ஹைக்கூ கவிதைகள்

This gallery contains 1 photo.

எனது அத்தான் திரு. முருகன் எழுதிய ஹைக்கூ கவிதைகள் :   1947 க்கு முன்: ஆங்கிலேயனிடம் தேசத்தைக் கொடுத்ததால் விடுதலையை இழந்தோம்! 1947  க்குப் பின் : ஆங்கிலேயன் விடுதலை கொடுத்ததால் தேசத்தை இழந்தோம்! மௌனம் :- பலவற்றைச் சாதிக்கிறது சில சமயம் -அது பலரையும் பாதிக்கிறது!

பிள்ளையார் பிடிக்க முயன்று!

This gallery contains 1 photo.

எனது அத்தான் திரு. முருகன், ராமநாத புரத்திலிருந்து, எனது வேண்டுகோளுக்கு இணங்க எழுதித் தந்த கவிதை!. அத்தானுக்கு சமயங்களைப் பற்றிய அறிவும், இறைப் பாடல்களும் அத்துப் பிடி. ஏனைய நாட்டு நடப்புகளைக் கூர்ந்து கவனிப்பவர். மாமா தமிழ் பண்டிட் என்பதாலோ என்னவோ, அத்தானுக்கு தமிழ் மீதான ஆர்வமும், இறை பக்தியும் அதிகம். பனிச் சுமைக் காரணமாக அவரால் அதிகம் எழுத இயலவில்லை என்ற போதிலும், எனது நச்சரித்தலும், மேலும் அவருக்கும் உள்ள ஆர்வத்தினால் அவர் எனக்கு 08 … Continue reading

நீயா நானாவில் எனது பார்வை 2

This gallery contains 1 photo.

இரு தினங்களுக்கு முன் நடந்த நீயா நானாவில்( 26 – 08 – 12 ) நிலத் தரகர்கள் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், பொதுமக்கள் பேராசைப் பிடித்துத் தான் முதலீடு செய்கிறார்கள் என்றும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு தரப்பிலும் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்தார்கள். இதற்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி நிகழ்ச்சி முடிந்து பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது. இளங்கோ கல்லானை, சீனிவாசன் ஆகிய இருவரும் அவரவர் கருத்தை அழகாக பதிவு செய்தார்கள். நிலம் வாங்குவது, … Continue reading

பெருமை – ஒரு பக்கக் கதை

This gallery contains 1 photo.

ஏட்டி சகானா….. டிபன் பாக்ஸ்ல நாலு கட்லெட் செஞ்சு வச்சிருக்கேன். பள்ளிக் கூடத்தில அவளுக்குக் கொடுத்தேன்… இவளுக்குக் கொடுத்தேன்னு கொடுத்த… பார்த்துக்க. ஒழுங்காக் கட்டா நீ மட்டும் சாப்பிட்டிட்டு வரணும். புரிஞ்சுதா…. எட்டாம் வகுப்பு படிக்கிற சகானா டிபன் பாச்சை வைக்கிற வரைக்கும் அமைதியாய் இருந்தவளுக்கு, என்ன தோன்றியதோ அம்மாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். அம்மா, நேத்து நீ எனக்குச் சொல்லிக் கொடுத்தப்போ “பகிர்ந்து உண்ணுதலும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதலும் தான் என்னை சிறந்த குடிமகளாக அடையாளம் … Continue reading

பெண்களின் ராணி

This gallery contains 1 photo.

இந்தியாவைப் பொறுத்தவரையில், கிரிக்கெட்டை விடுத்து மற்ற விளையாட்டுக்களில் எத்தனை வீரரைப் பற்றித் தெரியும் என்று கேள்வி எழுப்பினால்,  அதிக பட்சம் ஐந்து முதல் பத்து பேர் பெயரைச் சொல்லவே இந்தியா முழுக்கத் தேட வேண்டி இருக்கும். அந்த பத்து பேரில் தன் பெயரை இடம் பெறச் செய்த விளையாட்டு வீராங்கனை அவள். இருபத்திரெண்டே  வயதான அந்த இளம் பெண்ணின் முகத்தில் ஒரு சாந்தம். தியான நிலையில் இருப்பது போன்ற முகம். விளையாட்டு வீராங்கனைக்கு ஏற்ற உடல் வாகு. … Continue reading

அன்னா குழுவினரும் உண்ணா விரதப் போராட்டமும்

This gallery contains 1 photo.

    ஜன் லோக்பாலில் உள்ள லோக் ஆயுக்த்தா லோக்பால் கீழ் வரவேண்டும் என்ற இவர்களின் கருத்து தவறு , அது மாநில நலனில் எம்மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற எனது கட்டுரை தமிழ் பேப்பர் இணைய தளத்தில் வந்துள்ளது. அதற்கான பிணையை அனைவரின்  பார்வைக்கும்  வைக்கிறேன் http://www.tamilpaper.net/?p=5711  மனதில் பட்ட விடயங்களை மட்டுமே எழுதி இருக்கிறேன். ஒரு கட்டுரை வடிவத்தில் கோர்வையாக எழுத அதிக நேரம் பிடிக்கும் என்பதால் எளிய முறையில் கருத்தை தெரிவிக்கிறேன். நீண்ட … Continue reading