ஐரோப்பிய பயணத்தில் சுவையான பேச்சுப் பரிமாற்றம்

 
 
நண்பருக்கும் எனக்கும் ஒருமுறை தொழில் நிமித்தமாக பிரான்சுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு வழிகாட்டியாக வந்த ஐரோப்பிய நண்பர்,  ஐரோப்பாவைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே வந்தார்.  மெல்ல இந்தியாவைப் பற்றி கிண்டலடித்து பேச ஆரம்பித்தார். அவரின் பேச்சில் இந்தியாவோடு ஐரோப்பாவை ஒப்பிட ஆரம்பித்தார்.
 
இந்த உரையாடலில் நீங்கள் இரண்டு விசயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
 1 . எங்களின் பேச்சில் லாஜிக் பார்க்கக் கூடாது.
2 . இந்தியனாக நாட்டைக் காப்பாற்ற பேசியதாக மட்டுமே பார்க்க வேண்டும். நகைச்சுவையாகப் பதில் சொல்லி, நண்பரிடம் நக்கலாகப் பேசி அவர் வாயடைக்க முயற்சி செய்தோம்.
 நாங்கள் ஒரு ரயில் நிலையத்தில் வந்தமர்ந்த போது நடந்த உரையாடல் அனுபவம் கீழே:
 
 ஐரோப்பிய நண்பர்: see… எங்கள் நாட்டில் ரயில் மணிக்கு(TGV எக்ஸ்பிரஸ்) 575 கிலோ மீட்டர் வரை செல்லும். ஏன் உங்கள் நாட்டில் இன்னும் technology developement ஆகவில்லை எனக் கேட்டார்?
 
நாங்கள்: எங்களுக்கு உங்கள் நாடு போல இந்த மாதிரியான technology developement  தேவையில்லை. எங்கள் ஊரில் ரயில் வருவது கண்ணில் தெரிந்த பிறகும் கூட, நாங்கள் railway track ஐ easy ஆக cross செய்து விடுவோம்.  உங்கள் நாட்டில் யாராவது ரயில் கண்ணுக்கு  தெரிந்த பிறகு cross செய்ய முடியுமா? நண்பர் புன்னகைத்தார்… நக்கலான பதில் என்று அவருக்குப் புரிகிறது. ஆனால் பதில் இல்லாமல் அடுத்த விசயத்திற்குச் சென்றார்.
 நாங்கள் அனைவரும் Electrical Engineers என்பதால், பேச்சை electrical பக்கம் திருப்பினார் ஐரோப்பிய நண்பர். நாங்களும் விடுவதாக இல்லை.
 
ஐரோப்பிய நண்பர்: see… ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், மின்சாரம் உபரியாக இருக்கிற வகையில் நாங்கள் power plant & Substation வைத்து உள்ளோம். மேலும் ஒரு transformer லிருந்து 30 %  Load மட்டுமே உபயோகிக்கிறோம்.  உங்கள் நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதே… என்றார்.
 
நாங்கள்: எங்கள் நாட்டில் ஒரு transformer லிருந்து 100 % Load எடுப்போம். சில நேரங்களில் over load கொடுத்து கூட மின்சாரத்தை உபயோகிப்போம்.  manufacturer recommendation ஐ முழுமையாகப் பயன்படுத்துவது என்பது புத்திசாலித்தனமா… வெறும் 30 % Load எடுப்பது புத்திசாலித்தனமா? எங்கள் நாட்டில் தேவைக்கு மட்டுமே மின்சாரம் உபயோகிக்க வேண்டும் என்று எங்கள் அரசுகள் செயல்படுகின்றன. உங்களைப் போல அனாவசியமாக power plant உருவாக்குவதில்லை.  உங்களுக்கு effective utilisation என்பது என்ன என்றே தெரியவில்லை என்று மீண்டும் நக்கலாகப் பதில் சொல்ல, நண்பர் வேறு கேள்விக்கு சென்றார்.
 
ஐரோப்பிய நண்பர்: See… They are making a new house line from the utility line. But, here all  safety rules are followed என்றார். இந்த சின்ன வேலைக்கு கூட shutdown எடுத்து முறையாக வேலை செய்வோம் என்றார். உங்கள் நாட்டில் ஏன் இதுபோல  எந்த procedure  -ரும் பின்பற்றவில்லை என்றார்.
 
 நாங்கள்: You know, Our technicians are talented. They don’t need shutdown for this kind of small activity. They will do the connection in the Live Condition ( போலில் ஏறி insulated Screw driver இல்லாமலேயே வேலை செய்வார் இந்திய ஏலேக்ட்ரிசியன்.. ) என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், இதுமாதிரி சின்ன சின்ன வேலைக்கெல்லாம் shutdown எடுத்துச் செய்வது வேலை தெரிந்தவனுக்கு அழகா… என்று சொல்ல, நண்பர் இனி நாம் electrical பற்றி பேச வேண்டாம். நீங்கள் வேண்டுமென்றே மடக்கும் விதமாக பேசுகிறீர்கள் என்றார்.
 பொது விசயங்களைப் பற்றி எங்கள் பேச்சு சென்றது.
 
ஐரோப்பிய நண்பர்: See… பொதுவாக நாங்கள் எங்கள் நாட்டைத் தவிர வேறெந்த நாட்டிலும் வேலை தேடுவதில்லை, மற்றும் வெளிநாடுகளில் வெகு சிலரைத் தவிர வேலை செய்ய விரும்புவதில்லை. ஆனால் உங்கள் நாட்டில் ஏன் பெரும்பாலும் எல்லோரும் வெளிநாட்டில் வேலை செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்றார்.
 
நாங்கள்: திறமையான மக்கள் உள்ள நாடுகளில் இருந்தே, ஒவ்வொரு நாட்டிற்கும் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். உங்கள் நாடு உட்பட எல்லா நாடுகளுக்கும் எங்கள் அறிவு தேவைப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை, எங்களிடம் போதுமான அறிவு இருப்பதால் பொதுவாக நாங்கள் ஐரோப்பா மட்டுமல்ல, எந்த  நாட்டினனையும் வேலைக்கு அழைத்து வருவதில்லை என பதில் சொல்ல நண்பர் அடுத்த கேள்விக்குத் தாவினார்.
 
ஐரோப்பிய நண்பர்: எங்கள் நாட்டில் பெண்கள் எவ்வளவு சுதந்திரமாக முடிவெடுக்கிறார்கள்.. உங்கள் நாட்டைப் பொறுத்தவரை பெண்களை அடக்கி வைத்திருக்கிறீர்கள். பெண் சுதந்திரம் என்பதே இல்லையே என்றார்.
 
நாங்கள்: அதனால்தான் எங்கள் நாட்டில் குடும்பங்கள் குடும்பங்களாக இருக்கின்றன. உங்கள் நாட்டில் பெண் சுதந்திரம் என்ற பெயரில் ஆண்களை எளிதாக மாற்றிக் கொள்ள முடிகிறது. எங்கள் நாட்டைப் பொறுத்தவரையில் தேவையான அளவு பெண்களை மதிக்கிறோம். அதனால் தான் உலகம் போற்றும் குடும்ப வாழ்க்கை என்பதன் அடையாளமாக இந்தியா விளங்குகிறது என்று பதிலடி கொடுத்தோம்.
 
ஐரோப்பிய நண்பர் என்னால் உங்களுடன் பேசி ஜெயிக்க முடியாது. இந்தியர்கள் பேசுவதில் மட்டும் வல்லவர்கள் அல்ல அறிவிலும்   என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
 
ஐரோப்பியரே ஒழிய எங்களை மிக அருமையான முறையில் உபசரித்தார். நண்பர், அன்போடு எங்களை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் சென்றார். இன்று வரை நாங்கள் அவரிடம் பேசுகிறோமோ, இல்லையோ அவர் எங்களுக்கு மாதம் ஒருமுறையேனும் தொடர்பில் உள்ளார்.
 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s