கணம் ஏற்படுத்திய ரணம் – கவிதை

காதலை சொல்லிய தருணம்…
நீங்கள் என் ‘அண்ணா’ மாதிரி
என்று அவள்
சொல்லிய கணம்…..
 
எனக்கானவள் நீ
என்றெண்ணிய பொழுது
எவனோ ஒருவனுடன்
நீ பைக்கில் சென்ற கணம்….
 
உருகி உருகி
காதலித்த நீ
திருமணம் இன்னொருவனுடன்
எனச் சொல்லிய கணம்….
 
இரை கிடைக்கிறது
என்றெண்ணி
தூண்டிலில் சிக்கிய மீனின்
அந்தக் கணம்….
 
வெளிநாடு
வேலை கிடைத்தும்
விசா கிடைக்கா கணம்…
 
அறுவடை – நாளை
மகசூல் கிடைக்கும்
என்றெண்ணிய வேளை!
மழை, சேதம்
ஏற்படுத்திய கணம்…
 
உழைப்பிற்கேற்ற
ஊதியம் கிடைக்காததை
எண்ணிய கணம்…
 
தவறெனத் தெரிந்தும்
தட்டிக் கேட்க
இயலாத கணம்…
 
நண்பனின் திடீர்
மரணச் செய்தி
அறிந்த கணம்…
 
சில கணம்
ஏற்படுத்திய
கனம் அதிகம்..
கணம் ஏற்படுத்திய
ரணமும் அதிகம்!
 
 
 
 
காதல்:
உனக்காக நான்
வாழ்கிறேன்
என்பதிலும்
உன்னில் நான்
 வாழ்கிறேன்
என்பதிலும் தான்
உண்மைக் காதல்
உன்னதக் காதலாகிறது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s