நீயா நானாவில் கருபழனியப்பன் – சுவாராஸ்யமான பேச்சு – காணொளி

கரு பழனியப்பனின் காதல் திருமணம் குறித்த பேச்சில் குறிப்பாக நான் கவனித்தது இதுதான்:

” எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய். ஆனால் செய்த பிறகு , உன்னால் அந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமெனில் மீண்டும் , மீண்டும் தாராளமாக செய். ஏனெனில் நீ செய்கிற விஷயம் சரியானது. ஆனால் ஒரு காரியத்தை செய்து விட்டு, அதை உன் தந்தை என்னிடம் பகிர முடியாதெனில், மீண்டும் அதைச் செய்யாதே. ஏனெனில் அது தவறு”. மிகச் சரியான, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு பிள்ளைகளுக்குச் சொல்லப்பட்ட அறிவுரை. இதைக் காட்டிலும் , பிள்ளைகளுக்கு அறிவுரைகளைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

http://www.youtube.com/watch?v=oTnJEeMjzDE&feature=related

கரு பழனியப்பனின் பேச்சு சிவகாசி சரவெடி போல படபடவென வெடிக்கும். மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாக (சரி தவறு என்பதற்கு அப்பாற்பட்டு) தன் நிலைப்பாட்டை எடுத்து வைப்பார். இந்த நீயா நானாவில் அது தெளிவாகத் தெரிந்தது.