நண்பன் – கவிதை

This gallery contains 3 photos.

நண்பன்: விழி பார்க்க வாய்ப்பில்லா தேசத்திலிருந்தும் வழிகாட்டியாய் நீ! என்மீது பழி விழுந்த போது பழி ஏற்று பலியாகியவன் நீ! இழப்பு: என்னை மட்டும் இழந்தவளாய் திருமணக் கோலத்தில் நீ! எல்லாமும் இழந்தவனாய் நான்! தி.மு காதல் – தி.பி, காதல்: அர்த்தமில்லாமல் பேசிய தி.மு காதலைக் காட்டிலும் மௌனமான தி.பி காதல் வலிமையானது… நல்லவனாக நடித்துக் காட்டிய தி.மு காதலைக் காட்டிலும் சுய ரூபம் காட்டப்படுகிற தி.பி காதல் மேலானது!