காதல் – கவிதை

நீ இல்லா வாழ்க்கை:
பொல்லாத உலகத்தில் கூட
என்னால் வாழ முடியும்..
நீ இல்லாத உலகத்தில்
கற்பனையில் கூட
வாழ முடியவில்லை!
என்னுடைய கனவில்
எனக்கானவளாய்
இருக்கிறாய்…..
நிஜ வாழ்க்கையில் மட்டும்
கனவாகவே இருப்பதேன்!
காதல் தோல்வி :
சொல்லாக்  காதலிலுள்ள
சுகம், சோகம், ஏக்கம்,
வலி, சுவாராஸ்யம்,
கனவு, கற்பனை
அத்தனையும்
காதலைச் சொல்லிய பிறகு
அர்த்தமிழந்து கிடக்கின்றன!
அப்பா :
அதிக நேரம்  பேசாது
அதிகமாய்  கோபப்படாது
அதிகம் கண்டுகொள்ளாது
அதிக நேரம்  கவனிக்காது
அதிக நேரம்  வீட்டில் இல்லாது
அதிகமான உன்னுடைய
அத்தனைக் குறைகளும்
அடிபட்டுப் போகின,
அதிகமாய் நீ உழைப்பது
எங்களுக்கு என்றறிந்த பொழுது !

3 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s