சூரிய மின்சக்தி அணு ஆலைக்கு மாற்றா? – ஓர் ஆய்வு

கூடங்குளம் அணுஉலை தேவையா, இல்லையா என்பதைப் பற்றி அலசுவதற்கு முன், அணு மின்சக்தி தேவையில்லை என்று சொல்கிற ஞானி, முத்துக்கிருஷ்ணன், ஜெய மோகன் , மார்க்ஸ்,  மற்றும் இன்ன பிற எழுத்தாளர்கள் அணு மின்சக்திக்கு மாற்றாக, சூரிய மின்சக்தி தான் மாற்று என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். இந்தக் கட்டுரை, சூரிய மின்சக்தி என்பதென்ன, சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்திகள் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலுமா ? நடைமுறையில் (Practical  ஆக  ) சாத்தியமா என்பதைப் பற்றியே அலசி ஆராயப் போகிறது.

சூரிய மின்சக்தியில் பாதுகாப்புக் குறித்த அச்சமில்லாத காரணத்தால் மட்டுமே , மேற்கூறிய எழுத்தாளர்கள் அணுஉலைக்கு மாற்றாக சூரிய மின்சக்தியே சாலச் சிறந்தது என்பது போல தங்கள் கருத்துக்களை எடுத்து வைக்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே சூரிய மின்சக்தியைப் பற்றிய முழு புரிதலோடும்தான் பேசுகிறார்களா என்பது என் கேள்வி?

இந்தக் கட்டுரையில் மிகக் குறைந்த அளவிலேயே சூரிய ஆற்றல் பற்றிய தொழில் நுட்ப விடயங்கள் பற்றி விளக்குவோம். அது சாதாரண வாசகனுக்கு, புரிய வேண்டும் என்பது ஒரு காரணம். அதிகமான தொழில் நுட்ப விடயங்கள் வாசிப்பின் சுவாராச்யத்தைக்  குறைக்கும் என்பதால் சூரிய மின்சக்தியின் நன்மை தீமைகள் மட்டுமே அலசப் படுகிறது. அதன் நடை முறை சாத்தியம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டி உள்ளது.

சூரிய மின்சக்தி என்பது என்ன? சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியை உள்வாங்கி அதை மின்னியல் சக்தியாக மாற்றுவதே, solar  energy என்றழைக்கப் படுகிறது. சூரிய ஆற்றல் மூலம் பெறப்படும் சூரிய மின்சக்தியை பல வழிகளில் உருவாக்கலாம். அவை, Solar Photo Voltaic cell, Concentrated Solar Power, Solar thermal, Solar Heat exchange, Solar Oven ஆகியவை ஆகும்.

solar Energy வீடுகளிலும் , சிறிய சிறிய தொழிற்சாலைகளும், shopping  complex , மற்றும் அரசு அமைக்கிற solar Power Plant மூலமும் உற்பத்தி செய்வதை grid – உடன் இணைத்து , மற்ற பகுதிகளுக்க்ம், தங்களின் சுய தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். அதற்கு அரசு ஊக்கத்தொகை அளிப்பதன் மூலம், Power Shortage தடுக்க இயலும் என்பதே சூரிய மின்சக்தி ஆதரவாளர்களின் வாதம். அத்தோடு சுய தேவையையும் பூர்த்தி செய்ய இயலும். இது சுய தேவையைப் பூர்த்தி செய்ய ஓரளவுக்கு உதவும் என்றாலும், வருடம் முழுமைக்கும் சுய தேவையைப் பூர்த்தி செய்யாது.

இதை இன்று ஆரவாரமாக வரவேற்கிறோம். ஆனால் வீடுகளில், தொழிற்சாலைகளில், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போன்ற இடங்களில் அமைப்பதில் உள்ள சிக்கலை யாரேனும் சொன்னார்களா? என்ன சிக்கல் என்பதைக் காண்போம்.

உங்கள் வீட்டில் வேப்ப மரம், முருங்கை மரம், தென்னை போன்ற உயர்ந்த மரங்கள் உள்ளனவா? உள்ளது என்றால், அதை முதலில் வெட்டி சாய்த்து விடுங்கள்.   அப்படியானால் மட்டுமே , உங்கள் வீட்டின் மேற்கூரையில் வைக்கப் படுகிற solar Panel மீது வெயில் படும். solar panel மூலம், முழுமையான அளவுக்கு அதாவது உதாரணத்துக்கு நீங்கள் 700 Watt மின்சாரம் கிடைக்கும் என்று நினைத்தால் (அதாவது வெயிலின் மூலம் நேரடியாகக் கிடைக்கும் ஆற்றலில், 30 முதல் 45 சதவீதம் வரைதான் கிடைக்கும். )

இரண்டாவதாக ஒருவேளை நீங்கள் இதை install பண்ணிய பிறகு, உங்கள் இரண்டு பக்க வீட்டுக்காரர்களிடமும்,முன்னும் பின்னும் வீடுகள் இருப்பின் , அந்த வீட்டுக் காரர்களிடம் , இனி நீங்கள் முதல் தளமோ, இரண்டாம் தளமோ எடுக்கக் கூடாது என்றும், அவர்கள் மரம் வளர்க்கக் கூடாது என்றும்  அறிவுறுத்தி விடுங்கள்.

இதையே ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளவர்களும் , பக்கத்தில் உள்ள  உயர்ந்த கட்டிடங்களை அமைக்கா வண்ணம் பார்க்க வேண்டி வரும். இல்லையெனில், நீங்கள் இன்னொரு முறை செலவைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல்  Instaal செய்து கொள்ளுங்கள் அல்லது வெயில், நீங்கள் அமைத்த solar panel மீது  படாவிட்டால் , உங்களுக்குப் power கிடைக்காது. மேலும், காலையிலிருந்து மாலை வரை வெயில் படுமாறு , அதை அமைக்க வேண்டும். மேலும், அது சேமிக்கிற சக்தியானது, உச்ச வெயிலில் உள்ளது போல நாள் முழுமைக்கும் கிடைக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

(குறிப்பு: வீட்டுக்கு ஒரு மரம் வைப்போம் என்ற கொள்கையை உடப்பில் போடுவோம். இன்று அணுசக்திதான் கேடு என்பது போல,  இயற்கையை அழித்து சூரிய மின்சக்தி போடுவது இயற்கைக்கு முரணானது என்று அதே ஞானி, முத்துக் கிருஷ்ணன் போன்ற சமூக ஆர்வலர்கள் மூலம் எழுதச் சொன்னால் அழகாக எழுதித் தருவார்கள். )

வெயில் காலங்களில் invertor மூலமாக battery துணை கொண்டு சூரிய மின்சக்தியை சேமித்துக் கொள்ளலாம். அது இரவு முழுமைக்கும் பலனளிக்குமாறு அமைத்துக் கொள்ளலாம். அனைவரும் சொல்வது போல , இது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு ஆகும் பொருள் செலவு மிக மிக அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலும், அரசுகள் சூரிய மின்சக்தியில் போவதில் உள்ள சிக்கலே அதற்காகும் பொருள் செலவும், உற்பத்தி செய்வதற்கு தேவைப் படுகிற நிலப் பகுதியும் தான். நிலப் பகுதி பற்றி பின்னர் சொல்கிறேன்.

வீடுகளில் அமைத்துக் கொண்டாலும், குறைந்த பட்சம் 4 மாதங்களுக்காகவாவது அரசு தரும் அணு மின்சக்தி மூலமும், thermal (Coal and Fossil  Fuel மூலமும், ), Hydro மின்சக்தி மூலமும் கிடைக்கிற மின்சாரத்தை உபயோகிக்க வேண்டும்.

சூரிய மின்சக்தி அதிக நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் என்று சொல்லி இருந்தேன். அது பற்றிய அறிவு , அணு உலைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் எந்த அளவுக்கு சூரிய மின்சக்தியைப் பற்றி புரியாமல் பேசுகிறார்கள் என்பதற்கான ஆதாரம் இதோ:

இன்றளவில் உலகின் மிகப் பெரிய சூரிய மின்னாலை , 354 MW (Collection of nine units) மின் உற்பத்தி செய்யும் , Solar Energy Generating Sysytems Power Installation is available at  kalifornia , USA.  அதனுடைய Capacity Factor என்பது வெறும் 21 % மட்டுமே. இதை அமைப்பதற்கு (Instaal ) செய்யப்பட்டுள்ள நிலப்பகுதி எவ்வளவு தெரியுமா? 1600 Acres . அதாவது 6 .5 square Kilo Metre . யாரும் வெறும் 6.5 KM என்று நினைத்து விடாதீர்கள்.

ஒரு வருடத்திற்கு 662 GW-H உற்பத்தி செய்யப் படுகிறது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கு 352 MW H உற்பத்தி செய்ய வேண்டிய இடத்தில், 76 MW -H தான் உற்பத்தி செய்கிறது. அதாவது வெறும் 21 % மட்டுமே. எப்படி கணக்கிட்டுள்ளேன் என்பதை தெரிந்து ( 662000MW/12 Months = 55166.16 MW per month, 55166.16 per month/30 days = 1838 MW per day, 1838 per day/ 24 = 76 MW per Hour. ) , இதை குறுக்கு கணக்கு செய்து, 21 % என்பதை எப்படி செய்வது என்றால், (354 *21 ) / 100  = 74.34%. Due to decimal values, we got 76 MW-Hour.

இச்செய்தி விக்கி பீடியா வின் தகவல் படியே கொடுக்கப் பட்டுள்ளது.

இந்த ஞானி போன்றவர்கள் அது ஏதோ ஒவ்வொரு வீட்டிலும் அமைப்பது போல எளிதான விடயமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் புரிய வைக்கவே ஒரு சூரிய மின்னாலை அமைக்க வெறும் 354 MW உற்பத்தி செய்ய அரசு ஒதுக்க வேண்டிய இடம் 6 .5 SQ KM  என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது கூடங்குளம் அணுஉலையில் இருந்து அதிக பட்சமாக எத்தனை MW உற்பத்தி செய்யலாம் என்பதை அறிவோம். அது போல ஒரே ஒரு Solar Power Plant அமைக்க வேண்டும் என்றால், எவ்வளவு நிலப்பரப்பை , தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்பதைக் காணலாம்.

கூடங்குளத்தில் இருந்து மொத்தம் 9200 MW வரை மின்னுற்பத்தி செய்யலாம். 6 * 1200 MW and 2 * 1000MW = 9200MW. அதாவது 9.2GW . இப்போது , 9.2 GW solar Energy உற்பத்தி செய்ய வேண்டுமானால், ((6.5*9200)/354=168 SQKM). 168 Square Kilo Metre அளவுக்கு இடம் ஒதுக்க வேண்டி வரும்.

இங்கு பலரும் அணு மின்சக்திக்கு இடம் தேடுவதற்கும் அதற்குரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் ஆகும் என குறி சொல்கிறார்கள். அவர்கள் சூரிய ஆலை அமைக்கும் போது, இதே அளவுக்கு 9 .2 GW உற்பத்திக்கு 168 Square Kilo meterai தமிழ்நாட்டில் எந்த நிலப் பகுதியில் வாங்கித் தருவார்களோ? அப்போது, நாம் எப்படி கூடங்குளம் மக்களை மதுரைக்கும் , மற்ற நகரங்களுக்கும் இடமாற்றம் செய்வது. அது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று சொல்பவர்கள் சூரிய மின்சக்தியை நடைமுறைப் படுத்த எவ்வளவு இடம் தேவைப்படுகிறது என்ற புரிதலோடு அணுகுவது தான், ஒரு தொழில் நுட்பத்தைப் புரிந்து கொண்டு பேசுவதற்கு சமம்.

168 SQ KM நிலத்தை ஆக்கிரமிக்க எத்தனை கிராம மக்களை வெளியேற்ற வேண்டி வரும் , அப்போதும் இதே எழுத்தாளர்கள் விளை நிலத்தை அரசு அபகரிக்கிறது என்று சொல்லாமல் இருப்பார்களா? அப்படியான ஒரு நிலப் பகுதி தமிழ்நாட்டில், தரிசு நிலமாக கிடைக்குமா? அல்லது இடையில் தான் ஊர்கள் வராமல் இருக்குமா? ஒரே ஒரு மின்னாலையை, அதுவும் கூடங்குளத்திற்கு இணையான சக்தியைப் பெறவே இவ்வளவு பெரிய நிலப்பரப்பு வேண்டுமென்றால், இனிவரும் காலங்களில் அத்தகைய சூரிய மின்னாலைகளை மட்டுமே அமைக்க முடியுமா?

ஒரு விடயத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள். ஒண்ணு கிடைக்கணும்னா ஒன்னை இழந்துதான் தீர வேண்டும்.  உங்களுக்கு மின்சாரத் தேவை முக்கியம் என்றால் அணு ஆலைகளையும், தெர்மல், காஸ் மற்றும் fuel  ஆலைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதாவது, இம்மாதிரியான மின்சக்தியைத் தவிர்த்து வருடம் முழுமைக்குமான மின்சாரத்தைப் பெற இயலாது என்கிற உண்மையை உணருங்கள். இல்லை, மின் தேவையைக் காட்டிலும் உடல் நலம் பாதிக்காத மின் சக்தி தேவை என்றால், இப்போதைக்கு சூரிய, காற்றாலைகளை மட்டும் கொண்டு கிடைக்கப் பெறுகிற மின்சாரம் துணையில் வாழ வழி செய்ய இயலுமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இனி solar energy யின் அடுத்த பிரச்சினைக்கு வருவோம். இவர்கள் என்ன வெறும் 440 MW தானே உற்பத்தி செய்யப் போகிறார்கள் என்பவர்களுக்கு, ஒரு சின்ன தகவல். யுரேனியத்தை முழுமைக்கும் நிரப்பினால் 9200 MW உற்பத்தி செய்ய இயலும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில், அணுமின் சக்தியோடு ஒப்பிடுகையில், சூரிய மின்சக்தி நீங்கள் நினைக்கிற OUTPUT ல் 45 % தான் தரும் . ஒருவேளை விஞ்ஞானம் வளர வளர Efficiency also may be improved.

Solar Panels Should be maintained atleast in a month whereas Nuclear plant is not required with this minimum period. ஒருவேளை Solar PVyai சுத்தம் செய்யவில்லை என்றால், அது தரும் Efficiency இன்னும் குறையும். வீடுகளில் பொருத்தப் படும் Battery 4 வருடங்களுக்கு ஒருமுறையேனும் மாற்ற வேண்டி வரும். அணு உலையோடு ஒப்பிடுகையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு Solar Energy will produce less efficiency.  அணு உலையிலும் Efficiency குறையும் என்றாலும் சூரிய சக்தியோடு  ஒப்பிடுகையில், மிகச் சிறந்த Efficiency கிடைக்கும்.

solar energy போடுவதற்கு இன்றளவும் பல நாடுகள் முன் வராததற்குக் காரணம், அதற்கு ஆகும் செலவு மற்ற மின்னாலைகளுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்பதே. ஒருவேளை இனிவரும் காலங்களில், அதிக உபயோகத்திற்கு வந்தால் செலவு குறையும் என்பதும் உண்மை.

சூரிய மின்சக்தியின் நன்மைகளாக என்னென்ன பார்க்கப் படுகிறது என்பதையும் காண்போம். அதிக மாசு வெளிவிடுவதில்லை, gas போன்ற கெடுதலை வெளிவிடுவதில்லை. ஆகையால் இது மிகப் பாதுகாப்பான சக்தி ஆற்றலாகப் பார்க்கப் படுகிறது. வெயில் காலங்களில் தேவையான மின்சக்தி எளிய முறையில் கிடைப்பதால் invertor மூலம் பயன்படுத்தி, சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை, நீங்கள் உற்பத்தி அதிகம் செய்தால் GRID உடன் connect செய்து Export முறையில் பணம் , அரசு நிர்ணயித்த தொகைக்கு பெறவும் முடியும். ஆறுகள் dry ஆவதைப் போல சூரியன் கிடைக்காமல் இருக்கப் போவதில்லை.

ஆனால், அது இயற்கையைப் பொறுத்து அமைவதால், மேலும் எந்த நிலப்பகுதி என்பதைப் பொறுத்து இருப்பதால், இது உலகம் முழுமையும் உபயோகப் படும் என்று சொல்லிவிட முடியாது. இதன் பலனை LOW Lattitude நாடுகள் மட்டுமே அதிக லாபம் அடையும். இந்தியாவைப் பொறுத்த வரையில், its partially Low Lattitude and Partially MIddle Lattitude நாடாக உள்ளது. மழை அதிகம் பெறும் பகுதிகளில் இது அதிக பலனைத் தரப் போவதில்லை.

சூரிய சக்தியை நான் இவ்வாறாகவேப் பார்க்கிறேன். அணுசக்தி, Thermal  (Coal, Gas, Foissal Fuel) போல, இது நமது மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்யாது. வளர்ந்த நாடுகள் வேண்டுமானால் தற்போதைய சூழ்நிலையில் சூரிய சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க இயலும். ஏனெனில், அவர்கள் மின்தேவையைப் பூர்த்தி செய்து கொண்ட நாடுகள். அவை வேண்டுமானால், உடல் நலப் பாதுகாப்புக்கும் சேர்த்து மின் நிலையங்களை அமைக்க இயலும். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு, இன்னும் மின் தேவையின் (DEMAND ), பல மடங்கு அதிகமாவதால், வெறும் சூரிய சக்தியோ , காற்றாலையோ நிச்சயமாக ஒரு மாற்று அல்ல. அது வெறும் அவசர மருந்தாக வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சூரிய சக்தியின் தீமைகள் இன்னும் தெரியாதற்குக் காரணம், அது பெருமளவில் உபயோகத்தில் இல்லை. மேலும், அதற்கு உபயோகிக்கும் Solar PV, Solar thermal ஆகியவை குப்பைக்குச் செல்லும் போதுதான், அதன் ஆபத்துகள் தெரிய வரும். (பொலித்தீன் கவர் போல). எல்லா தொழில் நுட்பத்திலும் உள்ள கோளாறுகள் , அதை உபயோகத்தில் முழுமையாக  கொண்டு வந்த பின்னரே தெரியும். அந்த வகையில், இன்னும் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, இதே சூரிய சக்தியையும், காற்றாலையையும் இயற்கைக்கு விரோதமானவை என்று திட்டவும் கூடும்.

அணு உலையில் ஆபத்தில்லை என்றில்லை. ஆனால், அணு உலை தான் ஆபத்து என்பது போல பிரச்சாரம் செய்ய வேண்டாம் எந்த தொழில் நுட்பமானாலும் , அதில் சாதக பாதகங்கள் இருக்கும்.  ஒரு கற்பனைக்கு, முல்லைப் பெரியாறு டேம் அதிக மழை காரணமாகவோ, புயல் காரணமாகவோ உடைந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கிட்டத்திட்ட ஐந்து மாவட்டங்கள் அழிந்து போகும் . அதற்காக dam வேண்டாம் என்போமா? நமக்கு எங்கு சாதகமோ அங்கு மட்டும், இது எல்லாவற்றையும் தாங்கும் என்று எப்படி வாதிடுகிறோம்? ஆகையால் , கூடங்குளம் அணு ஆலையில் சுனாமி வராது என்பதற்கு என்ன உத்தரவாதம், நில அதிர்ச்சி வராது என்பதற்கு என்ன உத்தர வாதம் என்பது போன்ற கேள்விகள் அர்த்தமற்றது .

அதாவது, அணு உலை production ல் இருக்கும் போது , எந்த அளவுக்குப் பாதுகாப்பாக அமைக்கப் பட்டுள்ளது , அதிலிருந்து எந்த அளவுக்கு கதிரியக்க வீச்சு பாதிக்கும் , அது உண்மையிலேயே இன்று காற்று , நிலக்கரி, வாகனங்கள் மூலம் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதை விட அதிகமா, சென்னையில் குடியிருப்பவன் வாழ்கிற வாழ்க்கை முறையை விட உடல் நலத்திற்குக் கேடா என்ற ஒப்பிடுதலுடன் மட்டுமே அணுக வேண்டும்.

அதை விடுத்து, ஒருவேளை சுனாமி வந்தால், அது வந்தால், இது வந்தால் என்ற எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளுக்கு யார் பதில் சொல்ல முடியும். எந்த ரிக்டர் அளவுக்குத் தாங்கும் வகையில் அணுஆலை கட்டப் பட்டுள்ளது என்று கேட்டால் அர்த்தம் உள்ளது. அப்படி எதிர்காலம் பற்றிய உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றால், நீங்கள் அன்றாட வாழ்க்கையில் நான் வீடு திரும்புவதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு , பின்னர் வெளியில் பயணப் படுங்கள் என்ற மட்டமான வாதத்தை முன் வைக்க வேண்டி வரும்.

என்னைக் கேட்டால், அரசு இதை யார் மீது கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்றால் , பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாக மின்சாரம் கொடுப்பதற்குப் பதிலாக, உனக்கு கொடுக்கப்பெற்ற நிலத்தில் , இவ்வளவு MW மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். அதை நீயே செய்து கொள்ள வேண்டும். அதற்கு மேல் தேவைப் பட்டால் , அரசு குறைந்த கட்டணத்திற்கோ தேவைக்கோ தரும். ஒருவேளை அம்மாதிரியான பன்னாட்டு நிறுவனங்கள் அரசுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்தால் அதற்கு அரசு நிர்ணயிக்கிற விலையையும் தரலாம். இதை, புதிதாக தொடங்கப் படும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் இடும் போதே செய்து கொள்ளலாம். குழு வைத்து, எந்த அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

நான் தொழில் நுட்பங்களை எப்படி பார்க்கிறேன் என்றால், சாதக பாதகங்களை அறிந்து அதிலிருந்து இயன்ற அளவு என்ன செய்தால் பாதுகாப்பாகவும் , வசதிகளுடனும் , தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டும் வாழ இயலும் என்ற கோணத்தில் மட்டுமே அணுகுகிறேன்.

அடுத்து காற்றாலை மாற்று என்று சொல்ல முனைபவர்களுக்கும் அதில் உள்ள சாதக பாதகங்களோடு , அணு உலையோடு ஒப்பிட்டு வைக்க ஒரு மின்னியல் பொறியாளனாக என்னால் முடியும். நோக்கம், சூரிய சக்திக்கு எதிராக குரல் கொடுப்பது அல்ல, அணு மின்சக்தியைப் பற்றிய தவறான அச்சத்தைப் போக்குவதும் ,  எல்லா தொழில் நுட்பத்திலும் உள்ள சாதக பாதகங்களை ஏற்றுக் கொண்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தைப் புரிய வைப்பதுமே…

 

 

8 responses

 1. You should have read this before posting this article………………

  http://uk.reuters.com/article/2012/05/26/us-climate-germany-solar-idUKBRE84P0FI20120526

  If solar power is not reliable why cant we use tidel power which will be available as long as planet surive…. Recently a English engineer found a way to produce reliable 1 MW power per hour using small device. why cant we install 2000 devices in sea to produce 2000MW per hour in limited space. More detail see below youtube link.

 2. தங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி.

  //Germany is having one solar plant which producing 22 GW electicity per hour. This is equalant to 20 Koodankulam nuclear plant…..// தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்து கொண்டேன். ஆனால் தங்கள் புரிதலில் சில தவறுகள் உள்ளன. ஒருவேளை நீங்கள் மின்னியல் துறையில் இருந்தால், இத்தவறு நிகழ்ந்திருக்காது.

  MAY 26 , 2012 அன்று ஜெர்மனியில் 22 GW வரை கதிராலை மூலம் கிடைக்கப் பெற்றதே தாங்கள் குறிப்பிடுவது. அதற்குப் பொருள், அதிகம் வெயில் அடித்த அன்றின் நண்பகலில் PV செல் உள்வாங்கிய அதிக பட்ச energy தான் 22 GW . நீங்கள் அந்த ஒருநாளை மட்டும் கணக்கில் கொள்ளலாகாது. விக்கி பீடியா தகவல் படி, 24 .8 GW SOLAR POWER PLANT ஜெர்மனியில் GRID உடன் இணைக்கப்பட்டுள்ளது. SOLAR ENEGRY மூலம் அந்த ஆண்டின் மொத்த மின் உற்பத்தி 18 TWH . இதை நீங்கள் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு SOLAR ENERGY மூலம் கிடைக்கப் பெற்ற உற்பத்தியை CALCULATE செய்தால், (18000GW/12 Months = 1500GW PER MONTH, 1500/30days =50GW/day. 50 / 24 = 2.08 GW). அதாவது, ஆண்டின் மொத்த உற்பத்தியில் இருந்து , PER HOUR எனக் CALCULATE செய்தால் 2 .08 GW /HR தான் சராசரியாகக் கிடைக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 24 .8 GW உற்பத்தி செய்ய வேண்டிய இடத்தில், ஜெர்மனியில் 2 .08 GW தான் கிடைக்கிறது. அதாவது, அதனுடைய CAPACITY FACTOR என்பது 8.38 % மட்டுமே. மீண்டும் கூறுகிறேன். சூரிய மின்சக்திக்கு எதிராக பேசுவது என் நோக்கமல்ல. அதனைப் பற்றிய புரிதல் மிகக் குறைவாக இருந்து கொண்டு, அது அணு மற்றும் அனல் மின்சக்திக்கு மாற்று என்பது போலப் பரப்புரை செய்பவர்கள் , இதற்காகும் நிலப் பகுதியையும் , இதன் மூலம் இன்றைய தொழில் நுட்பத்தின் துணை கொண்டு கிடைக்கப் பெறுகிற CAPACITY FACTOR மிகக் குறைவு என்கிற புரிதலோடு செயல் படவில்லை என்பதே எனது வாதம். இன்றைய நிலையில் , கதிராலைகளுக்கு ஆகும் செலவும் மிக அதிகம் என்பதையும் புரிந்து கொண்டு , பேசுதலும் அரசுக்கு அறிவுறுத்தலும் நலம் .

 3. TIDEL ENERGY பற்றி ஒரு கட்டுரை விரைவில் எழுதலாம் என்று இருக்கிறேன். அதன் சாதக பாதகங்களை அறியும் போது, அது ஏன் உலக நாடுகள் நடைமுறைப் படுத்தவில்லை என்கிற புரிதல் ஏற்படும். கருத்துக்கு நன்றி நண்பரே !

 4. The biggest problem among Tamil writers and intellectuals is that anything technology based or science based is bad for them all. Today, if Jeyamohan or Gnani are so conscious about problems of Atomic Power plant, they should first stop using internet, as use of internet is causing global warming problem. They must not travel. Must not use Air-conditioner or artificial lights. Recently Jeyamohan has been to Namibia by air. He must know the hidden cost of air travel and which one of the worst polluting process. Today, the civilisation is reached such a point, that we cannot go back to stone-age by giving up all things scientific. The only sensible thing we all can do is to reduce our consumption, perhaps including my posting this comment here ;). No one here takes a balanced views. Do they all think, even someone like Abdul Kalam has not thought about all the alternatives. Perhaps, this is the only post in the Tamil speaking world, I have seen making sense with evidence. We should honestly accept that majority of Tamils lack scientific temper.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s