விஸ்வநாதன் ஆனந்த் – சதுரங்கம்

This gallery contains 1 photo.

ஆறாம் நூற்றாண்டில் குப்தர்களின் காலத்தில் இந்தியாவில் தோன்றிய சதுரங்கம் என்ற விளையாட்டின், 2012 ஆம் ஆண்டுக்கான  உலக சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக ஆனந்த் பெற்றுள்ளார். நேற்று நடந்த போட்டியில் இஸ்ரேலின் ஜெல்பாண்டை வீழ்த்தி, மீண்டும் மகுடம் சூடினார். இந்தியாவில் பெரும்பாலும் தனி நபர் விளையாட்டில் ஒருமுறை உலக சாம்பியனாகவோ ஒலிம்பிக் சாம்பியனாகவோ வந்தவர்கள் மீண்டும்  அதே இடத்தைத் தக்க வைத்தார்களா என்றால் அது மிகப் பெரிய கேள்விக் குறி!. அவ்வகையில் ஆனந்த் மட்டும் விதிவிலக்கு.   ஆனந்த் FIDE என்ற பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு நடத்திய போட்டியில் ஐந்து முறை( ஆண்டு 2000, 2007,2008, 2010 & 2012) உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    சதுரங்க பதக்கங்கள்: (AS PER விக்கிபீடியா) உலகின் அதிவேக சதுரங்க வீரர் என்ற பட்டத்தை பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு நடத்திய போட்டியின் மூலம் 2003 – ல் பெற்றார். 2003 அதிவேக … Continue reading

மல்லித் துவையல்

This gallery contains 2 photos.

  தேவையானப் பொருட்கள்:  மல்லி இலை – 1 கட்டு சிகப்பு மிளகாய் – 7  அல்லது 8 துண்டு பெருங்காயம் – சிறிய துண்டு உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் புளி – சிறிய துண்டு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை: மல்லி இலையில் உள்ள குப்பைகளை நீக்கி விட்டு, தண்ணீரில் நன்கு அலசி, பின்  பொடியாக அறிந்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வத்தல்,துண்டு … Continue reading

கணம் ஏற்படுத்திய ரணம் – கவிதை

This gallery contains 2 photos.

காதலை சொல்லிய தருணம்… நீங்கள் என் ‘அண்ணா’ மாதிரி என்று அவள் சொல்லிய கணம்…..   எனக்கானவள் நீ என்றெண்ணிய பொழுது எவனோ ஒருவனுடன் நீ பைக்கில் சென்ற கணம்….   உருகி உருகி காதலித்த நீ திருமணம் இன்னொருவனுடன் எனச் சொல்லிய கணம்….   இரை கிடைக்கிறது என்றெண்ணி தூண்டிலில் சிக்கிய மீனின் அந்தக் கணம்….   வெளிநாடு வேலை கிடைத்தும் விசா கிடைக்கா கணம்…   அறுவடை – நாளை மகசூல் கிடைக்கும் என்றெண்ணிய வேளை! மழை, சேதம் … Continue reading

சுண்டைக்காய் மசால் வடை

This gallery contains 6 photos.

  தேவையானப் பொருட்கள்:   கடலைப்  பருப்பு –  1  கப் சுண்டைக்காய் – 1 /2 கப் பச்சை மிளகாய் – 2 சிகப்பு மிளகாய் – 2 சோம்பு – 1 டீ ஸ்பூன் சின்ன வெங்காயம் –  15 பூண்டு – 5 அல்லது 6 கறிவேப்பிலை – 1 கொத்து மல்லி இலை – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு       … Continue reading

T .ராஜேந்தரும் சிஷ்யப் பிள்ளையும்

T . ராஜேந்தர் பப்லூவை தனது படத்தில் அறிமுகம் செய்ய, பப்லூவை நடித்துக் காண்பிக்க சொல்லி இருக்கிறார். இந்த நகைச்சுவைக் காட்சியை நீங்கள் பலமுறைக் கண்டிருக்கலாம். இருந்தாலும், மீண்டும் ஒருமுறை நீங்கள் ரிலாக்ஸ் ஆக விரும்பினால் கீழ்க்காணும் காணொளியை கண்டு மகிழுங்கள். பெரும்பாலும், தனது குருநாதரைப் பற்றி உண்மையில் எந்த நடிகரும் இதுபோல செய்து காண்பிக்க மாட்டார். பப்லூ செய்து காண்பித்திருக்கிறார். அது ஒருவேளை T . ராஜேந்தர் என்பதால் என்றே நினைக்கிறேன். பப்லூ, ராஜேந்தர் பற்றி … Continue reading

சவுதி அரேபியா சில தகவல்கள்

This gallery contains 1 photo.

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கிறது. அது அவர்கள் நாளிதழ்கள் வாயிலாகவோ, நண்பர்கள் வாயிலாகவோ, இன்ன பிற ஊடக வாயிலாகவோ அறிந்தவை. பொதுவாக அமெரிக்கா என்றால் மனதிற்குள் அது ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றும். சவுதி அரேபியா என்றால், அது குறித்த எண்ண ஓட்டங்கள் உலக பார்வையில் தரக் குறைவாகவே இருக்கிறது. அது பல இடங்களில் தன்னுடைய சட்ட திட்டங்களிலும், மனிதாபிமானத்திலும் கடுமையான உலக விமரிசனத்துக்கு உள்ளாகியிருப்பது உண்மைதான் என்றாலும், சவுதி அரேபியா, தன் நாட்டின் பெருமையாக கொண்டுள்ள விடயங்களை, அதுகுறித்து நான் அறிந்த விடயங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். உலக மனிதர்களில் ஒருவனாக எனக்கும் பெரும்பாலான சவுதி அராபிய சட்டதிட்டங்களிலும் மற்ற … Continue reading

முறுக்கு செய்வது எப்படி?

This gallery contains 4 photos.

தேவையானப் பொருட்கள்: அரிசி மாவு – 4 கப் உளுந்து மாவு – 1 டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை மாவு – 1 கப் உப்பு – தேவையான அளவு எள் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை – 1 டேபிள் ஸ்பூன்  செய்முறை: உலர்ந்த அரிசி மாவை அப்படியே இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக விடவும். (தண்ணீர் சேர்த்து பிசைய  வேண்டிய அவசியம் இல்லை) வெறும் வாணலியில் எள் லேசாக … Continue reading

IPL 5 அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணிகளாக நீங்கள் கருதுவது?

மேற்கூறிய நான்கு அணிகள் இல்லை என்றால், நீங்கள் கருதும் அணிகள் எவை என்பதை மறுமொழியில் தெரிவியுங்கள்.    

வழக்கு எண் 18 /9 – விமர்சனம்

This gallery contains 1 photo.

மூன்று விடயங்களுக்காக இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு நமது பாராட்டுக்களைத் தாராளமாகத் தெரிவிக்கலாம். முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டும் வைத்து எடுக்கப்பட்ட தைரியத்திற்காக மனம் திறந்த பாராட்டுகள். சில நடிகர்களாவது, கதைக்கு மெருகூட்ட, அனுபவம் வாய்ந்த  நடிகர்களை, நடிகைகளை, இயக்குனர்கள் கையாள்வது யாவரும் அறிந்த விடயம். ஆனால் எல்லா கேரக்டரும் புதுமையானவர்களைக் கொண்டு கையாண்டமைக்கு இயக்குனருக்கு  ஒரு பூங்கொத்து பார்சல்…   விளிம்பு நிலை (ஏழை ஹீரோ, ஹீரோயின்), நடுத்தர வர்க்கம் ( மற்றொரு ஹீரோயின்), உயர்தர வர்க்கம் (மற்றொரு ஹீரோ), முத்தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையை ஓரிடத்தில் கொண்டு வந்து குவியச் செய்தமைக்கு ஒரு சொட்டு. சதையையும், தொழில் நுட்பத்தையும், பெரிய பட்ஜெட்டையும் நம்பாது, தன் கதையையும் திறமையையும் நம்பி படம் எடுத்தமைக்காக மனமார்ந்த பாராட்டுகள்.   கதைக்கு வருவோம். “பழி ஓரிடம் பாவம் ஓரிடம்” என்பார்களே அதுதான் கதையின் … Continue reading

அடை தோசை

This gallery contains 6 photos.

தேவையானப் பொருட்கள்: இட்லி அரிசி அல்லது பச்சரிசி – 2 கப் துவரம் பருப்பு – 2 கப் கடலைப் பருப்பு – 1 /2  கப் மிளகு – 2 டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய்- 7 அல்லது 8 (காரத்திற்கு தகுந்தாற்போல் கூட்டியோ குறைத்தோ கொள்ளவும்). துண்டு பெருங்காயம் – சிறிது (இல்லாவிட்டால் தூள் பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்). இஞ்சி – ஒரு சிறிய துண்டு உப்பு – தேவையான அளவு தாளிக்க: கடுகு … Continue reading