பிள்ளையார் சுழி

எனது வேண்டுகோளுக்கினங்க நண்பர் முருகன் எழுதித் தந்த பிள்ளையார் சுழி என்ற இக்கட்டுரை,  இவ்வுலகம் எப்படி இயங்க வேண்டும் என்பதைப் பற்றி அவரது பார்வையையும் அதை ஆன்மிகத்தின் துணை கொண்டும், அவரின் அணுகுதலைப் பற்றிய புரிதலை நமக்கு ஏற்படுத்துகிறார்.

பிள்ளையார் சுழி என்பதற்கு என்ன பொருள்? உலகம் சிவமயம் என்பதே பிள்ளையார் சுழி என்பதற்கான பொருள். “உ” என்ற வார்த்தையிட்டு எழுதுவதன் நோக்கம் என்ன? ” லாபம் ” என்பதே அதன் பொருள். அது வெறும் தொழில் மூலமோ, செய்கிற வேலையின் மூலமாக அதிக பொருள் லாபம் ஈட்டுவது மட்டுமா? நிச்சயமாக இல்லை. அப்படியானால் அதன் பொருள் என்ன? நான் செய்யும் தொழில் உலகத்திற்கு, அமைதியான உலகத்திற்கு  நன்மை (லாபம்) தருவதாக அமைய வேண்டும் என்பது தான் சொல்லாமல் சொல்லித் தந்த மறைபொருள்!.

அதை நம் தமிழினம் , உலக சமுதாயம் என்றும் நினைவில் நிறுத்தி வாழ வேண்டும். என் உள்ளத்துப் பிறந்த சிந்தனை: உள்ளம்! உயர்வு! உணர்வு! உலகம் உய்ய உணர்க ! உலகம் உயர உள்ளுக! என்றெண்ணி காரியத்தை, செயலைத் தொடங்க வேண்டும் என்று தமிழ்ப் பெரியோர்கள் எண்ணினர். இதையே வள்ளுவனும் தனது உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற குறலில் கூறியுள்ளார்.

சிவ சக்தி: சிவம் – நிலை ஆற்றல் சக்தி  – இயக்க ஆற்றல் நிலை ஆற்றலைப் பாதிக்காது தடம் புரளாது நாம் இயக்க ஆற்றலைப் பெற வேண்டும்.இதற்கு எடுத்துக்காட்டு அணை நீரை முறையாகப் பயன்படுத்துவது! அணை நீர் – நிலை ஆற்றல் என்றால், மதகு வழி வெளியேறும் நீர் – இயக்க ஆற்றல் என்பதாகும். இது நாம் கற்ற ஆரம்ப அறிவியல் பாடமல்லவா? அதுபோலவே நம்முடைய செயல்கள் உலகைப் பொறுத்தும் உடலைப் பொறுத்தும்  நன்மை தருவதாக அமைய வேண்டும் என்றெண்ணி நம் முன்னோர் செயல்பட்டனர்.

நாமும் அப்படித்தான் நடக்கிறோம் என்றால் அது எனக்கு மிகப் பெரிய ஐயத்தை ஏற்படுத்துகிறது. நாம் சரியாக சென்று கொண்டிருக்கிறோம் என்றால் எப்படி ?? Air Pollution (காற்று மாசுபடுதல்), நீர் மாசுபடுதல், ஒலி மாசுபாடு, சுற்றுச்சூழல் தீங்கு, உலகம் வெப்பமயமாதல் மற்றும் புதிது புதிதான நோய்கள் , தொற்று நோய்கள் போன்றவை ஏன் ஏற்பட்டுள்ளன?

REAL ESTATE என்ற பெயரில் காடுகளை வெட்டி வருகிறோம். நன்செய் நிலங்களையும் வீட்டு மனை என்ற பெயரில் விற்று வருகிறோம். கண்ணை விற்றா! சித்திரம் வாங்குவது? உறையுள் அமைக்க (வீடு சட்ட) அமைக்க இயற்கையை முற்றிலுமாக அளித்தால் உணவு உடைக்கு எங்கே செல்வது? Globalisation (உலக தாராள மயமாக்கல்) என்ற பெயரில் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறோம். அரிசி, கோதுமை போன்ற தானியங்களை RELIANCE போன்ற நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்கின்றன. அதைப் பெற்று ஜப்பான் போன்ற நாடுகள் எரிபொருள்(ஒருவகை ஆல்ககால்) தயாரித்து மோட்டார் வாகனங்களையும் மோட்டார்களையும் இயக்குகின்றன. பெட்ரோலுக்குப் மாற்றாக அதனைப் பயன்படுத்தி அவர்களது தங்கள் அந்நிய செலவாணியைக் கட்டுப் படுத்துகின்றன. ஆனால் நம் பாரத நாட்டில் அரிசி, கோதுமை அதிக விலைக்கு விற்கப்படும் நிலை, தட்டுப்பாடு என பெரிய நிறுவனங்கள் அவற்றைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கிறார்கள். விளைவித்த விவசாயி மட்டும் வாழ்க்கைத் தரம் உயராது பெரும் இழப்பு ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கிறானே! யாராவது சிந்திக்கிறோமா? உழவர் திருநாளும் பொங்கல் திருநாளும் யாருக்காகக் கொண்டாடுகிறோம்?

தமிழ் ஆண்டுப் பிறப்பை சித்திரை முதல் நாள்  கொண்டாடினால் என்ன? தை முதல் நாளில் கொண்டாடினால் என்ன? பட்டிமன்றம் நடத்தும் படித்த வர்க்கமே! பாட்டாளி உயர்ச் சிந்தனைகள் செய்தாயா?? வேதி உரம், பூச்சி மருந்து , விவசாயக் கடன் இவற்றுக்கே அவனது ரத்தமும் வியர்வையும் உறிஞ்சப்படுகிறதே!! விவசாயியின் வாழ்வாதாரம் வற்றி விட்டதே!  விளை  நிலங்களை  விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறானே!!!  வீட்டு மனை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தால் , விளை நிலங்களையும் , விவசாயியையும் இழக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை. நாம் சேர்த்த காசும் பணமும் பொன்னுமா நமக்கு சோறு போடும்.

நம்முடைய  USE and Throw சிந்தனை நம்மையே கொன்று கொண்டிருக்கிறது. இங்கிருக்கும் பாலித்தீன் குப்பைகளை அகற்றவே இந்த ஜென்மம் போதாது. அவ்வாறிருக்க வெளிநாட்டில் இருந்து கழிவுகளை கப்பல் மூலமாக இந்தியாவில் இறக்குமதி செய்கிறார்கள். அதை வரவேற்று பணம் சம்பாதிக்க வரிசையில் இன்று நிற்பவர்கள் நாளை மலத்தைக் கூட நுகர தயங்க மாட்டார்கள்.

இயற்கைக்கு முரணாக நாம் வாழப் பழகிக் கொண்டோம் என்று பெருமைப்பட வேண்டாம்!!! அதற்கான பலனை இன்று குளோபல் வார்மிங் , சுனாமி, புதிய புயல் என வருடா வருடம் அவறிற்கு புதிய பெயரிட்டும் பல உயிர்களைப் பலி கொடுக்கிற நாம் , இப்படியே இருப்போமேயானால் நாமும் பலியாவோம் என்பது நிஜம். ஆளுகின்ற ஜனநாயக அரசுகளும் இதைப் பற்றிக் கவலைப் படுவதாக இல்லை.

கண்ணை விற்றுச் சுதந்திரம் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனை இல்லாமல் செயல் படும் நாம் என்று திருந்தப் போகிறோம். பஞ்ச பூதங்களைப் பாழாக்கினால் , பஞ்ச பூதங்களால் ஆன நம் உடலும் உயிரும் எவ்விதம் வாழும்! உலகம், உள்ளம், உடல், உயர்வு பெயரச் சிந்திப்போம்.நீ எம்மதத்தினனாக இருந்தல்லும் சரி! “உ” இது பிள்ளையார் சுழி அன்று. உடல்,உயிர், உள்ளம், உணர்வு உயர சிந்திப்போம்!  உலகம் நன்மை பெற பாடுபடுவோம்.

2 responses

  1. விளக்கங்கள் அருமை… நன்றி…

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s