அணு மின்சக்தி மட்டுமே ஆபத்தானதா- இது முன்னுரை மட்டுமே!

இன்றுதான் நண்பர் ஒருவரிடம், coal power plant மூலமும், காற்று மாசுபடுதல் மூலமும் உள்ள இழப்புகள், அணு மின்சக்தியோடு ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருக்கும் என்றும், அதைப் பற்றி பேசாத சில சமூக ஆர்வலர்கள் தங்களின் எழுத்தின் மூலம், அணு மின்சக்தியை மட்டும் கூடாது என்று கூவுவது தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு விடைதரும் இணைப்பு திரு அழகேச பாண்டியன் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளேன்.  மிக்க நன்றி.
இன்னும் சோலார் மற்றும் வின்ட் enegry மூலம் வருடம் முழுவதும் மின்சார உற்பத்தி தர இயலாது என்கிற உண்மையை உணர்த்த வேண்டும். காற்று மற்றும் சோலார் எனெர்ஜி அதிக மாசுப்படுத்துதலை செய்யாதெனினும் அதற்கான முதலீட்டைப் பற்றிய அறிவும் இன்னமும் விளக்கப்படவேண்டியுள்ளது. இந்தியாவில் மின்சக்தியின் தேவை ஒருவேளை 90 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், காற்று மற்றும் சோலார் சக்தி மூலமாகவும் முயற்சி செய்யலாம். தேவையை ஓரளவுக்காகவாவது பூர்த்தி செய்யாத பட்சத்தில், சோலார் மற்றும் காற்று சக்தி மூலம் நன்மை பல இருந்தாலும் மக்கள் தேவையை முழுமைக்கும் பூர்த்தி செய்யாது என்பதால், மக்களின் உணர்வுகள் இவ்வாறாகத் தான் இருக்கும். ” என்ன பாதி நாளைக்குப் பவர் இல்லன்னு சொல்லுற மக்கள்தான் நம்ம மக்கள்!. ” பாதி நாளைக்குப் பவர் இல்லன்னாலும் பரவாயில்ல. பாதி வருசத்துக்கே பவர் தரமாட்டேன்குது இந்த காற்றும், சோலாரும்னு புலம்ப ஆரம்பிப்பாங்க.” இந்த ரெண்டு மூலமாக கிடைக்கிற மின்சக்தியில் தான் ஆபத்து குறைவு என்பதையும் உணராமல் பேசக் கூடும்.
நதி நீரை தேசிய மயமாக்காத வரை, நீர் மின்சக்தி கூட தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேவையான அளவுக்கான மின் உற்பத்தியை தராது. காற்று, சூரிய, நீர் ஆதார சக்திகள் அந்தந்த வருடத்தில் கிடைக்கப் பெறுகிற இயற்கை ஆதாரத்தைப் பொறுத்தது என்பதை பெரும்பாலோர் உணர்வதில்லை. சூரிய மற்றும் காற்று என்பது அந்த நாளில் கிடைக்கும் வெயிலையும், காற்றையும் பொறுத்தது. குளிர் காலத்திலும், மகம் மறைக்கப் பெறுகிற காலங்களிலும், காற்று அதிகமில்லா காலங்களிலும் , இச்சக்திகள் மூலம் மின்சாரம் கிடைக்காது. பூமிக்கடியில் இருந்து கிடைக்கப் பெறும் ஆயில், காஸ், நிலக்கரி மற்றும் யுரேனியும் மூலமாகவே நிரந்தர ( பூமிக்கடியில் இருந்து கிடைக்கும்வரை) , தடையில்லா மின்சக்தியைப் பெறச் செய்ய முடியும். ( if sources are available).
மிகக் குறைந்த அளவில் , சாணம், rice straw , sugar  and  wheat straw , ash , பயோ மாஸ் மூலமும் மின்சாரம் கிடைக்கப் பெறுகிறது.
ஆனால் இதன் மூலம் உற்பத்தி செய்யும் போது, ஆறுமாதம் மட்டுமே மின் ஆலையை இயக்க இயலும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை மிக நீண்ட கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
அமெரிக்காவில், நிலக்கரி மற்றும் வாகனங்கள் மூலம் காற்று மாசுபடுதலில் ( என்பது வாகன விபத்தல்ல, அது விடும் மாசு) இறக்கும் மக்களின் சராசரியில் வருடத்திற்கு பன்னிரெண்டில்  ஒரு பங்கு அணு சக்தி மூலம் உயிரிழப்பு ஏற்படுகிறது. வெறும் அணுசக்தி மட்டும் மிக ஆபத்தானது என்கிற அச்சத்தைப் பரப்புவதை முதலில் படித்த சமூகம் உணர வேண்டும்.
அணு மின்சக்திக்கான சாதக பாதகங்களை சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கூடங்குளம் விடயத்தைப் பொறுத்தவரை மக்களின் வாழ்வாதாரத்தையும், அடிப்படை வசதிகளையும், முறையான மருத்துவ வசதியையும் மற்றும் மக்களின் அச்சத்தையும் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
நீங்கள் வெறும் அணு உலையை மட்டும் எதிர்ப்பீர்கள் என்றால் , எதனடிப்படையில் காஸ் மற்றும் coal மூலம் பன்மடங்கு ஏற்படுகிற இழப்புகளில் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறீர்கள். எல்லா தொழில் நுட்பங்களிலும் சாதக பாதகங்கள் இருக்கின்றன. அதை சரியான வகையில் புரிந்து கொண்டு நாம் வாழ்வை நகர்த்த வேண்டிய இடத்தில் உள்ளோம்.
ஒவ்வொரு மின்சக்தியின் சாதக பாதகங்கள் குறித்த கட்டுரை எழுத இருக்கிறேன். அது இன்னும் நீண்ட புரிதலை ஏற்படுத்த இயலும் என்று நம்புகிறேன். மின்சார அதிர்ச்சிகளும் ஐயங்களும் களையப்படும் வரை மின்னியல் பற்றிய புரிதல் ஏற்படுத்தும் முயற்சி பயணிக்கும். அதுவரை….

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s