வத்தக் குழம்பு

 

 

 

 

 

 

தேவையானப் பொருட்கள்:
புளி – ஒரு கைப்பிடி அளவு
சின்ன வெங்கயம் – 10
பூண்டு – 10
சுண்டைக்காய் வத்தல் – ஒரு கைப்பிடி அளவு
மணத்தக்காளி வத்தல் – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்(நல்ல எண்ணெய் தான் இதற்கு நன்றாக இருக்கும்.)
மஞ்சள் பொடி – சிறிது
கடுகு – சிறிது
உளுந்து – சிறிது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
வறுத்து அரைக்க :
காய்ந்த மிளகாய் – 5  அல்லது 6
மல்லி விதை – 2  டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வெந்தயம் – 10 எண்ணம்
 
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மல்லி விதை,துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் , காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் நன்கு சிவக்க(பிரவுன்) வறுக்க வேண்டும்.  (பிரவுன் கலராக  வறுத்தால் தான் குழம்பு நல்ல பிரவுன் கலராக வரும்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு 3 அல்லது 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய (மசிய) அரைத்து 
கொள்ளவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டக்காய் வத்தல்,மணத்தக்காளி வத்தல் இவற்றை தனித் தனியாக வறுத்து பின்பு வாணலியில் இருந்து எடுத்து தனியாக எடுத்து விடவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அதே எண்ணையில் கடுகு, உளுந்து தாளிக்கவும். 
பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பிறகு அதனுடன் புளி, உப்பு சேர்த்து கரைத்து வடிகட்டி வதங்கிய பூண்டு,வெங்காயத்துடன் சேர்த்து விடவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.
இதனுடன் அரைத்த விழுது சேர்க்கவும்.
கொதிக்கும் போது வறுத்து வைத்த வத்தல் வகைகளை சேர்க்கவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கொதிக்கும் பொழுது 2 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் விடவும்.
 
நன்கு வற்றிய பிறகு இறக்கவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சூடான சாதத்துடன் வத்தக் குழம்பு, நல்ல எண்ணெய் விட்டு பிசைந்து,  சுட்ட அப்பளத்துடன் சாப்பிடலாம். மிக அருமையாக இருக்கும்.
 
சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தலுக்கு பதிலாக முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்தும் சேர்த்தும் செய்யலாம்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s