Dirtiest Energy என்றழைக்கப்பட்டாலும் உலகின் பெரும் மின் தேவையை இன்றளவும் பெருமளவில் பூர்த்தி செய்வது அனல் மின் நிலையங்களே!. உலகின் மிகவும் பழமை வாய்ந்த மின் உற்பத்தி முறை , மேலும் அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் முறைகளைக் கொண்ட பெருமை, நிலக்கரி மின் உற்பத்தி முறைகளுக்கே சாரும். உலகின் மொத்த மின் ஆலைகளில், நிலக்கரி மற்றும் காஸ் மின்னாலைகள் தான் 66% பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மின் தேவையில் ஏறத்தாழ 68% அனல் மின் நிலையங்களின் பங்கு உள்ளது.
அனல் மின் உற்பத்தி என்பது Heat Energy யை Electrical Energy ஆக மாற்றி மின் உற்பத்தியைப் பெறுவதே.
எந்த மின் உற்பத்தி முறையும் மிகச் சிறந்தது என யாரும் சொல்ல இயலாது. நிலக்கரி உற்பத்தி முறைக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் வாதம் , அது தேவைப்படக்கூடிய பூதம்!. இந்தியாவைப் பொறுத்தவரையில், உலகில் அதிகமாக பூமிக்கடியில் நிலக்கரி கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஓன்று. ஆகையால், பூதமாக இருந்தாலும், அணு ஆலைகள், காஸ் ஆலைகளைக் காட்டிலும் அதன் செலவு குறைவு என்பதே அதைப் பின்பற்றுவதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. நம்மிடம் அதிகமாக நிலக்கரி இருப்பதால் (ஆனால் இன்று இறக்குமதி செய்யக் கூடிய நிலைக்கு வந்துள்ளதற்கு இங்குள்ள அரசியலே காரணம்), சில நன்மைகளோடு பல கெடுதல்களை விளைவித்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம் என்பது தான் அணு உலை எதிர்ப்பாளர்கள் அமைதியாக இருக்க முக்கியக் காரணம். இந்தியாவில் உள்ள நிலக்கரி தான் VERY POOR QUALITY என்பது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி உற்பத்தி முறையின் நன்மை தீமைகளைப் பற்றி முதலில் காண்போம். நிலக்கரியின் மிக முக்கிய நன்மையாகப் பார்க்கப்படுவது, தேவைக்கு அதிகமாக இருப்பதும், அதன் Operating Cost அணு, காஸ் ஆகியவற்றைக் காட்டிலும் மிகக் குறைவு என்பதே. ஆனால் கதிராலைகள், காற்றாலைகளைக் காட்டிலும் Operating Cost அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி NON RENEWABLE ENERGY யாக இருப்பதால், அதன் மூலம் 24 * 7 மின் உற்பத்தி செய்ய இயலும். பராமரிப்பு நேரங்களிலும், ஏதேனும் boiler போன்ற சாதனங்களில் குறைபாடுகள் ஏற்படுகிற காலங்களிலும் நிலக்கரி கொண்டு வருவதில் தடை ( மழை நேரங்களில்)ஏற்பட்டால் மட்டும் மின் உற்பத்தி தராது. அணு மின் உற்பத்தி முறையில் கிடைக்கப் பெறும் மின் உறபத்தியைக் காட்டிலும் நிலக்கரி முறையில் அதன் CAPACITYFACTOR (ஆற்றல் அளவு) குறைவு . ஆனால் அதே வேளையில் , RENEWABLE Energyகளான கதிராலைகள், காற்றாலைகள், நீராலைகள் ஆகியவற்றைக் காட்டிலும் மின் உற்பத்தியின் பங்களிப்பில் நிலக்கரி, காஸ் ஆகியவற்றின் பங்கு அதிகம்.
RENEWABLE Energy யைக் காட்டிலும் நிலக்கரி மின் உற்பத்தி முறை ரொம்பவும் நம்பத்தகுந்தது. (reliable).
அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலப்பரப்பு, கதிர், காற்று , நீர் ஆலைகளைக் காட்டிலும் மிக மிகக் குறைவு என்பது இதன் மிக முக்கிய நன்மையாகப் பார்க்கப் படுகிறது.
நிலக்கரியின் தீமைகளைப் பற்றி சொல்வதானால் GREENHOUSEGASES (GHG ) EFFECT என்பது மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. GHG என்பது CO 2, மீத்தேன் , nitrus oxide , H2O மற்றும் சில இயற்கைக் காரணிகளாலும் , மனித உந்துதலிலும் வெளியிடப்பெறும் வாயுக்களைத் தான் GHG effect ஆகும். இதன் மூலம் நிலம் வெப்ப மாத்தளைத் தான் GLOBAL WARMING என்று சொல்கிறோம்.
http://www.worldcoal.org/coal-the-environment/climate-change/ இந்த கட்டுரை மூலம், GHG EFFECT உருவாவதில் நிலக்கரி, காஸ், மற்றும் ஆயில் ஆகியவற்றின் பங்கைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தக் கட்டுரை மூலமாக காற்று மாசுபடுதையும் அறிந்து கொள்ளலாம். GHG EFFECTல் co 2 வை வெளியிடுவதில் ,நிலக்கரி 25%, காஸ் மற்றும் ஆயில் 37% வகிக்கிறது. மற்றவை 38% என இந்த ஆய்வு சொல்கிறது.CO 2 வின் வெளிப்பாடு அதிகமாக அதிகமாக , TEMPERATURE also will increase . GLOBALWARMING ல் மிக முக்கியப் பங்கு வகிப்பது அனல் மின் உற்பத்தி முறையே!!!
IEA எடுத்து வரும் முக்கிய முயற்சி , 2050 க்குள் CO 2 உமிழ்வை பாதி அளவு குறைக்கச் செய்வதே ஆகும். அதே வேளையில், உலகின் மின் தேவை 2050 ல் இரண்டு மடங்காக இருக்கும் என்றும் சொல்கிறது. GLOBAL WARMING உண்டாவதில் கிட்டத்திட்ட ENERGY PRODUCTION and Consumption( TV, Ref, laptop, Vehicles) மூலமாக 61% GHGEffect உள்ளது.
COALMINES மூலம் வருடா வருடம் ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளும் USA , CHINA , ரஷ்யா போன்ற நாடுகளிலேயே நிலக்கரி சுரங்க விபத்துக்களைத் தவிர்க்க முடிவதில்லையாம்.
விக்கி பீடியாவின் தகவல் படி ,http://en.wikipedia.org/wiki/Coal_seam_fire இந்தக் கட்டுரை நிலக்கரி சுரங்கத்தின் ஆபத்துகளைப் பற்றி விலாவாரியாகத் தெரிவிக்கிறது.
நிலக்கரி சுரங்கத்தினால் காடுகள் அழிக்கப்படுதலும், காற்று மாசுபடுதலும் தவிர்க்க இயலாதது. மேலும், நிலத்தின் திடத் தன்மையை இழப்பதால் நிலக்கரி சுரங்க தீ விபத்துக்குள்ளான பகுதி என்பது பல நூறாண்டுகளுக்கு அதன் எரியூட்டப்பட்ட தன்மை இருப்பதால், அந்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம்.
எந்தெந்த நிலப்பகுதிகளில் நிலக்கரி பூமிக்கடியில் கிடைக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் அரசுகளால் அப்புறப் படுத்தப்படுகிறார்கள்!!!!. உதாரணத்துக்கு டேஹல்கா பத்திரிக்கைச் செய்திக்கான இணைப்பைத் தருகிறேன். (http://www.tehelka.com/story_main41.asp?filename=Bu201208reckless_in.asp).
அனல் மின் ஆலைகள் மூலம் வெளிவருகிற sulpher di oxide, carbon monoxide, mercury, selinium and ஆர்செனிக் ஆகியவற்றால் ACIDRAIN பெய்கிறது. மேலும் சுற்றுச் சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்துகிறது.
LUNG CANCER மற்றும் ஆஸ்த்மா போன்ற நோய்கள் வருவதற்கு முக்கிய காரணியாக அனல் மின் நிலையங்கள் உள்ளன.
http://www.world-nuclear.org/info/inf06.html இந்தக் கட்டுரை, ஒவ்வொரு மின் உற்பத்தி முறைகளிலும் நிகழ்ந்த விபத்துகளையும் உயிர் இழப்புகளையும் அதனுடைய மின் உற்பத்தி முறைகளோடு ஒப்பிட்டு பேசுகிறது.
1GW – YEAR நிலக்கரி மின் உற்பத்தியினால், உண்டாகும் COAL WASTE எவ்வளவு தெரியமா? 8,00,000 TONS ஆகும். 1GW – YEAR அணு மின் உற்பத்தியால் உண்டாகும் NUCLEAR WASTE 20 TONS ஆகும். இந்த வீடியோவைப் பார்த்தால், http://www.youtube.com/watch?v=UK8ccWSZkic நிச்சயம் அனல் மின் உற்பத்தி முறையைப் பற்றிய சரியான புரிதல் ஏற்படும். இந்த வீடியோவில் ஒருவர் அணு மின்சக்தி தேவை என்பதைப் பற்றி பேசுகிறார். மற்றொருவர் அணு மின்சக்திக்குப் பதிலாக கதிராலைகளும் ,காற்றாலைகளும் தேவை என்று வாதம் செய்கிறார். இதில் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவரும் மற்ற மின்சக்தி முறைகளில் உள்ள தீங்குகளைப் பற்றி சொல்லும் போது அதிகமாக இடிபட்டுக் கொண்டிருப்பதும், அதிக தீங்காக இருவரும் முன் வைப்பதும் அனல் மின் உற்பத்தி முறையையே!!!!
நிலக்கரி சுரங்க தீ விபத்துக்கள் பற்றிய புரிதல் இருந்தால் , அது பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு அதன் ஆபத்தைப் பற்றி அறிந்து கொள்ளுதலும் புரியும். ஆனால் இங்கு அணு ஆலை மட்டும் கூடாது என்பவர்கள் சுனாமி வந்தால், இயற்கைப் பேரழிவு வந்தால் என்றெல்லாம் எதிர்பாரா இயற்கை சீற்றத்தைப் பற்றி வினா எழுப்ப முடியும். ஆனால் அனல் மின் நிலையங்கள் மூலம், அன்றாடம் ஏற்படுகிற தீங்குகளைப் பற்றி பேசாமல் எப்படி இருக்க முடிகிறது??.
மின் உற்பத்தியில், அணு மின் உற்பத்தியைப் பற்றி பேசினால் இந்தியாவில் அது வெறும் 2.7% தான் பங்கு என்கிறார்கள். ஆகையால் விளக்கை அணைக்க வேண்டுமாம். ஓன்று, இந்திய அரசு வெறும் 2,7% தான் இதுவரை அணு ஆலைகளை நிறுவியுள்ளது என பாராட்ட வேண்டியது தானே???!!!. அதிகமாக எந்த மின் ஆலைகளை அமைக்கிறோமோ , அதற்கு ஏற்றாற் போல் , அந்த மின் உற்பத்தியின் பங்கு இருக்கும் என்பதைப் பற்றி அறியாமல் பேசுபவர்களைப் பற்றி என்ன செய்வது?
ஆகையால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எல்லா மின் உற்பத்தி தொழில் நுட்பங்களிலும் பல குளறுபடிகள் உள்ளன. ஆகையால் எல்லா மின் உற்பத்தி முறையையும் பின் பற்றுவோம், அதனால் தீங்கை நம்மால் தடுக்க முடிந்த வரையில் தடுத்து , உபயோகிக்க வேண்டியது அவசியமாகிறது.
உங்கள் உணவில் விடத்தை வைத்து சாப்பிடுவீர்களா என்று பேசுகிற அணு ஆலை எதிர்ப்பாளர்கள், நிலக்கரி மூலம் தினம் தினம் விடத்தை மட்டுமே உண்ணச் செய்கிற அனல் மின் ஆலைகளைக் கண்டு கொள்ளாது, அணு ஆலை மட்டும் கூடாது என்பது என்ன விதத்தில் நியாயம்????.
விளக்கம்… நல்ல விளக்கங்கள்…
அங்கங்கே இணைப்பு கொடுத்துள்ளீர்கள்… ஒன்றை மட்டும் தான் பார்த்தேன்… மின் வெட்டு… மற்ற மூன்றை பார்க்கிறேன்…
முடிவில் உள்ள கேள்வி… சிந்திக்க வைக்கிறது…
மிக்க நன்றி சார்…