பரத்தை – கவிதை

நித்தம் நித்தம்
வயிறு கழுவ 
சித்தம் விற்கிறாள்!
 
எச்சம்தான்! –  இருந்தாலும்
இனிக்கிறாள்
 
இருட்டில்தான்- இவள்
வாழ்க்கை வெளிச்சம்
 
கட்டழகு உள்ளவரை
களப்பணியில் குறையில்லை
வருபவர்களின் எண்ணிக்கையிலும்
குறையில்லை
வரவிலும்
குறையில்லை
 
வாடிக்கையாளர்களுக்கு
தகுதி தேவையில்லை
பரத்தையின்
உடல் வாலிபத்திற்கே – தேவை
தகுதி
 
உழைப்பு அவளது..
சுரண்டல்கள் காவலர்களது
 
வேசி, தேசி
பிராத்தல், தேவடியாள்
பட்டப்பெயர்களுக்குப்
பஞ்சமில்லை
 
படுக்கைப் பகிர்வுகளுக்கும்
பஞ்சமில்லை
எழில் உள்ளவரை
தொழில் பஞ்சமில்லை!
 
சீண்டல்களினால்
தீண்டல்களினால்
தீண்டாமைக்குள்ளானவள்
 
காமக் களியாட்டத்திற்கு
உபச்சாரம்
தொழில் பெயரோ
விபச்சாரம்
சமூகப் பார்வையில்- இது
அபச்சாரம்
 
பரத்தை தொழிலில்
சிரத்தை பல!
பாரம் தீர்க்க
தாரம் ஆகுமுன்
சோரம் போனவள்
 
நாகரிக சமூகத்தில்
நல்லவர் போர்வையில்
கெட்ட பார்வையில்
குடி இழந்தாள்
சுயம் இழந்தாள்
சுகம் இழந்தாள்
எல்லோரும் இகழ்ந்ததால்
எல்லாம் இழந்தாள்!
 
பரத்தை
போற்றப்பட வேண்டியவள் அல்ல
தூற்றப்பட வேண்டியவளும் அல்ல…
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s