தேவையான அளவு
பட்டாணி – 1 கப்
பன்னீர் – 1 கப்
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 3
மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
கரம் மசாலா தூள் – சிறிது
சீரகத் தூள் – 1 டீ ஸ்பூன்
முந்திரி பருப்பு – 5 அல்லது 6
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 அல்லது 5 பற்கள்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
பன்னீரை சிறிது வதக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு முந்திரி பருப்பு லேசாக வறுத்து எடுக்கவும்.
அதே எண்ணையில் வெங்காயம், இஞ்சி,பூண்டு வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதக்கிய பிறகு மல்லித் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதக்கிய வெங்காயம் ஆறிய பிறகு அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
வேகவைத்த பட்டாணியையும், அரைத்த விழுதுடன் சேர்த்து சிறிது கொதிக்க விடவும்.
இறக்குவதற்கு முன்பாக ஏற்கனவே வதக்கிய பன்னீரையும், முந்திரிப்பருப்பையும் கொதித்த விழுதுடன் சேர்க்கவும்.
இரு நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பிலிருந்து இறக்கவும்.
இப்போது, மட்டர் பன்னீர் ரெடி.
ரொட்டி, பரோட்டா, சப்பாத்தி ஆகியவற்றோடு தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.