இந்தியக் கிரிக்கெட்டின் தூண் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக தனது ஓய்வை அறிவித்துள்ளது. தனது வயது, ஆட்டத்தின் போக்கைக் கணக்கில் கொண்டே, இந்த முடிவை அவர் எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. மற்றவர்கள் தன்னை
இகழ்வதற்கு முன், தன் ஒய்வை அறிவித்துள்ளது பாராட்டுதலுக்குரியது.
டெஸ்ட் கிரிக்கெட் என்றால், டிராவிட்டின் காலத்தில் லாரா, பாண்டிங், சச்சின், காலிஸ், லக்ஷ்மண் ஆகியோர் ஆடும் ஆட்டம் மிகச் சிறந்தது.
திராவிட் பந்தை எதிர்கொள்கிற விதம், தனி அழகு. மிக வேகமாக ஓடி வந்து பந்து போடும் பந்து வீச்சாளரின் பொறுமையை சோதிப்பதில் டிராவிட்டுக்கு நிகர் ட்ராவிட்டுதான். மற்றவர்கள் அடிக்கும் பந்தாவது, கள ஆட்டத்தில் உள்ள பந்து பிடிப்பவரின் கைகள் வரை செல்லும். திராவிட் எதிர்கொள்ளும் பந்து அவர் மட்டையின் அருகிலேயே இருக்கும். ஒருநாள் ஆட்டங்களில் அவரைத் திட்டுபவர்கள் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரைப் பற்றி தவறான கருத்தேதும் கொண்டதில்லை. மாறாக, ஒட்டு மொத்த இந்தியர்களாலும் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் அவரை ஒருவரும் இகழ்ந்திருக்க மாட்டார்கள் என்று தைரியமாகச் சொல்லலாம்.
மிக சாந்தமான பார்வை. பார்ப்பவர்களுக்கு, மனிதர் எப்போதும் சிந்தனையில் உள்ளார் என்று தோன்றும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வரை மனிதர் உடல்வளத்தில் பார்ப்பதற்கு அப்படியே இருக்கிறார். பெண்களின் நட்சத்திர நாயகனாக விளங்கியவர் அவர்.
ஒருநாள் ஆட்டமோ, டெஸ்ட் ஆட்டமோ ராகுல் டிராவிட்டுக்கும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் உள்ள வேற்றுமை, மற்றவர்கள் விளையாடுவதை வைத்து இவர் இன்று நிலைத்து நின்று ஆடமாட்டார் என்பதை யூகிக்க முடிகிறது. டிராவிட்டின் ஆட்டத்தை அவ்வகையில் சேர்க்க இயலாது. திராவிட் ஆட்டத்தின் பாணியே, அவர் எந்த பந்து வீச்சாளர்களின் பந்துக்கும் பயப்பட வில்லை என்பதைத் தைரியமாகச் சொல்வேன். சச்சின், கங்குலி மற்றும் இன்ன பிற இந்திய விளையாட்டு வீரர்கள், சொஹிப் அக்தர், மெக்ராத் போன்றவர்களின் பந்து வீச்சை எதிர் கொள்ளும் விதத்திற்கும், திராவிட் எதிர்கொள்ளும் விதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் காண இயலும். ஒருமுறை, டொனால்டின் பந்தை ஒவ்வொரு ஆட்டத்திலும் திராவிட் விளாசி எடுக்க, டொனால்ட் கெட்ட வார்த்தைகளில் திட்டினாலும், திராவிட் ஒருபோதும் தன்னுடைய ஒருமுக சிந்தனையை இழந்ததில்லை.
நான் பார்த்த விளையாட்டு வீரர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டை திராவிட் மட்டுமே மிக ரசித்து விளையாடி இருக்கிறார் என்பது என் அபிப்பிராயம். கவர்ச்சிகரமாக மற்ற விளையாட்டு வீரர்கள் போல, ரசிகர்களின் கைத்தட்டலுக்காக தன் நிலை மறந்து ஒரு மாட்சில் கூட விளையாடவில்லை. அடித்து ஆடும் விளையாட்டு வீரர்கள் வெகு எளிதாக ரசிகர்களைக் கவர்ந்து விடுகிறார்கள். அம்மாதிரியான ஆட்டக்காரர்கள் வெறுப்பையும் பெற்றுள்ளனர்.ஆனால், தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய திராவிட், சச்சினுக்கு இணையாக தனக்கு ரசிகர் வட்டத்தைப் பெறுக்கியது வியப்பை ஏற்படுத்துகிறது. கவாஸ்கர் ஒருமுறை, டிராவிட்டைப் பாராட்டும் போது சொன்ன வார்த்தைகள், ஒரு வீரர் எந்த பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று தெரிய வேண்டுமானால் டிராவிட்டின் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்று புகழ்ந்துள்ளார். ஆம். திராவிட் ஒரு கிரிக்கெட் புத்தகம். அவர் அடிக்கிற ஒவ்வொரு ஷாட்டும் மிக நளினமாக இருக்கும்.
ஆரம்ப காலக் கட்டங்களில் திராவிட் ஒருநாள் ஆட்டங்களில் தன்னை வலுப்படுத்திக்கொள்ள ரொம்ப நாள் எடுத்துகொண்டார். ஒரு ஆட்டத்தில் சச்சினோ கங்குலியோ விரைவில் ஆட்டமிழந்தால், குறைந்த பட்சம் ஆட்டத்தை 40 ஓவர்கள் வரை எடுத்துச் செல்ல சிறந்த வீரராக, திராவிட் தன்னை அடையாளப்படுத்தியதே அவர் ஒருநாள் ஆட்டங்களில் அவரை நிரந்தரமாக்கியது. மேலும் வெளிநாட்டு தளங்களில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களில் திராவிடும் ஒருவர்.
பலமுறை தன்னை அணியில் இருந்து விலக்கியபோதும், ஒருநாளும் மனம் தளர்ந்தவரல்லர். திராவிடின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எந்த வகையான பாராட்டும் அவருக்குப் போதுமானதாக இருக்காது என்கிறார் சச்சின். உண்மைதான். பாராட்டுதலுக்கும் மேலாக இந்தியக் கிரிக்கெட் இன்னொரு நடுக்கள வீரரை, டிராவிட்டின் இடத்தை யார் நிரப்பப் போகிறார்களோ! தெரியவில்லை. அவருடைய சில சாதனைகளையும் சொன்னால் மட்டுமே இக்கட்டுரை எழுதியதில் மற்றவர்களும் பலன் அடைவார்கள் என நம்புகிறேன். அவருடைய சாதனைகள் குறித்த தகவல்களை தினமலர், தட்ஸ்தமிழ்,espncricinfo ஆகியவற்றில் இருந்தே பதிப்பிக்கிறேன்.
டெஸ்ட் சாதனைகள்: இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ள டிராவிட் 36 சதங்களும், 63 அரைசதங்களும் அடித்துள்ளார். இதன்மூலம் மொத்தம் 13,288 ரன்களை எடுத்துள்ள டிராவிட், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் 2வது நபராக உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் சராசரியாக 52.31 ரன்கள் வைத்துள்ளார்.இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களில் ஒருவரான டிராவிட், இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் வீரர்
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் வீரர் இந்தியாவின் டிராவிட் தான்.
* பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி, 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் இவர் தான்.
இரண்டாவது இடம்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில், டிராவிட் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவ்வரிசையில் “டாப்-3′ வீரர்கள்
விவரம்:
வீரர்/அணி போட்டி ரன் 100/50
சச்சின் (இந்தியா) 188 15,470 51/65
டிராவிட் (இந்தியா) 164 13,288 36/63
பாண்டிங் (ஆஸி.,) 162 13,200 41/61
* 344 ஒருநாள் போட்டிகளில், 12 சதங்கள் உட்பட, 10,889 ரன்கள் எடுத்த இவர், உலகளவில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஏழாவது இடத்திலுள்ளார்.
நான்கு சதங்கள்
கடந்த 2002ல் இங்கிலாந்துக்கு எதிராக (115, 148, 217) மூன்று, வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக ஒன்று (100) என, தொடர்ச்சியாக நான்கு இன்னிங்சில் டெஸ்ட் சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் டிராவிட் தான்.
இது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை (31029 ) எதிர் கொண்ட வீரர் திராவிட் மட்டுமே.
ராகுல் டிராவிட்டின் இதர சாதனைகளை espncricinfo website ல் சென்று பாருங்கள்.
Batting and fielding averages | ||||||||||||||
Mat | Inns | NO | Runs | HS | Ave | BF | SR | 100 | 50 | 4s | 6s | Ct | St | |
Tests | 164 | 286 | 32 | 13288 | 270 | 52.31 | 31258 | 42.51 | 36 | 63 | 1654 | 21 | 210 | 0 |
ODIs | 344 | 318 | 40 | 10889 | 153 | 39.16 | 15284 | 71.24 | 12 | 83 | 950 | 42 | 196 | 14 |
T20Is | 1 | 1 | 0 | 31 | 31 | 31 | 21 | 147.61 | 0 | 0 | 0 | 3 | 0 | 0 |
First-class | 298 | 497 | 67 | 23794 | 270 | 55.33 | 68 | 117 | 353 | 1 | ||||
List A | 449 | 416 | 55 | 15271 | 153 | 42.3 | 21 | 112 | 233 | 17 | ||||
Twenty20 | 69 | 62 | 6 | 1605 | 75* | 28.66 | 1369 | 117.23 | 0 | 7 | 178 | 25 | 14 | 0 |
Please update more information.(T.N Gov. job opening)