வழக்கு எண் 18 /9 – விமர்சனம்

மூன்று விடயங்களுக்காக இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு நமது பாராட்டுக்களைத் தாராளமாகத் தெரிவிக்கலாம்.
  1. முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டும் வைத்து எடுக்கப்பட்ட தைரியத்திற்காக மனம் திறந்த பாராட்டுகள். சில நடிகர்களாவது, கதைக்கு மெருகூட்ட, அனுபவம் வாய்ந்த  நடிகர்களை, நடிகைகளை, இயக்குனர்கள் கையாள்வது யாவரும் அறிந்த விடயம். ஆனால் எல்லா கேரக்டரும் புதுமையானவர்களைக் கொண்டு கையாண்டமைக்கு இயக்குனருக்கு  ஒரு பூங்கொத்து பார்சல்…
  2.   விளிம்பு நிலை (ஏழை ஹீரோ, ஹீரோயின்), நடுத்தர வர்க்கம் ( மற்றொரு ஹீரோயின்), உயர்தர வர்க்கம் (மற்றொரு ஹீரோ), முத்தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையை ஓரிடத்தில் கொண்டு வந்து குவியச் செய்தமைக்கு ஒரு சொட்டு.
  3. சதையையும், தொழில் நுட்பத்தையும், பெரிய பட்ஜெட்டையும் நம்பாது, தன் கதையையும் திறமையையும் நம்பி படம் எடுத்தமைக்காக மனமார்ந்த பாராட்டுகள்.
 
கதைக்கு வருவோம். “பழி ஓரிடம் பாவம் ஓரிடம்” என்பார்களே அதுதான் கதையின் ஒற்றை வரி. நீதி என்பது பணக்காரர்களுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும் தான் என்பதை காவல்துறை அதிகாரியின் செயல்பாடுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் நிரூபித்து விடுகின்றன.
 
ஓர் ஏழைப்பெண்ணின் (ஜோதி ) மீது ஆசிட் ஊற்றப்பட்டு, அவள் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுகிற காட்சியில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. அவளைப் பெற்ற தாய், தன் மகள் மீது ஆசிட் ஊற்றியவன், வேலு என்று அழுது புலம்ப வேலு காவல்துறையால் விசாரனைக்குள்ளாகிறான். வேலு தனது மொத்தக் கதையையும் சொல்ல, ஜோதி வேலை செய்த வீட்டில் உள்ள பெண்ணான ஆர்த்தி விசாரனைக்குள்ளாகிறாள். ஆர்த்தியின் வாக்கு மூலத்தின் வழியாக, அதே குடியிருப்பில் வசிக்கும் உயர்தர வர்க்கத்து இளைஞன் தினேஷ் காவல்துறையின் கேள்விக்கணைகளுக்கு பதில் சொல்ல முடியாமல், உண்மையை ஒத்துக்கொள்ள, தினேஷின் தாய், மந்திரி மூலம் காவல் துறை உதவியோடு தன் மகனைக் காப்பாற்றுகிறாள். வேலு, காவல்துறை அதிகாரி குமாரவேலுவின் நயவஞ்சகப் பேச்சுக்கு அடிமையாகி, தன் காதலி நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தவறைத், தான் செய்ததாக ஒத்துக் கொள்கிறான். உண்மை தெரிய வர, ஜோதி என்ன முடிவெடுக்கிறாள். யார் தண்டனையை அனுபவிக்கிறார்கள் என்பதோடு படம் நிறைவு பெறுகிறது.
 
ஒரு நடிகனின் நடிப்பு என்பது அதைக் கையாள்கிற சிற்பியான இயக்குனரின் கையில்தான் உள்ளது என்பதை பறைசாற்றுவதில் இப்படமும் ஒரு சாட்சி.  ராஜேஷ் குமார் நாவல் படித்திருக்கிறீர்களா? இப்படத்தின் சிறப்பு என நான் கருதுவது, ஒரு நாவலைப் போல பயணிக்கிறது. பதினைந்து அத்தியாயத்திற்கு இரு வேறு தள மனிதர்களின் வாழ்வை கடைசி ஐந்து அத்தியாயத்தில் கொண்டு வந்து இணைப்பது போல அமைத்துள்ளதும், காணொளி என்பதால் சில காட்சிகள் ( காரைத் தள்ளுவது, கதவைத் திறப்பது, இன்னும் சில காட்சிகள்) என அவற்றை ஒருங்கிணைத்த விடயத்திலும் இயக்குனரின் ஹோம் வொர்க் நன்கு தெரிகிறது.
 
 
தனித் தனியாக ஒவ்வொரு ஆர்டிஸ்டாக பாராட்டுவதற்குப் பதிலாக எல்லோரும் நன்கு நடித்துள்ளார்கள் என்று எளிதாக சொல்லி விட்டுப்  போய் விடவேண்டியதுதான்!. காரணம் அந்த அளவுக்கு ஒவ்வொரு ஆர்டிஸ்டின் பெர்போர்மன்சும் உள்ளது.
 
” ஒரு குரல் கேட்குது முன்னே” பாடல் இன்னும் பல வருடங்களுக்கு முனங்கப்படும்.  தேவையில்லாமல் பாட்டு வைக்காமல் இருந்ததும் கதையோடு நம்மைப் பயணிக்க வைக்கிறது. நடிப்பு + திரைக்கதை+ இயக்கம் மூன்று துறைகளும் மேலோங்கி நிற்கிற ஒரு படத்தில் மற்ற துறைகள் கவனிக்கப் படவேண்டிய அவசியமில்லாமல் போவதற்குக் காரணம் அதற்கான கதைக்களம் என்றே கருதுகிறேன்.
 
அடுத்த சில நாட்களுக்கு பாலாஜி சக்திவேலுவின் படத்தை நிறைய பேர் மெச்சுவார்கள். ஒரு சிலர் இம்மாதிரிக் கதையிலும் குறை கண்டுபிடித்து அதையே முன்வைத்துத் தன் எழுத்துத் திறமையை முன்வைக்க முயல்வார்கள். அதற்காக மைனஸ் இப்படத்தில் இல்லையென்று சொல்லிவிட முடியாது.  
 
அங்காடித்தெரு படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் விக்ரமன் பட ஸ்டைலில் முன்னேறி வாழ்க்கை நடத்துவது போலக் காண்பிக்காமல் யதார்த்தமாக தெருவில் வியாபாரம் செய்து கொண்டு, இரு இளம் ஜோடிகள் வாழ்க்கையைத் துவங்குவதாகக் காண்பித்தார் இயக்குனர் வசந்தபாலன். அங்காடித் தெருவில் வருவது போல இப்படத்திலும் கூத்தாடி சிறுவன், விபச்சாரப் பெண் என ஆங்காங்கே காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பொறுத்தவரை கிளைமாக்ஸ் காட்சிகள் அனைத்தும், சாதா சினிமாவையே பிரதிபலித்தது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. ஆரம்பக் காட்சிகளும் பெரும்பாலும் எம்ஜிஆர் காலத்திலிருந்தே நாம் பார்த்துவருகிற காட்சிகள்தான்.
 
இவை அனைத்தையும் தாண்டி இப்படம் நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம், யதார்த்த வாழ்வில் நடக்கின்ற, நாளிதழ்களின் பெட்டிச் செய்தியை சிறந்த திரைக்காவியமாகப் படைக்கபட்டிருப்பதுதான்!. இறுதியாக ஒரு பூங்கொத்து…. IPL Season 5 நடந்து வருகிற இவ்வேளையில் இப்படம் வெளியிட்ட தைரியத்துக்கு லிங்குசாமிக்கு நமது வாழ்த்துகள். பொழுது போக்கு படங்களை எடுத்தாள்கிற ஒரு இயக்குனர், யதார்த்தப் படம் கொடுக்க முன்வந்தமைக்கும் ஒரு அழுத்தமான கைக்குலுக்கல்கள்!
 
சவுதி அரேபியாவில் இருப்பதால், தியேட்டரில் வந்த கமேண்ட் பற்றியோ, தியேட்டரில் படம் பாருங்கள் என்ற அறிவுரை எல்லாம் என்னால் வழங்க இயலாது. “ஆன்லைன் நெட்வொர்க் ” மூலமாகவே படம் பார்த்தேன். IPL மேட்ச் பார்த்துவிட்டு, நடுசாமம் வரை படம் பார்த்தமைக்காக வீட்டில் திட்டு வாங்கியதை மட்டுமே பகிர முடியும். திரை விமர்சனம் என்று தலைப்பில் வைக்காமல் விட்டதற்குக் காரணம், Laptopil படம் பார்த்ததுதான்…
 
குறிப்பு: திட்டி முடித்த பிறகு என் வீட்டில் கேட்ட விஷயம், படம் எப்படி இருக்கு என்பதுதான்!

2 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s