வுகளுக்கும் பஞ்சமில்லை எழில் உள்ளவரை தொழில் பஞ்சமில்லை!   சீண்டல்களினால் … Continue reading

மோர் குழம்பு

தேவையானப் பொருட்கள்: மோர் – 1  லிட்டர்   சின்ன வெங்காயம் – 7 அல்லது 8   வெண்டைக்காய் அல்லது சேம்புக் கிழங்கு அல்லது சுரைக்காய்  – 5 அல்லது 6 மஞ்சள் தூள் – சிறிது பெருங்காயத் தூள்  – சிறிது உப்பு –  தேவையான அளவு   தாளிக்க: எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் உளுந்து – 1 டீ ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது   அரைத்துக்கொள்ள: தேங்காய் துருவல் – 3 … Continue reading