சங்கரன் கோவில் இடைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

சங்கரன்கோவில் தொகுதியின் இடைத்தேர்தல், வாக்கு நாள் வருகிற  மார்ச் 18 ஆம் தேதியும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை மார்ச் 21  ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தல், அதிமுகவிற்கு மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின்வெட்டுப் பிரச்சினை என அனைத்தும் அதிமுகவிற்கு எதிராகத் திரும்பப் போகிறதா அல்லது மக்கள் வழக்கம் போல, ஆளும் கட்சியைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். பெரும்பாலும் மக்கள், வேட்பாளர் தொகுதிக்கு என்ன செய்துள்ளார் என்பதைப் பார்த்து வாக்களிப்பதாகத் தெரியவில்லை.
 
இதுவரை சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல்களில் 1980,1984,1991,1996,2001,2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் அதிமுகவும், 1977, 1989 ஆகிய தேர்தல்களில் திமுகவும் வென்றுள்ளன. ஒருமுறை கூட மதிமுக இங்கு வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இத்தொகுதி அதிமுக கோட்டையாகவே விளங்கிவருகிறது. இத்தொகுதியில் தேவர், தேவேந்திரகுல வேளாளர் மற்றும் நாயக்கர் ஓட்டுக்களே முக்கியப் பங்கு வகிக்கிறது. நாயக்கர் ஓட்டுக்களை மதிமுக பெரும் அளவிலும், தேமுதிக மீதி ஓட்டுக்களையும் பகிர்ந்துகொள்ளும் என்று நம்புகிறேன். தேவரின ஓட்டுக்கள் 90 % அதிமுகவிற்கும், ஆதி திராவிடர்களின் ஓட்டுக்களை அனைத்து தரப்பினரும் பகிர்ந்து கொள்வார்கள். தேர்தலுக்கு முன்னர் வைகோ பிரகாசமாகத் தெரிவார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவருக்குத் தனித்து நின்ற போதெல்லாம் ஒரு பாடமாகவே அமைந்துள்ளது.
 
89 ஆம் ஆண்டுத் தேர்தலில் , அதிமுக (ஜெ),அதிமுக(ஜா) என இரு அணிகளாகப் பிரிந்து இருந்ததால்தான் திமுக வென்றது. 1991 ஆம் ஆண்டுத் தேர்தலில் ராஜிவின் மரணமே அதிமுக வெற்றி பெற்றது என்று எடுத்துக் கொண்டால் கூட மற்ற தேர்தல்களில் இத்தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே விளங்கிவருகிறது. 1991 தேர்தலில், 2 இடங்களை மட்டுமே திமுக வென்றது நினைவிருக்கலாம். குறிப்பாக 1996 தேர்தலில் ஜெயலலிதா பர்கூர், காங்கேயம் இரு தொகுதிகளில் தோற்றபோதும், சங்கரன்கோவில் தொகுதியில் மறைந்த அமைச்சர் கருப்பசாமி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 1996 தேர்தலில் தமிழ்நாட்டில் வெறும் 4 இடங்களில் மட்டுமே அதிமுக வென்றது.
 
அதன் பிறகு ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதும், சங்கரன் கோவில் அதிமுக வசம் மட்டுமே இருந்து வருகிறது.
 
இந்தமுறை ஐந்து முக்கியக் கட்சிகள்  தங்கள் வேட்பாளர்களைத் தனித்தனியே அறிவித்துள்ளது.
அதிமுக – எஸ்.முத்துசெல்வி
திமுக – ஜெ. ஜவகர் சூர்யகுமார்
மதிமுக – சதன் திருமலைக் குமார்
தேமுதிக – கே. முத்துகுமார்
பாஜக –  எல்.முருகன்
ஆகியோரைத் தத்தம் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
 
இதுவரை எனக்குத் தெரிந்து அங்கு எந்த திட்டங்களோ, புதிய தொழிற்சாலைகளோ, உள்கட்டமைப்பு வசதிகளோ வந்ததற்கான அடையாளங்கள் ஏதுமில்லை. (எனக்கு திருநெல்வேலி என்பதால் ஓரளவுக்கு சங்கரன் கோவிலைப் பற்றித் தெரியும்). இருந்தபோதும், கருப்பசாமி  நல்ல மனிதர் என்கிற காரணத்தாலே வென்று வந்துள்ளார். இன்னொரு விடயமும்  நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அது ஜெயலலிதா கருப்பசாமி போல, வெகு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு தந்துள்ளார்! என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். கோமதி அம்மன் கோவிலும் , வைகோவின் கலிங்கப்பட்டியும்  இத்தொகுதியில் வருகிறது என்பதைத்  தவிர சொல்லிகொள்ளும் அளவுக்கு வேறு எந்த சிறப்பையும் இத்தொகுதி உள்ளடக்கியதாக இல்லை.
 
எனது பார்வை:
  1. ஆளும் கட்சியாக இருப்பதால் அதிமுகவே வெல்லும்.
  2. எதிர்கட்சிகள் தனித்தனியாக நிற்பதால் ஓட்டுக்கள் சிதறும். ஆகையால், அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசம்.
  3. அதிமுகவின் கோட்டை என்பதால் மீண்டும் அதிமுகவே வெல்லும்.
  4. இரண்டாம் இடத்திற்கும் மூன்றாம் இடத்திற்கும் வேண்டுமானால் மதிமுகவிற்கும் திமுகவிற்கும் கடும் போட்டி நிலவும். அதிலும் திமுகவிற்குத் தான் மானப் பிரச்சினை.
  5.  சங்கரன் கோவிலைப் பொறுத்தவரையில், தேமுதிகவிற்கு  நான்காம் இடமே மிஞ்சும். டெபாசிட் கிடைத்தாலே போதுமானதாக இருக்கும்.
  6. பாஜகவை பொறுத்தவரையில், மூவாயிரம் ஓட்டுகள் வாங்கினாலே பெரிய விடயம்.

அதிமுக ஏழாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும் என்பது எனது கணிப்பு.

 
கலைஞர், அம்மா, கேப்டன், வைகோவின் பிரச்சாரங்கள் யாருக்கு கைகூடப் போகிறதோ!. இத்தொகுதியின் தற்போதைய வாக்காளர்கள் இரண்டு லட்சத்தைக் காட்டிலும் சற்றே அதிகம். 60000 ஓட்டுக்களை பெறுகிற கட்சி நிச்சயம் வெல்லும். யார் அந்த வாக்குகளைப் பெறப் போகிறார் என்பது மார்ச் 21 அன்று தெரிந்து விடும்.
 
எந்த தேர்தலில் யார் யார் எவ்வளவு வாகுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள் என்ற விபரத்தை கீழே தருகின்றேன்.
1977 :
சுப்பையா (திமுக) = 21569
அப்பாத்துரை (அதிமுக)= 21232
வெற்றி : திமுக
 
1980:
P.துரைராஜ்  (அதிமுக) = 31818
K.மதன் (திமுக)= 29436
வெற்றி : அதிமுக
 
1984:
S.சங்கரலிங்கம் (அதிமுக) = 48411
S.தங்கவேலு (திமுக)=  36028
வெற்றி : அதிமுக
 
1989 :
S.தங்கவேலு (திமுக)=  46886
K.மருதகருப்பன் (அதிமுக ஜெ அணி)= 24897
வெற்றி : திமுக
 
1991 :
V.கோபாலகிருஷ்ணன் (அதிமுக) = 65620
S.தங்கவேலு (திமுக)= 38772
வெற்றி : அதிமுக
 
1996 :
கருப்பசாமி (அதிமுக) = 37933
S.ராசையா (திமுக) = 37333
வெற்றி : அதிமுக
 
2001:
C.கருப்பசாமி (அதிமுக) = 52000
P.துரைசாமி (புதிய தமிழகம்) = 42738
வெற்றி : அதிமுக
 
2006 :
C.கருப்பசாமி (அதிமுக) = 40.33%
S.தங்கவேலு (திமுக) = 36.79%
வெற்றி : அதிமுக
 
2011 :
C.கருப்பசாமி (அதிமுக) = 72297
M.உமாமகேஸ்வரி (திமுக)= 61902
வெற்றி : அதிமுக
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s