காற்றாலைகள் ஒரு பார்வை

கடந்த  2011 ஆம் ஆண்டின் கணக்கின் படி,  உலகில் காற்றாலைகளின் பங்கு 2.5 % ஆகும். காற்றாலையின் INSTALLED CAPACITY is 238GW .

இந்தியாவைப் பொறுத்தவரையில், காற்றாலைகளின் INSTALLED CAPACITY IS 16GW . அதில் தமிழ்நாட்டில் மட்டும் 6 .9  GW அளவிற்கு காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தியா காற்றாலைகளை அதிகமாய் INSTALL செய்த நாடுகளில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
காற்றாலைகளின் நன்மைகளாகப் பார்ப்போமேயானால், அது CO2 அதிகம் உமிழாததும், காற்று மாசுபடுதலைத் தவிர்த்தலும் ஆகும். மேலும், எந்த கதிர் இயக்கங்களும் காற்றாலைகள் மூலமாக வெளிவருவதில்லை. காற்றாலைகள், அணு கழிவுகள் போல் எதையும் தன்னுள் கொண்டில்லை என்பதும் இதன் பலம். மேலும் இது கதிராலையைப் போல CLEAN energy என்றே அழைக்கப்படுகிறது. காலம் முழுமைக்கும் காற்று இருக்கும் என்பதும் இதன் பலம். எந்த ஒரு ACID RAIN போன்ற தீய விளைவுகளை காற்றாலை மின் உற்பத்தித் தருவதில்லை.
காற்றாலைகள் பெரும்பாலும் மலைகளை ஒட்டிய நீண்ட (  உயரக் கட்டிடங்கள் அருகில் இல்லாத,) வெற்று நிலப்பரப்புகளிலும், கடற்கரை ஓரங்களிலும், கடலிலும் நிறுவப்பெற்றுள்ளன. காற்றாலைகளை, விவசாய நிலங்களிலும் நிறுவி மின் உற்பத்தியைப் பெற உதவுகிறது. காற்றுதான் மின் உற்பத்தி செய்வதற்கான INPUT ஆக இருப்பதால், SOURCE செலவு மிச்சம்.

ஆனால் இதில் உள்ள சிக்கல் என்று பார்ப்போமேயானால் , எம்மாதிரியான நிலப்பரப்பு வருடத்தில் அதிக காற்று பெறுகிறது என்பதைப் பொறுத்தும், எத்திசையில் அமைத்தால் அதிக மின் உற்பத்தி பெற இயலும் என்பதைப் பொறுத்து நிறுவ வேண்டியுள்ளது.

காற்றாலைகளை நிறுவுவதில் உள்ள தீங்குகள்:

CAPACITY FACTOR is VERY LOW . 1000 MW INSTALL செய்யப்பட்ட காற்றாலையின் மூலம் 200MW டு 300MW வரைதான் சராசரியாக உற்பத்தி செய்ய இயலுகிறது. அதாவது, ஆண்டு முழுமைக்குமான காற்று மின் உற்பத்தி என்பது வெறும் 20 முதல் 30 % வரை மட்டுமே. அணு ஆலைகள் மூலம் 90 % வரை அணு மின் உற்பத்தி ,(உலகம் முழுவதும்) மின்சாரம் கிடைக்கிறது. காற்றின் மூலம் இதைப் பெற இயலாததற்குக் காரணம், காற்று இயற்கை சக்தியாக இருப்பதால் அதனைக் கட்டுப் படுத்த இயலாததும், காலநிலைக்கு ஏற்பவே உற்பத்தி பெற இயலும் என்பதே!.

காற்றாலைகளுக்கு தேவைப்படுகிற நிலப்பரப்பு மிக மிக அதிகம் என்பது அதன் தீமையாகப் பார்க்கப்படுகிறது. 1000MW அணு மின் உற்பத்திக்கு அதிக பட்சம் 2 சதுர கிலோ மீட்டர் இடம் இருந்தால் போதுமானது. ஆனால், அதே 1000 MW காற்றாலையை நிறுவ, 400 சதுர கிலோ மீட்டர் தேவைப்படுகிறது. Just Imagine, 400SQ KILO Meter means, how much land area required to allocate for a wind energy.

அணு ஆலைகள் மூலம், இரண்டு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 900MW அணு மின் உற்பத்தி செய்ய இயலும். ஆனால், 900 MW மின் உற்பத்தியைப் பெற காற்றாலைகளை அமைக்க வேண்டுமானால், 3000MW அளவுக்கு காற்றாலைகள் INSTALL செய்யப்பட வேண்டும். அவ்வாறு ஒப்பிடுகையில், அதற்காகும் நிலப்பரப்பு எவ்வளவு தெரியுமா? 1200 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு ஒதுக்கினால் மட்டுமே, ஒரு அணு ஆலை மூலம் 2 சதுர கிலோ மீட்டரில் மின் உற்பத்தி செய்கிற அளவுக்கு , காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய இயலும். அதற்காகும் நிலப்பரப்பை பின்வரும் வீடியோவில் உள்ள தரவுகளைக் கொண்டே தரப்பட்டுள்ளது. 

http://www.youtube.com/watch?v=UK8ccWSZkic

 

Intermittent Output of Wind Energy:

காற்று சீராக வீசாது என்பதே இம்முறையில் உள்ள மிகப் பெரிய சிக்கல். இதை  தொழில் நுட்ப முறையில் மட்டுமே விளக்க இயலும். Wind Turbines எப்படி வடிவமைப்பார்கள் என்றால், காற்றின் வேகம் குறைந்த பட்சம் 6 miles per hour என்று வீசினால் மட்டுமே wind turbine சுழலும் வகையிலும், காற்றின் வேகம் 25 miles per hour ஆக இருந்தால், wind turbine automatic க்காக நின்று விடும். இல்லாவிடில் Turbine வெடித்துச் சிதறும் அபாயமுண்டு. மேலும், GRID உடன் இணைப்பதில் மின் உற்பத்தி சீராக இல்லாதிருத்தலால் ( மணிக்கு ஒரு முறையோ, நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறையோ காற்றின் வேகம் மாறுவதால்), அதிக அளவு MW ஐக் , grid உடன் இணைக்கும் போது GRID STABILIY is questionable.
NOISE POLLUTION PROBLEM, காற்றாலைகளால் ஏற்படுகிறது என்பதும் அதன் மூலம் இரண்டு கிலோ மீட்டர் பகுதிகளுக்கு உட்பட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கு, தலைவலி, காது கேளாமை, மற்றும் பல நோய்கள் வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அது குறித்த ஆய்வுக்கட்டுரைக்கான பிணையை இணைக்கிறேன். ஆனால், இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. இது பற்றிய ஆய்வுகள் இன்னமும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்று நினைக்கிறேன்.

WIND TURBINE BLADES மூலம் பறவைகள் அதிகமாக இறப்புக்கு உள்ளாகின்றன என்பது இதன் மீது உயிர்களைப் பாதிக்கிற விடயமாக வைக்கிற குறைபாடு. பறவைகள் இறப்பதற்கு WIND ENERGY காட்டிலும், LARGE BUILDINGS , AIR CRAFT என பல காரணங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடலில் அமைக்கப்பெறுகிற போது , கடல் வாழ் உயிரினங்களையும், கடல் வாழ் பாலூட்டிகளையும் அதிகமாக பாதிப்பதாகவும், கடல் நீர் என்பதால் , wind turbine blades அரிப்புக்கு உள்ளாவதாகவும் , அதன் ஆயுள்காலம் குறைவு என்பதும் அதன் குறைகளாகப் பார்க்கப்படுகிறது . அது மட்டுமல்லாமல் கடலில் நிறுவ, அதிக பொருள் செலவு எனபதும் அதிகம் நிறுவாமல் இருப்பதற்குக் காரணம்.

இயற்கையின் அழகை WIND TURBINES கெடுத்து விடுவதாக, காற்றாலைகளின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

காற்றாலைகள் என்பது இயற்கைக்கு எம்மாதிரியான முரணை வளர்க்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதாவது, காற்றின் பரவலை எல்லாத் திசைகளுக்குமாக இல்லாது செய்வது எம்மாதிரியான சுற்றுப் புறச் சூழலுக்குக் கேடு என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது மட்டுமே மனித இனத்திற்கு என்ன கேடு என்று அலசப்படும்.

காற்றாலைகளும் கதிராலைகளைப் போல SEASON நேரங்களில் மட்டுமே , இன்றைய மின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும். அதன் மூலம், முழுமையான பலனை வருடம் முழுமைக்குமாக பெற இயலாது என்கிற புரிதலோடு அணுகுவதே தொழில் நுட்ப ரீதியாக சரியாக இருக்கும். இல்லையெனில், வெறும் விவாதத்திற்கு மட்டுமே அணுஉலையை எதிர்ப்பதாக அர்த்தப்பட்டுவிடும்.

இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிற நிலக்கரி, ஆயில், காஸ் பற்றியும், அதன் நன்மை தீமைகளை அடுத்த கட்டுரையில் விவரிக்கிறேன்.

2 responses

  1. கூடங்குளத்தில் அரசின் அலட்சியம் பற்றியும் விவரித்தால் சரியானதாக இருக்கும் .அரசு என்ன செய்ய வேண்டும் என்று கட்டுரை பதிவு செய்யலாம்.என்ன வசதி மக்களுக்கு செய்து தந்திருக்க வேண்டும் ,இதுவரை என்ன செய்தார்கள் .அதையும் தங்கள் கூறவேண்டும் . உங்களுடைய பதிவுகள் இரு பக்கத்தையும் ஆராய்வதாக இருக்க வேண்டும் .ஆனால் இதுவரை ?????????????????????

  2. 05/10/2012, வெளியாகியுள்ள தமிழ் பேப்பரில் நான் எழுதியுள்ள” மின்சாரம்: அனல்,அணு, காற்று, நீர்” என்ற கட்டுரையில் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன். நிச்சயம் அரசுகள் என்ன மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி கட்டுரை எழுதுவேன். கவலைப்படாதீர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s