துபாய் ஒரு பார்வை

Burj Khalifa

இந்தியர்களின் நெஞ்சத்தில் வெளிநாடுகளைப் பற்றி பல கனவுகள் இருக்கும். அதிலும் அமெரிக்காவைப் பற்றியும், ஐரோப்பாவைப் பற்றியும் இன்னும் கூடுதலாக இருக்கும். பெரும்பாலும் அனைத்துத் தரப்பு மக்களும், வேலை நிமித்தமாக மேற்கூறிய நாடுகளில் சென்று பணி புரிவதும், அங்கு பணியாற்ற வாய்ப்புக் கிடைப்பதும் அரிது. பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களும், மருத்துவர்களும், பொறியாளர்களுமே அந்நாடுகளில் பணிபுரிகிறார்கள்.
ஆனால் வளைகுடா நாடுகளில் அவ்வாறல்ல. வளைகுடா நாடுகளில் தொழிலாளிகள் முதல் தனி நிறுவனங்கள் வைத்து நடத்தும் அளவுக்கு, எல்லா தரப்பு மக்களும் பணி புரிகிறார்கள். இவ்வுலகில் ஒரு நகரத்திலேயே சொர்க்கத்தைக் காண நினைத்தால், அது துபாயாகத்தான் இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் . ஐரோப்பிய நாடுகளுக்கும் துபாயிலும் பணி நிமித்தமாக உலா வந்த பிறகு நான் அறிந்த விடயம் அது. இன்னும் சொல்லப் போனால், பாலைவன நாடான துபாயில் பல ஐரோப்பியர்கள் கட்டடங்களை  விலைக்கு வாங்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  துபாய் தன்னகத்தே வைத்துள்ள பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை.
1 . துபாய் மால் தான் ” world’s largest Shopping Maal” என்ற பெருமையுடன் இதுவரை விளங்குகிறது. உலகிலேயே அதிக பார்வையாளர்கள் வந்து சென்றுள்ள இடமாக, 2011  ல் மட்டும் 54 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளதாக கணக்கெடுப்பு சொல்கிறது.
2 .  world’s “Largest Acrylic Panel என்ற கின்னஸ் சாதனையுடன் கூடிய Fish Aquriam துபாய் மாலில் உள்ளது.
3 . World’s Sixth Gross leasable Area என்ற பெருமையையும் துபாய் மால் கொண்டுள்ளது. GLA  என்பது துபாய் மாலின் மொத்த தரைத் தளத்தின் பரப்பளவை அதிக அளவு சிறு கடைகளுக்கு வாடகைக்கு விடுவதும் அதை முழுமையாகப் பயன்படுத்துவதுமேயாகும்.
4 . புர்ஜ் அல் அராப்( Burj Al Arab) என்ற ஹோட்டல் தான் உலகின் மிக உயர்ந்த ஹோட்டல்( 321 மீட்டர் உயரம்)  என்ற பெருமையை அடைகிறது.
5 . Burj Al Arab மட்டுமே ” 7 star Property ” என்பதற்கான தகுதியை வைத்துள்ள உலகின் ஒரே ஹோட்டல் இதுவே!
6 . புர்ஜ் கலிபா ( Burj Khalifa) என்று அழைக்கப்பெறும் கலிபா கோபுரம் தான் இன்று வரை உலகின் மிக உயரமான கோபுரம் ஆகும். (உயரம் 829 .84  மீட்டர் )
7 . புர்ஜ் கலிபா மட்டுமே பல உலக சாதனைகளைக் கொண்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மட்டும் 30000 வீடுகளும் 9  ஹோட்டல்களும் , மேலும் கார் நிறுத்தங்களுடன் கூடிய பல வசதிகளுடன் இக்கட்டிடம் விளங்குகிறது.
8 . Building with most floors: 163 , Building with world’s highest occupied floor, World’s highest elevator installation , World’s fastest elevators: 64 km/h, இன்னும் பல சிறப்புகளை இக்கட்டிடம் தன்னகத்தே வைத்துள்ளது. இந்த பிணையை அழுத்தி அறிந்து கொள்ளவும். http://en.wikipedia.org/wiki/Burj_Khalifa
9 . பார்வையாளர் தளம் என்கிற வகையில் இது ” third highest observation deck in the world and the second highest outdoor observation deck in the world, at 452 m   என்ற பெருமையோடு புர்ஜ் கலிபா கோபுரம் விளங்குகிறது.
10 . துபாய் மெட்ரோ ரயில் சேவையில், ஓட்டுனர் அற்ற தனித்தியங்கும்,  உலகில் தற்சமயம் மிக நீளமான நகரத் தொடரூந்தாக  இந்த மெட்ரோ ரயில்தான் விளங்கி வருகிறது.
11  Port jebel Ali  தான், world’s largest man-made harbour  என்ற பெருமையையும், 7th-busiest port in the world  என்ற பெருமையோடும் உள்ளது.
12 . Port jebel ali தான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள port – களில் மிகப் பெரியதாக உள்ளது.
13 . துபாய் விமான நிலையம், 6th busiest Airport in the world for International Passanger Traffic என்ற பெருமையையும், 7th Busiest Airport for Cargo Service in the World என்ற பெருமையையும் கொண்டுள்ளது.
14 . துபாய் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணி முடிவடைந்த பிறகு, இந்த விமான நிலையம்தான் உலகில் மிகப் பெரிய விமான நிலையம்( With 5 Runways) என்ற பெருமையையும், அது 160 மில்லியன் பயணிகளையும், 12 மில்லியன் கார்கோ வசதியையும் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
15 . தற்போதைய நிலையில் துபாய் குடியுரிமை பெற்றவர்களைக் காட்டிலும் ( 17 %), இந்தியர்கள் 35 % பேர் துபாயில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
16 .  Ist Luxury Homes in the world  என்ற அடையாளத்தை துபாய் கொண்டுள்ளது.
17 . 2009  ஆம் ஆண்டின் கணக்கின் படி, துபாய் உலகின் அதிக பார்வையாளர்கள் சுற்றுலா நிமித்தமாக வந்தவர்களின் எண்ணிக்கை 7 .8  மில்லியன் என்றும், உலகில் 7  ஆவது சுற்றுலாத் தளமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
18 . http://en.wikipedia.org/wiki/List_of_tourist_attractions_in_Dubai இப்பிணையை அழுத்தி, துபாயின் இதர சுற்றுலாத் தளங்களை அப்ற்றி அறிந்து கொள்ளுங்கள்.
19 . துபாயில் தமிழ்நாட்டின் சிறந்த உணவகங்களான, சரவண பவன், வசந்த பவன், பொன்னுசாமி பவன், அன்ன பூர்ணா, சங்கீத பவன் மற்றும் பல சென்னையின் பிரபலமான உணவகங்களும் இங்கு உள்ளது.
20 . Dubai Shopping Festival , Global Village, Palm Jumeira, Palm Jebel Ali, Palm Deira, Jumeira Beach மற்றும் பல சுற்றுலாத் தளங்களோடு துபாய் விளங்குகிறது.
21 . ஒரு தமிழரின் நிறுவனமான ETA என்ற நிறுவனம் பல சொந்த கிளை நிறுவனங்களை உருவாக்கி, இன்று எமிரேட்ஸ் என்ற நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனத்தில் முதலாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயின் சுற்றுலாத் தளங்கள் பற்றி எழுதிக் கொண்டே போக இயலும். துபாய் பற்றி எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு. மிகப் பெரிய நாடுகளான அமெரிக்காவைப் பற்றியோ, ஐரோப்பிய நாடுகளோ பரப்பளவில் அதிகமாகவும் இயற்கை வளத்தை அவைகள் இயற்கையாகவே பெற்று இருக்கின்றன. ஆனால் துபாய் வெறும் பாலைவனச் சாலை ஆக இருந்த நாடு, குறுகிய காலக் கட்டத்தில் இன்று ஒரு சோலையாகத் திகழும் வண்ணம் இருப்பதும், சிங்கப்பூர் போன்று ஒரு சிறிய நிலப்பரப்பை வைத்திருப்பதும், அதிலும் நிறைய செயற்கை தீவுளை வளர்த்து கூடுதல் அழகை, கண்ணைக் கொள்ளை கொள்ளச் செய்யும் வானளாவிய கட்டிடங்களும், சிறந்த பூங்கா வசதி, சிறந்த ஷாப்பிங் மால் என பல பெருமைகளைக் கொண்டதாக இருப்பதே துபாய் குறித்த செய்திகளைப் பகிரக் காரணம்.
Burj Al Arab
துபாய் மால்
துபாய் மால்
Fish Aquriam
துபாய் விமான நிலையம்
Dubai Sheikh Road
Dubai Festival City
Dubai Medinah

3 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s