நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாகம் 1

அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது – எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ – அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது… ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை…. சலோ டெல்லி :”
 
பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில்
இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே
 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது!
 
மேற்கூறிய உன்னத வார்த்தைகளை உதிர்த்தவனை ஒருநாளும்

இந்திய தேசம் மறக்கப் போவதில்லை. இறப்பு என்பது அவருக்கு இல்லை.
 பிறந்த தேதியும், இறந்த தேதியும் உறுதிபடுத்தப்படாத ஒரு உன்னத தலைவனை பற்றி  அறிவோம்.
 
ஒட்டு மொத்த இந்தியாவின் விருப்பத்திற்குரிய  தேசத் தலைவனாக நேதாஜி அன்றும்,இன்றும் இருந்தாலும்,  நான் உட்பட நம்மில் பலருக்கும் நேதாஜியின் தேச விடுதலைக்கான பங்களிப்போ, அவருடைய வாழ்க்கை வரலாறோ  தெரிவதில்லை. நான் படித்துக் கற்ற நேதாஜியை மற்றவரும் அறிந்து கொண்டால் நன்று என நினைத்ததன் விளைவுகளே நேதாஜி பற்றிய கட்டுரையை எழுத என்னைத் தூண்டியுள்ளது.
 
இந்தியத் திருநாட்டின் தேச விடுதலைக்குப் போராடிய பல தலைவர்களில் நேதாஜியும் ஒருவர். காந்தியை எத்தனைப் பேர் பின்பற்றினார்களோ, விரும்பினார்களோ அதே அளவுக்கு நேதாஜியை விரும்பியவர்கள் ஏராளம். 
 
நேதாஜியின் இளமைக் காலம்:
1897-ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 23-ஆம் நாள்(உறுதிபடுத்தப்படவில்லை) ஒரிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார். தந்தை ஜானகிநாத், தாயார் பிரபாவதி போஸ்.  நேதாஜியின் வீட்டில் மொத்தம் 14 குழந்தைகள். அதில் ஒன்பதாமவர் நேதாஜி. போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் – கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். இந்திய மக்கள் சேவை பிரிவில் நிச்சயம் தேர்வடைவேன் என்று தந்தைக்கு  உறுதி மொழி அளித்து, 1919 ல் இங்கிலாந்திற்குச் சென்றார். அதன் படி,1920 இல் இந்திய மக்கள் சேவை(Indian Civil Service) படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1921 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில்  பங்கேற்றார்.
 
ஆன்மிகத்தில் சுபாஷ்க்கு இருந்த நாட்டம்:
இளம் வயதிலிருந்தே கல்வி ஆர்வம் மிக்க சிறந்த மாணவராகத் திகழ்ந்த சுபாஷ் சந்திர போஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் ஆன்மீக அழைப்புக்களால் ஈர்க்கப்பட்டார். `மக்கள் சேவையில் இறைவனை காண்’ என்ற விவேகானந்தரின் அறிவுரையால் ஈர்க்கப்பட்டு அவ்வாறே பணியாற்றியும் வந்தார்.ஸ்ரீ அரவிந்தர் எழுத்துக்கள் சுபாஷ் சந்திர போஸுக்கு தேசப் பற்றை ஊட்டியது மட்டுமின்றி, தேச சேவையிலும் நாட்டத்தை ஏற்படுத்தியது. பின்னாளில் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து தேச விடுதலை போராட்டத்தில் ஈடுபட, ஸ்ரீ அரவிந்தர், ஆர்யா எனும் தனது பத்திரிகையில் எழுதிவந்த கட்டுரைகளே காரணமாக அமைந்தது.”உங்களில் சிலரை உன்னத மனிதர்களாக காண விரும்புகிறேன்; உங்களுக்காக அல்ல, இந்திய திருநாட்டை உன்னத நாடாக உயர்த்தும் உன்னத மனிதர்களாகவே காண விரும்புகிறேன். உங்களுடைய தாய்நாட்டின் சேவைக்காக உங்களை அர்ப்பணியுங்கள். அவளுடைய வளத்திற்காக செயலாற்றுங்கள், அவளுடைய இன்பத்திற்காக நீங்கள் துயரத்தை தாங்குங்கள்” என்ற ஸ்ரீ அரவிந்தரின் வார்த்தைகள் சுபாஷின் உள்ளத்தில் தேசத்திற்காக பணியாற்ற வேண்டும் என்ற தீயை வார்த்தது.அந்தத் தீயே அவரைக் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தில்,தேச விடுதலைக்காக பாடுபட்ட ஒரு மாபெரும்  இயக்கத்தில் இணையச் செய்தது.
காங்கிரசில் இணைந்தபிறகு அவரின் தேச பங்களிப்பையும்,  அவர் அடைந்த இன்னல்களையும், காந்தியுடன் ஏற்பட்ட முரண்களையும்,காந்தியவாதிகளால் நேதாஜி
 என்ன மாதிரியான முடிவுகளை எடுத்தார் என்பதை,  
அடுத்த கட்டுரையில் காணும் வரை காத்திருப்போம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s