அந்த மாதிரி ஜோக்

 
கேள்வி: பழக்க தோஷம்…. பழக்க தோஷம்னு ….சொல்றாங்களே.. அப்படின்னா என்ன?
 
 
பதில்:  ஒரு கணவனும் மனைவியும் படுக்கை அறையில் இருந்த போது, யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டவுடன், மனைவி அய்யய்யோ….அய்யய்யோ….. என் புருஷன் வந்துட்டான்னு கத்த, கணவன் ஐயோ…. உன் புருஷன் வந்துட்டானா… என்று பதறி அடித்துக் கொண்டு ஜன்னலைத் திறந்து விட்டு, எகிறி குதித்து ஓடினானாம். இதுதான் பழக்கதோஷம்!.
 
 
அடுத்த ஜோக்கைப் படிச்சிங்கன்னா…. நல்ல குடும்பன்னா என்னன்னு உங்களுக்கு புரிஞ்சிடும்.
 
 
கேள்வி: அவுங்க குடும்பம், நல்ல குடும்பம்…நல்ல குடும்பம்ன்னு சொல்றாங்களே… அப்படின்னா என்னங்க?
 
 
பதில்: ப்ரியா என்ற பொண்ணு அனீஸ் என்ற பையனை காதலிச்சா… அவனைக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்கிற விஷயத்தை,  தந்தைகிட்டே சொன்னாள். அவரோ “சாரிம்மா…. நீ அவனை மணக்க இயலாது. ஏன்னாக்க… அவன் உனக்கு அண்ணன் முறை! ஆனால், உன்னோட அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அதனால இத அவகிட்ட சொல்லிடாத. அவகிட்ட இது குறித்து மூச்சு விடாதன்னு சொல்லிவிட்டார்.
 
 ப்ரியாவும் ஒரு நல்ல மகளா அனிஷை கழட்டி விட்டுட்டு, தனுஷ்ன்கிற பையனைக் காதலிக்க ஆரம்பித்தாள். சில மாதங்களில் மீண்டும் அப்பாவிடம் வந்து, அப்பா… நான் தனுஷைக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்.. உங்க அபிப்ராயம் என்னன்னா?
 
 
அப்பாவோ மறுபடியும் ” சாரிம்மா.. அந்த தனுஷும் உனக்கு அண்ணன் முறைதான் வரும். தயவுசெய்து இத உன் அம்மாகிட்ட சொல்லிடாத… அவ என்னைத் தப்பா நினைச்சுக்குவாள்ன்னு” கெஞ்சினார்.
 
 
ஆனால் ப்ரியாவோ, தன் தாயிடம் போய்க் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லன்னு உணர்ந்தவள், தாயிடம் போனாள். அம்மா… அப்பாகிட்ட.. ஏற்கனவே.. நான் போய் அனீஸ், தனுஷ் இருவருடன் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தைத் சொன்னேம்மா… அப்பா.. சொல்றாரு, ரெண்டு பேருமே உனக்கு அண்ணன் முறை வேணும்… அதனால.. கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்கிறாரும்மா… ஏம்மா… என்றாள்?
 
 
ப்ரியாவின் தாய் சொன்னாளாம்” என் கண்ணு… அனீஸ் அல்லது தனுஷ் … ரெண்டு பேர்ல.. யாரைக் கல்யாணம் பண்ணனும்னு நீ நினைக்கிறாயோ.. அவங்களையே கல்யாணம் பண்ணிக்கோ…”. “ஏன்னா.. உங்க அப்பாதான் என் கணவர்… நான் அறிந்தவரை அவருக்கு உன்னுடன் எந்த உறவுமுறையும் கிடையாது!ன்னு ” குண்டைத் தூக்கிப் போட்டாளாம்.  மேலும் மகளிடம்” அப்பாவுக்கு நீ அவருக்கு எந்த உறவுமுறையும் கிடையாதுங்கிற விஷயம் இதுநாள் வரை தெரியாதும்மா… தயவு செய்து நீ இத அவருகிட்ட சொல்லிடாதம்மா..” என்று கெஞ்சினாள்.
 
 
ஆகையால், இவர்கள் போல் அல்லாத எல்லாக் குடும்பமும் நல்ல குடும்பம்தான்கிறதை மனசுல.. வச்சுக்கோங்க..
 
 
பத்து வருடங்களுக்கு முன்னால், எப்போதோ.. பாக்யாவில் படித்ததாக ஞாபகம்.
 கேள்வி: புரிஞ்சுக்காமலே.. பேசுறதுன்னா என்ன?
 
பதில்: ஒரு மனைவி தன் கணவனோடு ஒருமுறை  கடற்கரைக்குச் சென்று இருந்தாள். அங்கு வந்த இன்னொரு ஜோடியைப் பார்த்தவள் கணவனிடம், அந்தா பாருங்க… அந்த பொண்ணுக்கு அவன் முத்தம் கொடுக்கிறான்.. நீங்களும் இருக்கிங்களே … என்றாளாம். அதுக்கு புருஷன் சொன்னானாம். ” எனக்கு அந்த பொண்ணுக்கு முத்தம் கொடுக்க ஆசைதான். ஆனால் அவளைப் பற்றி எனக்கு நல்லா தெரியாதேன்னு” சொன்னானாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s