வலி – வலிமை – காதல்

வலி:
கடந்து போன
காலமென்றாலும் …
கடிந்து சொன்ன
வார்த்தைகள் -நெஞ்சில்
படிந்து கிடக்கின்றன
எதையும் மறக்க
முடியாத வலியோடு….
வலிமை:
உன் கோபத்தைக்
காட்டிலும்
உன் மௌனமே
என்னைக் கட்டிப்போடுகிறது!
உன் பேச்சைக்
காட்டிலும்
உன் பார்வையே
என்னைக் கட்டிப்போடுகிறது!
காதல்:
தேகம்  பார்த்து
மலர்கின்ற காதல்
மோகம் கொள்வதால்
மோசம் போகிறது!
மனம் பார்த்து
வந்த காதல்
மணம் கொள்கிறது…
திருமணமும் கொள்கிறது!
காமம் -காதல்:
உடல் கவர்ச்சி
காமம்…
உள்ளக் கவர்ச்சி
காதல்…
இனக் கவர்ச்சி
காமம் …
இதயக் கவர்ச்சி
காதல்…
காமமின்றி
காதலில்லை ….
வெறும் காமத்தில்
காதலுமில்லை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s