முத்தம்:
உலர்ந்து போன உதடுகளுக்கு
ஈரம் கொடுத்தாய்!
பேசாதிருக்க நீ செய்த
தந்திரச் செயல்!
நியாயமா:
உளவு வந்தேன்- இதயம்
களவு செய்தேன்….
கலவு கொண்டோம்!
பற்றுக் கொண்டேன்…
பற்றிக் கொண்டாய் – உனை
பெற்று விட்டவர்களுக்காக
அற்று விட்டாய் – காதலை
விற்று விட்டாய்…
வெற்று மனிதனாய்
பற்று அற்ற வாழ்வோடு நான்….
நியாயமா…
ஏமாற்றம்:
நீ நிலவு…
உன்னைச் சுற்றி
எத்தனை நட்சத்திரக்
காவலர்கள் – இதயம்
கொள்ளை கொள்ள!
அமாவாசையாய்
மறைந்து போவாய்
எனத் தெரியாமலேயே…..
தற்கொலை:
ஒரு கோழையின்
வீரமிக்க செயல்
தற்கொலை!