உருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது?

 இந்து மத நூல்களிலும், எழுத்தாளர்களின் எழுத்துகளிலும், இணையதள வெளிகளிலும், நானறிந்த/நான் புரிந்து கொண்ட இந்து மதக் கோட்பாடுகளில் இருந்தும்தான் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளேன்.
  
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” – கந்தரனுபூதி
  
உருவ வழிபாடு, அருவ வழிபாடு என இரு முறைகளிலும் இறைவனை அடையலாம் என்பதே இந்து மார்க்கம் சொல்கிற கோட்பாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனித வாழ்வியலின் பிரதிபலிப்பாகவே இந்து மதம் விளங்குகிறது. இந்தத் தெளிவு இருந்தால் மட்டும் போதும், இந்து மதம் வழிகாட்டுகிற நெறிமுறைகளை அறிந்து கொள்ள!.
 
 
இந்துமரபின் ஒரு வழிபாட்டு முறைதான் உருவ வழிபாடு. இந்துக்களின் பழங்குடிப் பண்பாட்டில், செயல் தெய்வ வழிபாடுகள்,  குல தெய்வ  வழிபாடுகள், மூத்தார் வழிபாடுகள், நீத்தார் வழிபாடுகள் என நான்கு வழிகளில் வணங்கி வந்தார்கள். இந்த வழிபாட்டு முறைகளே இறைவனுடன் அவர்களை நேரடி தொடர்பில் வைத்திருந்தன.
 
  
செயல் தெய்வ வழிபாடுகள் என்பது கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு லக்ஷ்மி, வீரத்திற்கு பார்வதி என்று ஒவ்வொரு கடவுளையும் அவர்களின் செயல் முறைகளைப் பொறுத்து வணங்கிவந்தார்கள்.
 
குல தெய்வ வழிபாடுகள் என்பது மரங்கள், நீர்நிலைகள், மிருகங்கள், பறவைகள் போன்றவற்றை போற்றினார்கள். இறைவனின் படைப்பில் தன்னை வாழ்விக்கும் இயற்கையையும் இந்துமதம் வணங்கி வந்தது. பிற்காலத்தில் அவைகளும் தெய்வ வழிபாட்டின் ஒரு வழி வகையாக உருவெடுத்திருந்தது.
 
மூத்தார் வழிபாடுகள் என்பது உயிருள்ள தாய் தந்தையரையோ, உயிருள்ள தாத்தா பாட்டியையோ வணங்கி வந்தனர். பெற்ற தாய்தந்தையை வணங்குவதை , கண்முன்னால் இருக்கும் உருவத்தில் தோற்றமளிக்கும் அவர்களை வணங்குவதை இந்துமதம் பெருமையாகக் கருதுகிறது.
 
நீத்தார் வழிபாடுகள் என்பது இறந்து போன நம் முன்னோர்கள்தான் தங்களை வழி நடத்துவதாகவும், அவர்களின் நல் ஆசியும் நம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கையில் அவர்களின் உருவங்களை வைத்தும் வணங்கி வந்தார்கள்.
 
 
மேற்கூறிய நான்கு வழிவகைகளை உருவ வழிபாட்டின் மூலமாக வணங்கி வந்தார்கள். இந்த நான்கு நிலைகளிலும் முதலில் உருவம்தான் வழிபடப்படுகிறது, அதன் பின்னரே அந்த உருவம் ஒரு கருத்துருவாக மாற்றம் பெறுகிறது. அந்த உருவத்தின் இயல்புகள் மெல்ல மெல்ல திரட்டப்பட்டு ஒரு கருத்துருவமாக அவர்கள் அனைவராலும் உணரப்படுகின்றன. அந்த உருவம் அந்த கருத்துருவத்தின் அடையாளமாக ஆகிறது. அந்த உருவத்தைப்பார்த்தாலே அந்த கருத்துநிலைகள் மனதில் உருவாகின்றன. அதுவன்றி ஏற்கனவே மனதில் உருவான ஒரு கருத்துக்கு பருவடிவப் பிரதிநிதியாக உருவம் கற்பனைசெய்யப்படவில்லை. இதுவே மானுட மனத்தின் இயல்பான செயல்பாடு.
 
 
இறைவனை காண்பதற்கும், அடையவும்  அருவ வழிபாடு என்பது வேதாந்தம் சொல்கின்ற தளமாகவும், உருவ வழிபாடு சாமான்ய மனிதர்களின் தளமாகவும் பார்க்கப் படுகிறது.
 
 
சாமான்ய மனிதனின் பார்வைக்காகவே லிங்க வடிவில் இருந்த சிவன், சிவ நடனம் அறிந்தபோது நடராஜனாக உருவமெடுக்கிறார். ஒருவரிடம் வீர பாண்டியக் கட்ட பொம்மன் என்ற மன்னன் தோற்றத்தில் எப்படி இருப்பார் என்று கேட்டால், சிவாஜியின் வீர பாண்டியக் கட்டபொம்மன் அவன் கற்பனையில் வருவார். அவ்வாறுதான் சிவ நடனத்தை எண்ணிப் பார்த்தால் நடராஜர் உருவம் நினைவுக்கு வருகிறது. சாமான்ய மனிதனால், அவன் கற்பனையில் வருகிற உருவமாகவே இறைவன் அடையாளப்படுத்தப் படுகிறார். அப்பர் என்ற திருநாவுக்கரசர் எப்படி இருப்பார் என்று ஒருவனிடம் கேட்டாலும் அவன் கற்பனையில் மீண்டும் சிவாஜி, அப்பர் வேடத்தில் எவ்வாறு தோன்றினாரோ அவ்வாறேக் காட்சி அளிக்கிறார்.
 
 
சாமான்ய மனிதனின் பார்வையில் கடவுள் இரு வடிவங்களில் அவன் கற்பனையில் தோற்றமளிக்கிறார். ஒன்று இன்னொருவர் வழிகாட்டுகிற உருவத்தின் அடிப்படையில், அல்லது தன் கற்பனையில் விளைந்த உருவத்தின் அடிப்படையில்.
 
 
விக்ரக வழிபாடு என்பது கிரகிப்பதற்கும் கிரகித்ததைச் சொல்வதற்குமான வழி அது. என்னுடைய அறிதலை பிறருக்குச் சொல்லி பொதுவான அறிவாக ஆக்குவதற்கான வழிமுறைதான் அது.
 
 
முதல் தளமாக உருவ வழிபாடும் இரண்டாம் தளமாக உருவ வழிபாட்டையும் அருவ வழிபாட்டையும் இணைக்கும் பாலமாக சைவ வைணவக் கொள்கைகளும் மூன்றாம் தளமாக வேதாந்தம் மூலமாக அருவ வழிபாடும் இந்து மதத்தில் இருந்து வருகிறது.
 
 
உருவ வழிபாட்டில் இறைவன் ஏன் வெவ்வேறு உருவங்களில் காட்சி அளிக்கிறார்? ஒரு சிறுவனுக்கு எத்தகைய இறைவனைப் பிடிக்கும் என்று கேட்டால், அழகாய்த் தோற்றமளிக்கும்  முருகனைக் கைகாட்டுகிறான். இரவு வேட்டைக்குப் போகிறவனுக்கு ஈசன் சுடலைமாடனாகக் காட்சி அளிப்பதே பிடிக்கும். ஆகையால்தான் இறைவன் பல வடிவங்களில் பல உருவங்களில் சாமான்யனுக்கு புலப்படுகிறான்.
 
 
முதலில் குறிப்பிட்டு உள்ளது போல், மனித வாழ்வியலின் பிரதிபலிப்பை உள்வாங்கிக் கொண்டதாகவே இந்து மதம் எனக்குத் தோன்றுகிறது.
 
 
அருவ வழிபாட்டுக்கு முந்தைய நிலையே உருவ வழிபாடு என்ற பொது அறிவு ஏற்றுக் கொள்கிற பட்சத்தில் எவர் ஒருவரும் உருவ வழிபாட்டுக்கு மாற்றானக் கருத்துகளைக் கொண்டிருக்க மாட்டார்கள். ” உருவாய் அருவாய் உளதாய் இலதாய்” என்ற பாடலின் பொருளை உள்ளடக்கிய எல்லா நிலைகளுக்குமாய் இருக்கிற இறைவன் உருவ வழிபாட்டையோ அருவ வெளிப்பாட்டையோ எவ்வகையான வழிபாட்டு முறைக்கும் தலைசாய்வான். ஆதலால் உருவ வழிபாடோ அருவ வழிபாடோ, இரண்டு வழிபாட்டு முறைகளுக்கும் இந்து மதத்தில் இணையான இடமே!
 
 

One response

 1. VAZHIPADU ENBATHU INDHU MATHATHIL ARAMBA PAADAM.
  THANNAI ARIVATHE OVVORU INDHUVIN THANITHTHUVA ILATCHIYAM.
  ” THELLATH THELINDHARKU SEEVAN SIVALINGAM ” – IDHU THIRUMANTHIRAM
  SOLLUM ARANERI.
  SUMMA IRU! SOLLARA ! – ENDRU THANNAI PETCHU INDRI AMAITHIYAGA IRUNDU IRAIVANAI UNARA SONNATHAGA ” KANDHAR ANUBOODHI ” ENDRA PADAL THOGUTHIYIL ARUNAGIRI NAATHAR
  KURIPPIDUKIRAAR. ANDHA THOGUTHIYIL IRUTHIP PAADALTHAN INDHA
  “URUVAAI ARUVAAI ULATHAI ILATHAAI ” ENDRA PADAL KURIPPIDAPPATTULLATHU.
  G. MURUGAN, RAMANATHAPURAM

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s