இட ஒதுக்கீடும் ஜாதிய ஒழிப்பும்

தமிழகத்தில் இன்றைய இட ஒதுக்கீட்டு நிலை பின்வருமாறு உள்ளது:
1. அட்டவணை சாதிகள்: 18%. அதில் 3% அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு (Scheduled caste)
2. பழங்குடியினருக்கு: 1% (ST)
3. பிற்படுத்தப்பட்டோருக்கு: 30%. அதில் 3.5% முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு (BC)
4. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு: 20% (MBC)
5. பொதுப் பிரிவு 31% (OC)
மேற்கூறிய பட்டியல் விக்கிபிடியா மற்றும்  திரு பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையிலிருந்தும் குறிப்பெடுத்தேன்.
இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி நிலைநாட்டவும் , பொருளாதார வளர்ச்சியை  எல்லா சமூகத்தினரும் அடைய வேண்டும் என்ற  நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதே.
தற்போது, இட ஒதுக்கீடு ஜாதிய பலத்தின்(சதவிகித) அடிப்படையில்
 கொண்டுவரவேண்டும் என்ற கருத்து
 வலுப் பெற்று வருகிறது.
அதாவது பொதுப் பிரிவு என்ற ஒன்றே வேண்டாம்
 என்பதே அவர்கள் கருத்து.
 காங்கிரஸ் போன்ற கட்சிகள்
 சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கும்,
மற்றவர்களுக்கும் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில்
உள் ஒதுக்கீடு தேவை என்ற கருத்தை முன்வைக்கிறது.
பிஜேபி மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறது.
மற்றொரு பக்கம் ஜாதிய வாரியாக கணக்கெடுப்பு நடக்கும்
 என்று மத்திய அரசு சொல்கிறது. இதன்பின்னால் ஏற்படப்போகும்
 சமூக சிக்கல்களை
ஓரளவுக்கு இப்போதே நம்மால் யூகிக்க முடிகிறது.
 அது இட ஒதுக்கீடு, சதவிகித அடிப்படையில் வேண்டும்
என்று சொல்பவர்களின் கருத்தை வலுப்படுத்த உதவும்.
எனது பார்வை:
  1. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பெறுகிற மதிப்பெண்களில்  எந்த வகையில் பொதுப்பிரிவினரை விடக் குறைவாக இருக்கிறார்கள்? எண்ணிக்கை அளவிலான (சதவிகித அடிப்படையில்) இட ஒதுக்கீடு வேண்டும் என்றால், மேல்படிப்பு படிக்க குறைந்த அளவிலான இடங்கள் மட்டுமே அனுமதி என்கிற பட்சத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும்.
  2. மேலாண்மை இட ஒதுக்கீடு(மேனேஜ்மென்ட் கோட்டா)  கூடாது என்று சொல்ல முடியாத நிலையிலேயே நமது அரசாங்கங்களும், நீதி மன்றங்களும் கையாலாகாத நிலையில் உள்ளன அல்லது கண்டும் காணாமலும் உள்ளன.
  3. அரசுகள் தனியார் மயமாக்கலைத் தாராளப் படுத்திய பிறகு, எவ்வாறு சம சமூக நீதியை நிலைநாட்ட முடியும்? வேலை வாய்ப்பையும், கல்வி நிலையங்களையும் தன் கட்டுப்பாட்டில்  அரசுகள் உருவாக்க இயல முயலாத போது  , இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்  சமூக நீதி என்பது கேள்விக் குறியே! வேலை வாய்ப்பை அரசு மட்டுமே ஏற்படுத்தி தரவேண்டும் என்பது தற்காலத்திற்கு உதவாது என்பதும் நிதர்சனம்.
  4. எதிர் காலத்தில் மிகப் பெரிய போட்டி ஒன்று உருவாகும். அது எண்ணிக்கை அளவிலான ஜாதிகள் தன் சலுகையை நிலைநாட்டவும், பொருளாதார அளவில் மேம்பட்டு நிற்பவர்கள் தங்கள் சலுகையை நிலைநாட்டவும், அரசுகளே அடிஎடுத்துக் கொடுக்கின்றன. இவ்வகையில், சமூக ஏற்றத் தாழ்வுகள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நீங்கும்  என்கிற வாதம் எடுபடப் போவதில்லை.
  5. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முன்னேறிய, தன் பொருளாதார நிலையை வளப்படுத்திய எந்த ஜாதியிணனும், பின் தங்கியுள்ள தன் இனத்தைப் பற்றி அக்கறைகொள்ளாத சுயநல  சமூகமான பிறகு, சமூகநீதி என்பதை  விவாதப் பொருளாக மட்டுமே பார்க்க முடிகிறது.
  6.  அரசியல் கட்சிகள், ஓட்டு வாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உள்ளவரை இட ஒதுக்கீடு, சமூக நீதி என்பது வெறும் விவாதப் பொருள் மட்டுமே!
  7. மேற்கூறிய அரசின் நடவடிக்கைகளும், எண்ணிக்கை அளவிலான சதவிகித இட ஒதுக்கீடு  அரசியலும் வளர்ந்து கொண்டே  செல்லும் பட்சத்தில், சமூக நீதியை நிலை நாட்ட முடியாது. ஜாதியையும்  ஒருநாளும் அழிக்க முடியாது.
  8. என்னைப் பொறுத்தவரையில், இனி வரும் காலங்களில், பொருளாதார நிலையைக் கணக்கில் கொள்வதற்கான வழிவகைகளை நாம் கண்டறிந்து அதன் அடிப்படையில், ஒரு சமூகத்தை எடுத்தாள முற்படாத வரையில், இது ஓட்டு வங்கிக்கான அரசியலை வளப்படுத்தவும், பொருள் வளம் உள்ள சமூகத்திற்குமான உலகமாகவே இருக்கும்.

2 responses

  1. வணக்கம், உங்கள் எண்ணத்திற்கு, வருங்கால சமுதயதிர்க்காக ஒரு நல்ல விதையை விதைததிர்க்கு மிக்க நன்றி. தங்களது எண்ணத்தை ( 7 வது 8 வது கருத்தை ) நான் முற்றிலும் உணர்கிறேன். ஒரு பால் பத்திரத்தில் பால் காச்சும் போது பால் திரித்து விட்டால், அந்த பத்திரத்தை மிகவும் சுத்தம் செய்து உபயோக படுத்த வேண்டும். அதுவும் சரி இல்லை என்றால் பத்திரத்தை மற்ற வேண்டும். அது போல் அரசியல் மற்றும் வணிகத்தில் சுத்தம் என்ற மனித நேயம் ,அன்பு வேண்டும். இவை இல்லாத வரை மனித சமுதாயம் ஜாதி இல்லாத சமுதாயம் , இயற்க்கை வளம் மேம்பாடு இவை எல்லாம் இல்லாமல் சீர் கெட்டு அழிவை நோக்கி இவுலகையே அழைத்து சென்று கொண்டிருக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்தும் கூட .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s