யார் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களே அதிகாரம் செய்ய இயலும் என்பதுதான் உலக நியதி!. பலம் மூன்று வகைகளில் உள்ளது. அதிகார பலம், பண பலம், ஆள் பலம் என்பதே அது.இதில் யார் எந்த சூழ்நிலையில் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் தான், அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, அடுத்தவர்களை அடக்கி ஆள்வார்கள் என்பது தான் யதார்த்தம்.
இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்தவரை, பலம் வாய்ந்தவர்களாக அரசு உள்ளது. இது அதிகார பலம். கூடன்குளத்தைத் தவிர மாநிலத்தின் இன்ன பிற பகுதிகளில் சமூக ஆர்வலர்களோ , சமூக எழுத்தாளர்களோ, தொண்டு நிறுவனங்களோ பெருமளவில் மக்களுக்கு அணு உலை ஆபத்து, அது அப்பகுதியில் உள்ள குடிமக்களைப் பாதிக்கும் என்று பரப்புரை செய்து, அதன் மூலம் பெருவாரியான சமூகத்தை தங்களின் போராட்டத்திற்கு துணை நிற்கச் செய்து, அரசுகள் அணு உலையைத் திறக்காத வண்ணம் இருக்கச் செய்யத் தவறி விட்டார்கள். இதை சமூக ஆர்வலர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவேளை இப்போராட்டம், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பெரும் திரளான மக்களை ஒருங்கிணைத்து இருந்தால், அரசுகள் தடியடிக்குச் செல்லாது அடிபணிய வாய்ப்பிருந்திருக்கும்.
ஆனால், இங்கு பெருவாரியான மக்களின் பார்வையில், மின் சக்தியின் தேவை மட்டுமே பார்க்கப் படுகிறது. இதுவும் ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக சமூக ஆர்வலர்களுக்கு இருந்திருக்கக் கூடும். மேலும் தமிழகத்தின் முன்னணி கட்சிகளான திமுகவும், அதிமுகவும் இந்தியாவின் முன்னணி கட்சிகளான பிஜேபி யும், காங்கிரசும் அணு உலையைப் பொறுத்தவரையில் அது தேவை என்பதற்காக பேசிய பிறகு போராட்டம் வெற்றி பெறாது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.
யார் பலம் வாய்ந்தவர்களோ அவர்கள் பலமின்மையானவர்களை அடக்கி ஆள்வார்கள். அதுதான் இப்பொழுது நடந்தேறி இருக்கிறது. ஆட்சி என்ற அதிகார பலத்தின் முன்பு, பெரும்பான்மையான தமிழக மக்களை ஒருங்கு இணைக்காத , சிறு அளவிலான மக்களின் கூட்டு முயற்சி பலமற்றுக் காணப்படுவதாலேயே போராட்டம் தோல்வியைத் தழுவுகிறது.
துனிசியாவில் பென் அலியாகட்டும், எகிப்தின் ஹோசினி முபாரக் ஆகட்டும், அதிகார பலத்தில் இருந்தார்கள் என்பதால் , அவர்களால் மக்களை அடக்கி ஆள இயலவில்லை என்பதை 2011 ஆம் ஆண்டில் உலகம் புரிந்து கொண்டிருக்கும். உலக சரித்திரத்தில் இதை விடச் சுருக்கமாகத் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட புரட்சிகள் இல்லை. மக்கள் சக்தி ஒழுங்காக ஒருங்கிணைக்கப் பட்டால், அதிகாரத்தில் யார் இருந்தாலும் வீழ்வார்கள் என்பது சம காலத்தில், அதுவும் ஒரு வருடத்திற்கு முன்பு நிகழ்ந்ததே!
அதற்கும் , நான் சொல்கிற,யார் பலம் வாய்ந்தவர்களோ அவர்கள் பலமின்மையானவர்களை அடக்கி ஆள்வார்கள் என்பதே காரணம். ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தில் இருந்து கொண்டு அடுத்தவர்களை அடக்குவது ஒருவகை. எண்ணிக்கை அளவிலான பலத்தை நிருபித்து அடுத்தவர்களை அடி பணியச் செய்வது இன்னொரு வகை. பொருள் பலத்தைக் காட்டி அடுத்தவர்களை அடிமையாக்குவது மற்றொரு வகை. இந்த மூவரில் யார் , எந்த சூழ்நிலையில் பலசாலிகளாக உருவெடுக்கிறார்களோ, அவர்கள் அடுத்தவர்களை ஆள்கிறார்கள்.
அரசு ஒடுக்குகிறது… அரசு மக்கள் நலனைப் புரியவில்லை என்ற வாசகங்கள் எந்த அளவுக்கு போராட்டக்காரர்களுக்கு வலு சேர்க்குமோ அதே அளவுக்கு பெருவாரியான மக்கள் உங்கள் பிரச்சினையை எப்படி புரிந்து வைத்துள்ளார்கள், தவறான புரிதலை எப்படி களைவது என்பதை சமூக எழுத்தாளர்களும், போராட்டக் குழுவினரும், சமூக ஆர்வலர்களும் எடுத்தாளவில்லை அல்லது இன்னும் பெருவாரியான மக்களை வீதிகளுக்கு வரவைக்கவில்லை. ஆகையால்தான், போராட்டம் தோல்வியைத் தழுவியதே தவிர, அரசின் சர்வாதிகாரமல்ல! எல்லா அதிகாரமும் வீழ்ந்து போகும், அவர்கள் பலவீனமாக இருக்கும் வரை…..
//இங்கு பெருவாரியான மக்களின் பார்வையில், மின் சக்தியின் தேவை மட்டுமே பார்க்கப் படுகிறது//
நெய்வேலியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு போதுமானது. ஆனால் அங்கிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் தமிர்நாட்டுக்கு எவ்வளவு கிடைக்கிறது…? கர்நாடகாவுக்கு எவ்வளவு போகிறது…? இது தவிர, கல்பாக்கம், மேட்டூர், தூத்துக்குடி என எவ்வளவோ மின்திட்டங்கள் இருக்கின்றன. இங்கு உருவாகும் மின்சாரம் எங்கே போகிறது….? இயற்கை சூரிய ஒளி மின்சாரத்திற்கு முயற்சிக்கலாமே… அதை ஏன் முயற்சிக்கவில்லை… இதன் உள்நோக்கம் வெறும் பார்வையில் மின்சாரம் இல்லை… என்று கூப்பாடு போடுபவர்களுக்கு தெரியாது… புரியாது… கொஞ்சம் ஆராய்நது பார்த்தால் எல்லாம் புலப்படும்…
kudankulam porattakkararkal matra samuga iyakkankalai arukileye nerungavidamal seivathal dangalin otrumaikulaiyathu entru ninaithathu palam….
aanal athuve avarkalin palavinamahavum aanathu…