தேவையானப் பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 10
முருங்கைக் காய் – 1
கத்தரிக்காய் – 3 (விருப்பப்பட்டால்)
தக்காளி – 1 (சிறியது)
முருங்கைக் கீரை – 1 கப் (காம்பு இல்லாமல் உருவியது)
(ஸ்பினச் அல்லது பாலக் கீரையை பொடிதாக அரிந்தும் பயன்படுத்தலாம்)
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
வேகவைக்க :
பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு – 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – சிறிது
வெந்தயம் – சிறிது
வறுத்து அரைக்க :
காய்ந்த மிளகாய் -4 அல்லது 5
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 டீ ஸ்பூன்
மல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 இனுக்கு
செய்முறை:
- வாணலியில் எண்ணெய் இல்லாமல் மல்லி விதை,காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம் மற்றும் கறிவேப்பிலையை இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்தப் பொருட்கள் ஆறிய பிறகு சின்ன வெங்காயம்-2 , தேங்காய்(வறுக்க வேண்டிய அவசியம் இல்லை) சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,வெந்தயம்,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு சின்ன வெங்காயம், தக்காளி வதக்கி பிறகு காய்கறிகளை சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும்.
- காய் பாதி வெந்த பிறகு முருங்கைக் கீரை சேர்த்து வேக விடவும்.
- பிறகு அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- வேக வைத்த பாசிப் பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்த பிறகு இறக்கவும்.
சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
சிலர் சுவைக்காக எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடுவார்கள்.
புளி இல்லாமல் செய்வதுதான் இதன் சிறப்பு.