தமிழ் ஓவியா என்ற இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையில், இந்துக்களின் பண்டிகைகளில் பொங்கலைத் தவிர்த்து மற்ற பண்டிகைகள் அர்த்தமற்றவை என்றும், மற்ற பண்டிகைகளுக்கும் தமிழனுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்றும் இக்கட்டுரை விளக்குகிறது. அக்கட்டுரையின் ஒவ்வொரு பகுத்தறிவுத் தனமான கேள்விகளுக்கு, நமது பகுத்தறிவில் தோன்றிய மாற்றுச் சிந்தனையை வைத்து பண்டிகைகளின் அவசியம் என்ன என்பதை காண முற்படுவோம்.
//தீபாவளி விழாவை நம் மக்கள் புத்தி இல்லாமல் ஆடம்பரமாகக் கொண்டாடு கிறார்கள். அதன் தத்துவம் என்ன என்பதை எவனும் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது. பெரிய பட்டதாரிகள், புலவர்கள் என்பவர்கள் கூடக் கவலைப்படுவது கிடையாது//.
பொங்கல் விழாவை இந்த ஆண்டு நல்ல விளைச்சலை ஏற்படுத்தித் தந்த இயற்கைக் கடவுளான கதிரவனுக்கும் (குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள் கதிரவனை வழிபடுவதும், தமிழர் விழா என்று நாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் கொண்டாடுவது இந்து மதத்தினர் என்பது பெரியாருக்கும் அடிவருடிகளுக்கும் புரியவில்லை. ) நல்ல விளைச்சலுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடுகிறோம். வருண பகவானை மழை வேண்டியும், அக்னியையும் சூரியனையும் வழிபடுவதை, பின்பற்றுகிற ஒரு மதம் காரணமில்லாமல் பண்டிகைகளைக் கொண்டாடவில்லை. தனக்கு நன்மை செய்கிற இயற்கையை வழிபடுவதில் என்ன தவறு கண்டீர்கள்?
தீபாவளியை ஆடம்பரமாக கொண்டாடுகிறோமாம். இதை இரண்டுவிதமாக நான் பார்க்கிறேன். ஒன்று கொண்டாட்டங்கள் என்பதன் அர்த்தம் புரியாதவர்கள் பேச்சாகவே இதைப் பார்க்க முடிகிறது. கோவில் கொடை கொடுக்கிற போது, இது வெறும் சாமிக்கான நாள் மட்டும் அல்ல… சாமியின் பெயரில் என் தமிழன் தனது உறவினர்களை தன் ஊருக்கு அழைத்து ஆட்டுக்கறி சமைத்து வயிறார உண்டு, இரவு நேரங்களில் கோவில் விழாவில் நடக்கிற, பொழுது போக்கு நிகழ்ச்சிகளைத் தன்னோடு சேர்ந்து அவர்களையும் ரசிக்கச் செய்கிறான். இன்றைய சூழலில், தொழில் நிமித்தம் காரணமாக அனைத்து உறவினர்களையும் ஒன்று சேர்ந்து காணக் கூடிய நாளாக கோவில் கொடையோ, தீபாவளியோ இருக்குமானால் பண்டிகைகள் அவசியம்தானே!
இதை அவர்கள் ஏழையாக இருக்கும் போது ஏன் ஆடம்பரம் ? அதற்கு ஏன் விழா? என்று பார்ப்பது பெரியார் பகுத்தறிவாளர்களின் வாதம். நம் பார்வையில், கோவில் கொடை, தீபாவளி போன்ற விழா நாட்களைக் கணக்கில் கொண்டு நன்றாக உழை. உன் உழைப்பில் குறைந்த பட்சம், உன் குடும்பத்திற்கும் விருந்தினர்களுக்கும் நல்ல சாப்பாடு போடுகிற அளவுக்கு உன் தகுதியை வளர்த்துக் கொள். குறைந்த பட்சம் வருடத்தில் இருமுறை ஆடை எடுத்துக் கொடுக்கக் கூடிய நாளாகவாவது பார். என்றென்றும் பாடுபடுகிற என் சமூகம் கரகாட்டம், இன்னிசைக் கச்சேரி என பொழுது போக்கான அம்சங்களைக் காணுவது தன் உழைப்பில்தான் என்கிற பெருமை இருக்கிறதே. ஒரு மனிதன், விழாக்களை ஆடம்பரமாக பார்க்காது, தான் உழைத்து தன் உறவினர்களை மகிழ்வுறச் செய்கிற அரும்பாக்கியமாகக் கருதுவதில் என்ன தவறு? நேர்மறையான சிந்தனைகளைத் தருவது கடவுள் நம்பிக்கை. எதிர்மறையான சிந்தனைகளை முன் வைத்தது தான் உங்கள் பகுத்தறிவு.
இன்னும் சொல்லப் போனால் , தொழில் நிமித்தம் காரணமாக இன்று நாம் கோவில் விழாவை புறக்கணிக்கிறோம். அதாவது நமக்கு, நம் மக்கள் அனைவரையும் பார்க்கக்கூடிய நாளாக இருக்கின்ற தீபாவளி, கோவில் கொடை ஆகியவற்றை இன்று மறந்து வருகிறோம். எதுவுமே பிடிப்பில்லாதவனாக இருக்க வேண்டுமானால், நாம் ஏன் அடுத்தவனுக்கு செலவழிக்க வேண்டும் என்று எண்ணுகிற போக்கைக் கைவிடவே , கடவுள் என்கிற நம்பிக்கை, நம்மை ஒன்று சேர்க்குமாயின் , அக்கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் என்ன தவறு இருக்கிறது.
உதாரணமாக மார்கழி மாதக் குளிரில் ஒருவன் காலையில் வேலைக்குப் போக சுணக்கம் காட்டுகிறான். அவனுக்கு, மார்கழி மாதம்தான் ஐயப்பனுக்கு ஏற்ற மாதம். நீ இந்த மாதம் அதிகாலையில் எழுந்து, குளித்து இறைவனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று சொல்வதன் மூலம், சோம்பல் நீங்கி, அவன் அதிகாலையில் குளித்துப் பணிக்குப் போவானேயானால், அதாவது இறைவன் தனக்கு நல் வழிக் காட்டுவான் என்கிற நம்பிக்கையில் இறைவனுக்காகவே இருந்துவிட்டுப் போகட்டுமே… அதிகாலையில் எழுந்து, அவன் குளித்து விட்டு வேலைக்குச் செல்ல அக்கடவுள் என்கிற உருவகம்தான் அவனை நல்வழிப் படுத்துமானால் அக்கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் நீங்கள் ஏன் குதர்க்கம் காண்கிறீர்கள் என்பதே நமது கேள்வி.
இன்றைய சமுகத்தால் சில கேள்விகளுக்கு விளக்கம் தர முடியாதெனில், அவர்கள் பின்பற்றுகிற செயல்களை, மூட நம்பிக்கை என்று நீங்களாகவே மூடமாக உங்கள் கருத்தை வைக்காதீர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உள்ள இந்த பெரும் சமுகத்திற்கு, கடவுள் கதைக்கான நீதி விளக்கங்கள் அவர்களுக்குப் போதிக்கப்படவில்லை என்பதைத் தான் உங்கள் கொள்கைகளுக்கு நீங்கள் உரமாகப் பயன்படுத்துகிறீர்கள். அதையும் தாண்டி உங்களின் கருத்திற்கான வலிமை எந்த அளவுக்கு உங்களுக்கு பலன் அளித்தது என்று பார்த்தால் விடை உங்களுக்கே தெரியும்.
மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்தவே அதாவது அவனை ஒழுக்கசீலனாக, நல்லவனாக, சுறு சுறுப்பானவனாக, எதன் மீதாவது பயம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவன் ஒழுங்கு முறைக்கு உட்படுவான் என்பதற்காகவே தோன்றின. அதை அவனுடைய நடைமுறை வாழ்க்கையில் எப்படிச் சொன்னால், சாதாரணமான மனிதன் கேட்பான் என்கிற எண்ணத்தில் பல விடயங்கள் போதிக்கப்பட்டிருக்கலாம். அதற்கான விளக்கக் கதைகள் அறியாது விட்டது இச்சமூகத்தின் குற்றமே ஒழிய வேறேதுமில்லை.
தொகை மதமான இந்து மதத்தின் பலமே அது காலங்களுக்குத் தகுந்தாற்போல மாற்றி அமைத்துக் கொண்டன. அது எங்கும் ஒருபோதும், கடவுள் எதிர்ப்பாளர்களால் கைவிடப்படவில்லை. ஜெய மோகன் எழுதிய இந்தக் கட்டுரை மதம் குறித்த பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது. அக்கட்டுரையில் அவர் தொகைமதமான இந்து மதம் பற்றிக் குறிப்பிடும் போது “வரலாற்றைப்பார்த்தால் இந்துமதத்தின் மையப்பெரும்போக்கு என்பது இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை, முழுமையாகவே மாறிவிட்டிருப்பதைக் காணலாம். ஒருபுதிய மக்கள் திரள் உள்ளே வந்தால், ஒரு புதிய சிந்தனை உள்ளே வந்தால், அவர்களுடன் சமரசம் செய்துகொண்டு அது மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு நதி போல. நாம் கங்கை என்பது ஒரு நதி அல்ல, அது ஒரு நதித்தொகை. அதில் சேரும் நதிகளே அதன் திசையை வடிவை எல்லாம் தீர்மானிக்கின்றன. இந்துமதத்தில் ஒவ்வொரு தரப்பும் தாங்களே மையம் என்று சொல்லக்கூடும், ஆனால் அது எப்போதும் எல்லாம் அடங்கியதுதான்.”
ஆகையால் நீங்கள் கடவுள் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிராக எத்தனைக் கருத்துக்களை வைத்தாலும், எங்களைப் போன்றவர்கள் உங்களுக்கு மாற்றாக கடவுள் இருக்கிறார் என்ற ஒரு நேர்மறையான சிந்தனைகளை, அதாவது எதிர்மறையாக செய்கிற எனது செயல்களை ஒருவர் பார்க்கிறார். அவர் அதற்கான தண்டனையை நிச்சயம் வழங்குவார். ஆகையால், அந்த ஒருவரான கடவுள் என்கிற நம்பிக்கையைக் கைவிடுவது முட்டாள்தனமானது என்கிற எங்களது பரப்புரையும் நீடிக்கும்.
பெரியாரின் பிறந்தநாளன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். பிறகு ஏன் மதவாதிகள், விழா கொண்டாடுகிறார்கள் என்று கேளுங்கள். எல்லா நல்லக் காரியங்களையும் செய்ய ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் தேவைப்படுகிறதோ இல்லையோ, அந்தக் குறிப்பிட்ட நாளில் தான் இக்காரியத்தை ஆரம்பித்தோம் என்கிற சாட்சியான நாளாக அது விளங்குகிறது. பெரியாரின் அடிவருடிகளும் அம்மாதிரிதான், பெரியாரின் பிறந்தநாளன்று பல உறுதிகளை சூளுரைக்கிறார்கள்.
நீங்கள் மூட நம்பிக்கையான விடயங்களை நம்புவதில்லை எனில் என்னுடைய ஒரே ஒரு கேள்விக்கு பதில் கொடுங்கள் பார்ப்போம். கறுப்புச் சட்டையை நீங்கள் அணிவது ஏன்? பெரியார் அணிந்திருந்தார் என்பதற்காக நீங்களும் அதை அணிகிறீர்களா? அப்படியானால் நாங்கள் கல்லை வழிபடுகிறோம் என்பதை சொல்ல அருகதை அற்றவர்கள். இல்லை, கறுப்புதான் துக்கத்திற்கான அடையாளம், திருந்தாத மூட நம்பிக்கையில் உள்ள மக்கள் திருந்த தான் நீங்களும் கறுப்பு ஆடை அணிகிறீர்களா?
அப்படியானால், ஏன் கறுப்புதான் துக்கமானதாகவோ, எதிர்ப்பைக் காட்டக் கூடியதாகவோ இருக்க வேண்டுமா? நாங்கள் ஏன் இது வெள்ளையான மனிதர்கள் கறுப்பை வேண்டுமென்றே துக்கத்திற்கானதாக வைத்துள்ளார்கள். அவர்கள் வெள்ளையாக இருப்பதால்தான், வெள்ளையை மட்டும் சமாதானத்திற்கான சின்னமாக வைத்துள்ளார்கள். கறுப்பை எங்கேயோ மட்டம் தட்டின வண்ணமாக மாற்றி விட்டார்கள். மனிதர்களில் கறுப்பினமான திராவிட இனமான நாம் ஏன் கறுப்பை சமாதான சின்னமாக வெளிப்படுத்துவோம். மாறாக நம்மை அடிமையாக்கிய வெள்ளையனை, அவன் நிறமான வெள்ளையை நாம் இனி சமாதானம் போன்ற தூய செயல்களுக்கு பயன்படுத்த வேண்டியதில்லை என்று சொல்ல வேண்டியதுதானே. உங்கள் பகுத்தறிவு இது போன்ற குருட்டுத் தனமான கேள்விகளையே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மீது வைக்கிறது என்பதை வெளிப்படுத்தவே இக்கேள்வியை வைத்தேன்.
மேலும் அக்கட்டுரையில் ,//எங்கள் கடவுள் அன்பானவர், அருளானவர் என்று! உன் கடவுள்கிட்டே அருளும், அன்பும் எங்கே இருக்கிறது? எதற்கு அதன் கையில் வேலா யுதம், சூலாயுதம், அரிவாள், கொடுவாள், ஈட்டி, கொட்டாப்புளி இவற்றைக் கொடுத்து இருக்கின்றாய்? அதெல்லாம் கொலைகாரப் பசங்கள், திருட்டுப் பசங்கள் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்களாயிற்றே! இவை எல்லாம் உன் கடவுள் கையில் ஏன் கொடுத்திருக்கின்றாய்?//
நாங்கள் கையில் வேலாயுதத்தையும் சூலாயுதத்தையும் கையில் கொடுத்துள்ளோம். உண்மைதான். நம்பிக்கை ஊட்டக் கூடிய வார்த்தைகள் எப்படி ஒரு மனிதனுக்கு வலிமையைத் தருமோ, அதுபோலவே நீ பயப்படாமல் வயலுக்குப் போ. காவல் தெய்வமான சுடலைமாடனும், கருப்பசாமியும் உனக்கு நேரப்போகும் தீங்கிலோ, ஆபத்திலிருந்தோ பாது காப்பார்கள் என்கிற நம்பிக்கையாகவே பார்க்கிறோம். மேலும், உங்கள் பகுத்தறிவில் எதிர் மறையான சிந்தனைகள் தான் உள்ளன என்பதற்கு இது ஒன்றே சாட்சி. நீங்கள் கொடுவாள், அரிவாள், ஈட்டி ஆகியவற்றை கொலைக் காரப் பசங்கள் மட்டும் வைக்க வேண்டும் என்று பார்க்கிறீர்கள்.
நாங்கள் அது ஒரு கவசம். விரல்களில் வளர்க்கிற நகங்களைப் போல. அதாவது தீயவர்களை அழிக்க, எதிரிகளை அழிக்க இந்தக் கொடுவாள், அரிவாள், ஈட்டி ஆகியவற்றை நீ வைத்துக் கொள்வதில் தவறில்லை என்பதற்கான அடையாளமாகவே, இறைவனின் கைகளில் அவற்றை கொடுத்திருக்கிறோம். ஏன் உங்கள் பகுத்தறிவுக்குக், கத்தி குத்த மட்டுமே பயன்படும் என்ற சிந்தனை உள்ளது. கத்தி, கரும்பு வெட்டவும் பயன்படும் என்று உங்கள் மூளைக்கு ஏன் தோன்றவில்லை.
மேலும் அக்கட்டுரையில்
//அத்தனை கதைகளும் பார்ப்பானால், நம்மை முட்டாள்கள் ஆக்க, நம்மை அடிமைப் படுத்த உண்டாக்கப்பட்ட கதைகளும், விழாக்களுமேயாகும். இதில் ஒன்று கூடத் தமிழ்நாடு சம்பந்தமானதாக இருக்கவில்லை. எல்லா விழாக்களும் இந்தக் கடவுள் இவனைக் கொன்றான், அந்தக் கடவுள் அவனைக் கொன்றான். அவன் 1,000 பேரைக் கொன்றான். இவன் 2,000 பேரைக் கொன்றான். இப்படி எல்லா விழாக்களும் கொலை பண்ணின சங்கதிகளுக்காக ஏற்பட்டதாகத்தான் இருக்கின்றன.//
உங்கள் பகுத்தறிவில் கடவுள் அவனைக் கொன்றான். இவனைக் கொன்றான் என்பது மட்டுமே தெரிகிறது. மேலும் அவன் ஏன் கொன்றான் என்ற கதையை உங்கள் சவுகர்யத்திற்கு சொல்கிறீர்கள். எங்கள் பகுத்தறிவில் கடவுள் தீயவர்களைக் கொன்றான், கெட்டவர்களை அழித்தான், மக்களுக்கு தீயவர்களை அழிப்பதில் தவறில்லை என்பதை உணர்த்தவே அவர்களைக் கொல்வது பாவமில்லை என்று உணர்த்தவே அழித்தான். அப்படி தீயவர்களை அழிப்பதில் தவறில்லை என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி தீயவர்களை அழித்தவன் எங்களுக்கு நல்வழிக் காட்டுவான் என்று நம்புகிறோம். ஆகையால் அவர்களை வழிபடுகிறோம். வழிபடுவோம்.
பகுத்தறிவு என்பது மனிதன், தனக்கு எது நன்மை பயக்கும் என்று கருதி அதன் வழி நடக்கிறான். அது அவர்கள் பிறந்த மதம் அது என்பதால்தான் அதைப் பின்பற்றுகிறான் என்று பகுத்தறிவோடு நீங்கள் விழைய முனைவீர்களானால், நீங்களும் பெரியார் கறுப்பு சட்டையை அணிந்திருந்தார். அவர் வழிவந்த எங்களை மக்கள் பார்த்தவுடன் அடையாளம் காண வேண்டும். அதன் மூலம் நீங்கள் மூட நம்பிக்கைக்கு எதிரானவர்கள் என்று விளம்பரப் படுத்தவே கறுப்பு சட்டையை அணிகிறீர்கள் என்ற எங்களது பகுத்தறிவும் கேள்வியை முன்வைக்கும்.
பெரியாரிடம் இருந்த கருத்துக்கள் முழுமையாக வெற்றி பெறாமல் போனதற்குக் காரணம், நாணயத்தின் இருபக்கங்களைக் காணாது தேவையான விதத்தில் தனது மூளையை பகுத்தறிவு என்ற பெயரில் ஒரு கோணத்தில் பார்த்து அதுதான் சரி என்று நம்பியதே! அதுதான் அவர்களின் அடிவருடிகளால் கொள்கைகளை! ? முன்னெடுத்துச் சென்று வெற்றி அடையாமல் விழிக்கிறார்கள். அவர்கள் கறுப்பாடை அணிவதன் மூலம், நாங்கள் பகுத்தறிவின் வெறும் அடையாள பொம்மைகள் என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.
லக்ஷ்மண பெருமாள்:##அவர்கள் கறுப்பாடை அணிவதன் மூலம், நாங்கள் பகுத்தறிவின் வெறும் அடையாள பொம்மைகள் என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்##
நீங்க எந்த சாதின்னு எனக்கு தெரியல இருந்தாலு அவஅவ அந்தவலிய கிட்டநின்னு அனுபவிச்சி பாத்தான் பாரு அவனுக்கு தெரியு அந்த வலி எப்படி பட்டதுன்னு அது எப்படிப் பட்ட காட்டுத்தீன்னு . ஒரு ப்ளாக் ஓபன் பான்னிட்டோ நமக்கான வெத்துக் காகிதம் கெடச்சிடிச்சி எது வேணாலு எழுதி அந்த பக்கத்த நிரப்பலான்னு நெனெச்சி எழுதாதிங்க.
பெரியார் சாதியை எதிர்ப்பவர்தான், அதையறிந்தும் அவர்படத்தை உங்கள் பெயர் பலகையிலோ அல்லது சுவரோட்டியிலோ போடாமல் இல்லையே.
“##பெரியார் கறுப்பு சட்டையை அணிந்திருந்தார். அவர் வழிவந்த எங்களை மக்கள் பார்த்தவுடன் அடையாளம் காண வேண்டும். அதன் மூலம் நீங்கள் மூட நம்பிக்கைக்கு எதிரானவர்கள் என்று விளம்பரப் படுத்தவே கறுப்பு சட்டையை அணிகிறீர்கள் என்ற எங்களது பகுத்தறிவும் கேள்வியை முன்வைக்கும்##”
இதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். 2000 வருடத்திற்கு முன்பு சொல்லிவைத்ததை 2000 வருடம் கழித்தும் நீங்கள் உபயோகப்படுத்தலாம், அனால் எங்கள் கண்முன் வாழ்ந்து, உண்மையை உறக்கக்கூரியவரின் பெருமையை விளம்பரப்படுத்த கருப்பு சட்டையை அணியக்கூடாத என்ன.
##கறுப்புச் சட்டையை நீங்கள் அணிவது ஏன்? பெரியார் அணிந்திருந்தார் என்பதற்காக நீங்களும் அதை அணிகிறீர்களா? அப்படியானால் நாங்கள் கல்லை வழிபடுகிறோம் என்பதை சொல்ல அருகதை அற்றவர்கள். இல்லை, கறுப்புதான் துக்கத்திற்கான அடையாளம், திருந்தாத மூட நம்பிக்கையில் உள்ள மக்கள் திருந்த தான் நீங்களும் கறுப்பு ஆடை அணிகிறீர்களா? அப்படியானால், ஏன் கறுப்புதான் துக்கமானதாகவோ, எதிர்ப்பைக் காட்டக் கூடியதாகவோ இருக்க வேண்டுமா?##
துக்கம் நம்மை சூழும்போது மனிதனின் மனம் இருளாகத்தான் இருக்கமுடியும், இருள் மனம் கொண்ட மனிதனால் எதையுமே சரிவரவும் செய்ய இயலாது. அப்படியிருக்க அந்த இருளின் நிறம் கருப்பு அந்த கருப்பை ஏன் துக்கத்தை அனுசரிக்க அணியக்கூடாது?
##நாங்கள் ஏன் இது வெள்ளையான மனிதர்கள் கறுப்பை வேண்டுமென்றே துக்கத்திற்கானதாக வைத்துள்ளார்கள். அவர்கள் வெள்ளையாக இருப்பதால்தான், வெள்ளையை மட்டும் சமாதானத்திற்கான சின்னமாக வைத்துள்ளார்கள். கறுப்பை எங்கேயோ மட்டம் தட்டின வண்ணமாக மாற்றி விட்டார்கள்.##
இதை நீங்களாக என்னிக்கொண்டதாகவே கருதுகிறேன். நீங்கள்தான் வெள்ளை என்றால் சமாதானம், சிவப்பு என்றால் போர்க்களம், பச்சை என்றால் மண்வளம் என்று பிரித்து வைத்துள்ளீர்கள், பிறகு எங்களிடமே கேள்வியை கேட்பதா? நீங்கள் வழக்கப்படுத்தியுல்லத்தை நாங்களும் வழிமொழிந்து அப்படியே அழைக்கிறோம் இதிலென்ன தவறு. நாங்கள் செய்தது தவறு என்றால் நீங்கள் செய்ததும் தவறுதான்.
##மனிதர்களில் கறுப்பினமான திராவிட இனமான நாம் ஏன் கறுப்பை சமாதான சின்னமாக வெளிப்படுத்துவோம். மாறாக நம்மை அடிமையாக்கிய வெள்ளையனை, அவன் நிறமான வெள்ளையை நாம் இனி சமாதானம் போன்ற தூய செயல்களுக்கு பயன்படுத்த வேண்டியதில்லை என்று சொல்ல வேண்டியதுதானே.##
கண்டிப்பாக சொல்லலாம் ஆனால் நம் தேசியக்கொடியிலேயே வெள்ளையை ஆங்கிலேயன் நம்மை ஆண்டுக்கொண்டிருக்கும் போதிலிருந்தே வெண்மையையும், சமாதானத்தையும் குறிக்கிறதென்று சொல்லிவந்துல்லீர்கள். அதை எப்படி திடீரென்று மாற்றமுடியும். அரசியல் தலைவர்கள் சேர்ந்துதானே நமது தேசியகொடிக்கான வண்ணங்களையும் அந்த வண்ணத்திர்க்கான பண்புகளையும் அமைத்துகொடுத்தனர். அவர்கள் அப்போது நிறத்தின் தன்மையை மாற்றி சொல்லியிருக்க கூடாதா. ஏன் வெள்ளைக்கு பதில் கருப்பை கோடியில் பயன் படுத்தியிருக்கக் கூடாதா? அவர்கள் செய்து சரி என்றால் நாங்கள் செய்ததும் சரிதான்.
##எங்கள் பகுத்தறிவில் கடவுள் தீயவர்களைக் கொன்றான், கெட்டவர்களை அழித்தான், மக்களுக்கு தீயவர்களை அழிப்பதில் தவறில்லை என்பதை உணர்த்தவே அவர்களைக் கொல்வது பாவமில்லை என்று உணர்த்தவே அழித்தான். அப்படி தீயவர்களை அழிப்பதில் தவறில்லை என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி தீயவர்களை அழித்தவன் எங்களுக்கு நல்வழிக் காட்டுவான் என்று நம்புகிறோம். ஆகையால் அவர்களை வழிபடுகிறோம். வழிபடுவோம்##
அப்போது தீயர்கள் என்றால் அவர்களை அழிக்கி சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக் கொள்வீர்கள் அப்படிதானே?
மூடநம்பிக்கையில் மூழ்கி கிடந்தவர்களை ஐனி மூழ்கிகிடக்காதே என்று தெளிவூட்டியவரின் வாய்மொழியையும் அவரின் நம்பிக்கையையும் வழிபடுகிறோம் வழிபடுவோம்.
மனிதன் விழகொண்டாடுவதில் தவறொன்றுமில்லை. அந்த விழாக்கள் கூட கடவுளுக்காக உண்டாக்கியதல்ல மனிதன் வருடம்தோறும் கஷ்டப்பட்டு ஓடி ஆடி ஓய்வில்லாமல் உழைத்துவருபவன் ஒருநாள் சொந்தபந்தங்களோடு கூடி தன் கவலைகளை மறக்கவே விழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்பட்டது. அது சற்று காலம் கடந்து அதை யாரும் சரிவர பின்பற்றாத சூழ்நிலையின்போது கடவுள் என்ற ஒன்றை கூறி மனிதர்களை ஒன்றுகூட செய்தனர். ஆனால் அவை இன்று இன்னும் மெருகேரி சாதி வெறிபிடிக்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது.
சாதியை கடந்து வாழும் கலையை மனிதன் என்று கற்றுக்கொள்கிறானோ அன்றே பெரியாரின் கருத்தாகட்டும் ஆன்மீகவாதிகளின் கருத்தாகட்டும் அத்தோடு வழக்கொழிந்துவிடும். நாம் முதலில் அதை கற்க முயல்வோம். சாதி மதம் தாண்டி வாழ முற்படுவோம்.
nambikkai than vaazhkkai.
than thai ivar than, thanthai ivar than enbathaiyaavathu
oru saraasari manithan nambithaan aaka vendum. avargal kattithan guru (teacher) piragu kadavul endru namba murpadubavargalin pattiyal neelgirathu.
thannudaiya thai thanthaiyay DNA TEST-seithu athan piraguthan mudivu kooruven endru oru iyalbana manithabimam ulla paguttharivullavan koora
mattaan. meendum solkiren nambikkaithaan vaazhgai. than unnum unavu, kudikkum thanneer, suvaasikkum kaatru ivaiyellam vishamatravai endru ovvoru
pagutharivu vaathiyum nambukindraan allavaa! Illai non-toxic test muditthu
thaan sappiduven, kudippen, moochu viduven endru pagutharivuvaathigal
solvarkala! appadi vaazhathaan mudiyumaa! appadi muyandraal vaazhnaalil perumpaguthi virayam aagum. vilangikonduthaan ovuovondraiyum anubavikka murpaduven endru uruvan vaazhamurpattaal avan vaazhvu virayamagividum.
meendum solkiren vaazhgai nambikkaiyil irukkirathu. piragallava nannambikaiyum
thannnambikkaiyum varum.
mudinthavan saathikkiraan. mudiyathavan podhikkiraan. saathanaiyalargal perumbalum podhanai seivathil akkaraikolvathillai.
thannal mudiyavillai enbathallo, paasamulla than vazhithondralgal vaazhvu
virayamaakivida koodathu enbathaalo thanakku iyalaamai varikindra podhu
paasathinaal vayathanavarkal sila podhanaikalai, seikiraarkal. innum silar
sila vidayankalai maruvazhi pinbatraseithu vaithullargal.
anubam than aandavan. illaiyendral kavignar kannadasan kadavul
maruppu iyakkathilirundhu ner ethiraana kadavul kolkaikku varuvaaraa!
adipadaiyil oru kollaikkaararana vaanmeeki raamaayanam ezhiyiruppara!
nambikkaiyil thaan ulagam veezhnthu vidaathirukkirathu. naalai naam
uyirodiruppom endru nambukirom. atharkaakathaane ethanai muyarchikal seikirom. indha unavu, indha thanneer, indha katru nallathu endru nambikkondu thaane avatrai nugarkindrom. unmaiyil naathigan thaan kadavulai adhiga neram alasikondirukkiraan. pirithukkonde iruppadhu paguththarivu. thoguththukonde
iruppadhu anbu, anbu valarnthu thelinthu arul aakirathu. thannai matravarai allathu mattravatrai poruthu purindhu kolla muyalkindravan meigngnani.
than arivu kondu matravatrai, matravarai paguthukkondiruppan paguththarivu
vaathi allathu vigngnani. anbu migundhu, arivu satru kuraivaayirundhal
vaazhkai inikkum, purindhu kolla murpadukindravanukku ellam pulappadum.
meendum solkiren namikkaiye vaazhvirku achchani. adhu irundhaal
thaan vaazhgai endra vandi odum.
murugan g. RAMANATHAPURAM.