தமிழக மின்கட்டண உயர்வு:

மார்ச் 31 ஆம் தேதி, தமிழக அரசு மின் கட்டண உயர்வு குறித்த அறிக்கையை வெளியிட்டது. மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்ற செய்திக் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு சராசரியாக 37 % உயர்ந்துள்ளதாக அறிக்கைகளும் செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இச்செய்தி குறித்து பெரும்பாலோர்
 அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணம்
 உள்ளனர். 
 
வீடுகளுக்கு உள்ள மின்கட்டணம்  முதல் ஐம்பது அலகு(Unit) வரை 65 பைசாவிற்கும், 51 முதல் நூறு அலகு வரை அலகிற்கு 75 பைசா வரையிலும் இருந்தது. இன்று அது முதல் நூறு அலகிற்கு, 110 பைசா/அலகு என்று உயர்த்தப் பட்டுள்ளது. மேலும் விலைப்பட்டியல் விபரங்களுக்கு அட்டவணையைப் பார்க்கவும்.
 என்னுடைய கடந்த மாதக் கட்டுரையில், நண்பர் ஒருவர் விலைப் பட்டியலையும் தெரியப் படுத்தினால் நன்று எனக் குறிப்பிட்டிருந்தார். அதை மனதில் கொண்டே அட்டவணை இணைத்துள்ளேன். மேலும் இது எல்லோருக்கும் மின் வாரியத்தின் வரி பற்றிய விழிப்புணர்வும் வரும் என்பதால் இணைத்துள்ளேன்.
 நம்மில் பலருக்கும் விலை உயர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஒருவேளை அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தாலும், 37 % வரி அதிகரிப்பு என்பது பல கேள்வி அலைகளை எழுப்புகிறது.
 
என்னைப் பொறுத்தவரையில் மின் கட்டண உயர்வு இன்று அத்தியாவசியப் பட்டுள்ளதாகவே பார்க்கிறேன்.
 1. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மின் கட்டணத்தில் எந்த விலை ஏற்றமும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். பெட்ரோல் டீசல் விலை உயர்வு எத்தனை மாதங்களில், விலை உயர்வைக் கண்டிருக்கிறது என்பதை நாடறியும். சிந்தித்துப் பாருங்கள்!
 2. கடந்த திமுக ஆட்சியில், மின்சாரப் பற்றாக்குறையைத்  தீர்க்க வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் கடனாக வாங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கும், வீட்டு உபயோகிப்பவர்களுக்கும் மிக குறைந்த விலையில் மானிய அடிப்படையில், மின்சாரம் வழங்கினார்கள்.  அதில் மின்வாரியத்திற்கு பெறும் நட்டம் என்பதை உணருங்கள். ஏற்கனவே மின்வெட்டு குறித்த கட்டுரையில் அரசுக்கு ஏற்படும் இழப்பைத் தெரிவித்திருந்தேன்.
 3. அதிக கடனுக்குப் பெற, தற்போதைய அரசு விரும்பாததால் அதிக மின் வெட்டும் மின் பற்றாக்குறையும் நிலவுகிறது. அதுவே மின் வெட்டு  இன்று அதிகரித்தற்கான காரணம்.
 4. இப்போதும் அடக்க விலைக்கே வீடுகளுக்கு கொடுப்பதாக மின்வாரியம் தெரிவிக்கிறது. தற்போதும், மானியம் அளிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இலவசத்தை எதிர்ப்பவர்கள் மானியத்தை மட்டும் உவகையுடன் ஏற்றுக் கொள்ள முற்படுவது எவ்விதத்தில் நியாயம்!
 5. மற்ற மாநிலங்களோடு மின்விலையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கையில், சராசரியாக ஒவ்வொரு மாநிலமும் எந்த வகையில் மின்விலையை நிர்ணயித்துள்ளன என்பது அவசியமாகிறது. இந்தியாவின் முதன்மை மாநிலம் குஜராத்தில்(Surplus Power state) , கிராமப் புறங்களுக்கு குறைந்த பட்சமாக அலகிற்கு 2 .30  ரூபாய்க்கும், நகர்ப்புறங்களில் அலகிற்கு 2 . 80 ரூபாய்க்கும் உள்ளது. அதிக அலகு உபயோகிப்பவர்களுக்கு அலகிற்கு 4 . 30 க்கு கிராமங்களிலும், 4 . 75 பைசாவிற்கு நகரங்களுக்கும் வரி விதிக்கப் பட்டுள்ளது.
 6. மேலும் மகாராஸ்ட்ராவில் குறைந்த பட்சம் 2 .47 ரூபாய்க்கும், அதிக பட்சம் 7 .50 க்கும் விற்கப்படுகிறது. உபியில், குறைந்த பட்சம் ரூபாய் 3 . 45 க்கும், ஒரிஸ்ஸாவில் குறைந்த பட்சம் ரூபாய் 1 . 40 க்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
 7.  வீடுகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், இன்ன பிற விழாக் கூட்டங்கள், மற்றும் விளம்பரப்பலகைகள், திரை அரங்குகள் என்று கணக்கிட்டால், குஜராத்துக்கு அடுத்த நிலையில் தமிழகம் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வீட்டு உபயோகத்தில்  பின்வரும் வரியை மாநிலங்கள் மேற்கொள்கின்றன.
 8. சராசரி வரிவிதிப்பில் அலகிற்கு முறையே குஜராத் 3 .30 க்கும், தமிழகம் 3 .42 க்கும்,  கர்நாடகம் 3 . 50 க்கும், ஆந்திரா 4 .50 க்கும், மகராஷ்டிரா 5 . 57 க்கும், மேற்கு வங்கம் அலகிற்கு ரூபாய் 5 . 60 க்கும் உள்ளதை பார்க்கையில் தமிழக அரசு மின் விலையை ஏற்றி இருப்பதின் அவசியத்தை உணர முடிகிறது. தமிழகம் இரண்டாம் இடத்தில் தான் உள்ளது…
விலை உயர்வு யாருக்கும் ஏற்புடையதல்ல என்றாலும், மாநிலத்தின் தேவையை உணர மறுப்பது என்பது எத்தகையது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து தினமும் புலம்புகிற மக்கள், கட்டாயம் தாங்கள் செல்ல வேண்டிய வேலைக்கோ மற்ற  இடங்களுக்கோ , சொந்த பைக்கை, நான்கு சக்கர வாகனத்தை தவிர்த்து பேருந்தில் பயணம் மேற்படுவோர் எத்தனை பேர்! இவர்கள் புலம்புகிறார்கள்… ஆனால் பைக்கில் செல்வதை மட்டும் குறைக்க முயலாதது வேடிக்கையும் கூட. அதை நான் சொல்லக் கூடாது என்றாலும், இன்றும் பெட்ரோல் கிடங்குகளில் பல நேரங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு என்பது டிமாண்ட் எவ்வளவு உள்ளது என்பதையே உணர்த்துகிறது.
பைக்கில் தினமும் வேலைக்குச் செல்வது என்பது அத்தியாவசியத் தேவையற்றது என்பது என் கருத்து. அன்றாடம் உபயோகிக்கும்(நீர், மின்சாரம், பால், உணவுப் பண்டங்கள்) பொருள்களின் விலை ஒருபோதும் குறையப் போவதில்லை.  பெட்ரோல் என்பது அத்தியாவசியம்  அற்றது என்பது அறிந்த நாம், அதையே குறைக்க முயற்சிக்காத போது , மின் தேவைகளையும் புலம்பிக் கொண்டு உபயோகிப்போம் என்றே கருதுகிறேன்… 
 
பால் விலை உயர்வு எனக்கும் ஏற்புடையதல்ல.. காரணம் ஏழைகளும் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க வேண்டும் என்பதால் அரசின் செயல் எனக்குப் பிடிக்க வில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். அதேபோல, விவசாயத்திற்கான மின்கட்டண உயர்வை அரசு கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்பதே எனது கருத்து. அரசு, இன்னும் குறைந்த அளவு மின்சாரம் எடுக்கும் பல்புகளையும் உபயோகிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அது பாராட்டப் படும்.
 
இவை அனைத்தையும் தாண்டி, ஒரு அரசு எப்போது நெடிய திட்டத்துடன் மின் ஆலைகளை நிறுவி, மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க விழைகிறதோ அப்போதுதான், தமிழகத்திற்கு விடிவுகாலம்!
 
 
   

3 responses

 1. கீழே இப்படி ஓர் ஆய்வு முடிவு சொல்கிறது ,

  தமிழகத்தில் தற்போது 150 லட்சம் வீட்டு மின் இணைப்புகள். இங்கும் பெரும்பாலான வீடுகளில் குண்டு பல்புகள் உள்ளன. கலாச்சார ரீதியாக இங்கு மின்பளு மாலை மட்டுமல்லாமல் காலையிலும் உச்சத்திலே இருக்கிறது.

  தமிழக மின் துறை, தமிழகத்தில் குண்டு பல்புகளை சி. கு. வி. களால் மாற்றினால் 500 முதல் 600 மெ. வா. மின் திறனை இவ்வேளைகளில் தேவையற்றதாக்கலாம் என்கிறது. இந்த 600MW மினசாரம் தயாரிப்பதற்கு அரசிற்கு 5000 கோடி தேவைபடுகிறது .
  இது குறைந்த கணக்கீடே! http://www.poovulagu.net/2012/01/600.html

  இந்த அரசாங்கம் டிவி , mixie , grinder இலவசமாக கொடுப்பதற்கு பதிலாக இந்த CFL விளக்குகளை இலவசமாக கொடுக்கலாம். இதை இந்த அம்மாவும் செய்வதில்லை அந்த தமிழன தலைவரும் !!!!!!! செய்யவில்லை.

  இந்தம்மா அணைத்து விலைகளையும் ஏற்றி விட்டு மக்கள் மீது சுமைகளை ஏற்றிவிடும்.. அடுத்த ஆட்சியில் … தமிழன தலைவர் !!!!!!! இதை பயன் படுத்தி கொள்வார். இதுதான் ஒவ்வொரு 5 வருடமும் நடைபெறுகிறது . மாற்று வழியை யாரும் சிந்திப்பதில்லை

 2. பிரவின், தங்கள் கருத்துகளுக்கு நன்றி. மானியத்தை, உவகையுடன் ஏற்பதை மட்டும் நடுத்தர வர்க்கம் மறந்து விடுவதேனோ! சில இலவசங்கள் தேவை இல்லை என்றாலும் மானியம் குறித்த விடயங்களில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது மட்டும் சுயநலமில்லையா

 3. இங்கு உள்ள அனைவருமே சுயநலவாதிகள் தான் சுயநலம் இல்லாத மனிதர்களை பார்ப்பது மிக மிக அரிது . இலவசங்களுக்கும் மானியங்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது . உலகத்தில் பல நாடுகள் மாநியத்தைதான் பின்பற்றுகின்றன .இலவசத்தை அல்ல .
  கல்விக்காக , மருத்துவத்துக்காக கொடுக்கும் இலவசங்கள் மற்றும் மானியம் மக்கள் வாழ்வை மேம்படுத்தும் . ஆனால் ஆடம்பர தேவைக்கான இலவசங்கள் மற்றும் மானியங்கள் மக்களை சோம்பேறியாக்கும். அடிப்படை தேவையான கழிப்பிட வசதி கூட சரியாகக அமைத்து கொடுக்க முடியவில்லை இந்த அரசுகளால் அதற்குள் டிவி mixi grinder என்று சென்று விட்டார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s