அலுவலகங்களில் உள்ள சாதியத் தீண்டாமை!!??

முகநூலில் எழுதப்படுகிற சாதியத் தீண்டாமை வேறு வடிவங்களில் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றிய கட்டுரையே  இது. எங்களைப் பொறுத்தவரையில் ஆதிக்க சாதி என்பது ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள  HR Divisions மட்டுமே!  ஏதோ மதங்கள் தான் சாதியத் தீண்டாமைக்கு முழுக்காரணம் என்று எண்ணிக் கொண்டிருக்கிற படித்த, நகரத்து சமூகம் அலுவலகங்களில் உள்ள நடைமுறைச் சிக்கலை எவ்வாறு பார்க்கிறார்கள்? பன்னாட்டு நிறுவனங்களிலும், இன்னபிற தனியார் அலுவலகங்களிலும் HR DIVISION என்பதே ஆதிக்க சாதியாக உள்ளது. அந்த நிறுவனத்தில் உள்ள மற்ற துறைகள் எல்லாம் , தொழில் நுட்ப உதவிகள் மூலமாக நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு பெற்ற போதும் தனது முதலாளிகளான  ஐரோப்பிய அமெரிக்க நிறுவனங்கள் அதிக லாபங்களை சம்பாதிக்க பேருதவி புரிந்து தங்களை  மிகச் சிறந்த விசுவாசிகளாகக் காட்டிக் கொண்டு தங்களின் சுய லாபங்களை பெற்றுக் கொண்டும் அதற்கு உதவியாக , நிறுவனத்தில் உள்ள மிகப் பெரிய பதவிகளில் உள்ளவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கொடுத்து மற்றவர்களை ஒடுக்குகிற ஆதிக்க சாதிகள் தான் இந்த HR Division .

ஒவ்வொரு நிறுவனத்திலும் Production , Design, purchase, Project Management and Services Division என உள்ள பல துறைகளும் பிற்படுத்தப்பட்ட மக்களாகவே பார்க்கப்படுவார்கள் இதிலும் ACTIVITY BASED முறையில் அவர்களுக்குள் தாங்கள் தான் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ள முற்படுவார்கள். இந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்திலும் அதனதன் பதவிகளைப் பொறுத்தும் மேலடுக்கு சமூகமும் ஒடுக்கப்பட்ட சமூகமும் உள்ளது.

எனக்கு ஒரு கேள்வி. உதாரணமாக ஒரு  Technician ஐ வேலைக்கு எடுக்கும் போது அவனது பணியாகக் குறிக்கப்படுவது என்பது வேறு. EXTRA WORK என்பது அவனுடைய அறிவையும், முன்னேற்றத்துக்குமானதென்றால் செய்வதில் தவறில்லை. ஆனால் அவன் செய்கிற வேலைகளை பல நேரங்களில் பார்ப்போமேயானால்  அவனை ஒரு தாழ்த்தப்பட்ட சமூகமாக நடத்தும் வேலைகள் மிகச் சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன.

பல நேரங்களில் பல கம்பெனிகளில்  OFFICE BOY இல்லையென்றால் Technician தான் வந்திருக்கிற Customers , Manager மற்றும் ENGINEER க்கு  Tea , Coffee போட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும் கடைகளில் சாப்பாடு வாங்க வேண்டி இருந்ததென்றால் technician ஐப் பயன்படுத்துகிறோமே!!! அதற்குப் பெயர் என்ன? ஒரு டீயைக் கூடத் தாங்களாக போட்டுக் குடிக்கறோம் என்று சொல்லாமல், அதிகம் படிக்காத காரணத்தால் அவர்கள் செய்கிற வேலையாக இது போன்ற செயல்களை அனுமதித்து விட்டு தீண்டாமை ஒழிய சாதியும் மதமும்தான் காரணம் என்கிற பிதற்றல்கள் ஏன்? அது அவனுடைய வேலை என்று யாரும் சொல்ல இயலுமா? Watchman ,Office Boy மற்றும் Technician வர்க்கத்தை படிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தாழ்த்தப்பட்டவர்களாக உங்கள் அலுவலகங்களில் நீங்கள் நடத்திக் கொண்டுதான் இங்கு முகநூலில் சாதிதான் தீண்டாமைக்கும் , மக்களை ஒடுக்கப்பட்ட சமூகமாக நடத்துகிறது என்பது போல தங்களை சமூக சிந்தனையாளனாக அடையாளப்படுத்திக் கொண்டே பின்புறத்தில் கையாகாகத் தனம் செய்யும் பகுத்தறிவை என்னவென்று சொல்வது!

Engineer, சிஸ்டம் அனலிஸ்ட் என managerukku கீழ் இருப்பவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக நடத்துவார்கள். பெரும்பாலான நேரங்களில் அந்த Engineer க்கும் அவரது Immediate Superior ஆக உள்ள manager க்கும் பிரச்சினை என்றால் மேலதிகாரிகளின் தீர்ப்பு பெரும்பாலான நேரங்களில் சரி தவறு என்பதற்கு அப்பாற்பட்டு தீர்ப்பு மேனேஜர்க்கு சாதகமாக இருக்கிறது. அவை இந்திய நீதிமன்றங்கள் சில நேரங்களில் மட்டுமே மக்களின் தீர்ப்பை அல்லது மக்கள் எதிர்பார்க்கிற தீர்ப்பை வழங்குவது போல எப்போதாவது தான் தீர்ப்புகள் Engineer நிலையில் உள்ளவர்களுக்கு சாதகமாக உள்ளது. ஆனால் அதற்காக இந்த Engineer நிலையில் இருப்பவர்கள் , Technician பற்றி ஒரு குறையைச் சொன்னால் தீர்ப்பு அப்படியே மேற்குறிப்பிட்டது போல இந்த முறை Engineer நிலையில் உள்ளவர்க்கு சாதகமாகவும், Techinician நிலையில் உள்ளவர்களுக்கு எதிராகவும்தான் பெரும்பாலான நேரங்களில் உள்ளது.

waatchman வயதானவராக இருந்தால் பெயர் சொல்லி அழைப்பதும் , அவருடன் பேசுகிற போது உன்னிப்பாக உங்களையே நீங்கள் உற்று நோக்குங்கள். ஒரு விடயம் தெளிவாகப் புலப்படும். அவர் உங்களிடம் தனது பணி  நிமித்தமாக உங்கள் பைகளைத் திறந்து காண்பிக்கச் சொன்னாலோ  சற்று உங்களுக்கு எதிராக ஒரு சின்னக் கருத்தை சொல்ல முற்படும் போதே உங்களின் குரூர குணம் உங்களையும் அறியாமல் ஆதிக்க மொழியில் வெளிப்படும். manager ஆக இருப்பதால் தன்னை சார் என அழைக்க எதிர்ப்பார்ப்பதும், Manager ஆக  இருப்பவரை சார் என்றும் தங்களை விட பணி அடுக்கில் கீழ் நிலையில் உள்ளவர்களை மட்டும் வயது வித்தியாசம் இல்லாமல் பெயர் சொல்லி அழைப்பதெல்லாம் எந்த வகை?

இங்கு உங்கள் மொழியில் சொல்வதானால் சாதி கொண்டு வந்த முறையில் தாழ்த்தப்பட்டவனாக பிறந்திருந்தாலும் பதவியில் உயரியவனாகவும்  , Technician  வேலையில்  சாதி கொண்டு வந்த உயரிய சமூகத்தில் உள்ளவன் அந்த நிலையில் இருந்தால், அலுவலகங்களில் அவனுக்கான மரியாதைகள் குறைவுதான். ஆகையால் கல்வி கற்ற சமூகம் தன்னுடைய பதவியைக் கொண்டும், பொருளாதார அடிப்படையிலும் கீழ் இருக்கிற சமூகத்தை நடத்துகிற செயல்கள் இவ்வாறாகத் தான் உள்ளன.

கல்வி கற்ற சமூகத்திலும் இதுபோன்ற பாகுபாடுகள் தீண்டாமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தீண்டாமை என்பது ஒவ்வொரு சமூகத்திலும் ஏதோ ஒருவகையில் உருவெடுக்கிறது என்பதே உண்மை. ஏதோ சாதியும் மதமும் மட்டுமே தீண்டாமையை சிவப்புக் கம்பளம் போட்டு  வரவேற்பது போல பினாத்திக் கொள்வதை நிறுத்துங்கள்.. எந்த சமூகம் தன்னை பொருளாதார வகையிலும் பதவிகளிலும் முன்னிறுத்திக் கொள்கிறதோ அவர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிற உலகம் இது. ஆகையால் தான் சாதி ஒழிய வேண்டும் என்ற கருத்தில் எல்லாம் எனக்கு உடன்பாடுகள் கிடையாது. நம்மை தீண்டாமையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய எனது கருத்தை கலப்புத் திருமணங்களால் சாதியும்  தீண்டாமையும்  ஒழியுமா என்ற கட்டுரையில் தெளிவு படுத்தி உள்ளேன்.

எனது இறுதிக் கருத்து:
” உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டுதலைக்  காட்டிலும் பெரிய பழி  தீர்த்தல் வேறொன்றுமில்லை.”
அதாவது தீண்டாமை ஒழிய, நீங்கள் உங்கள் நிலையை உயர்த்தினாலே போதும். சாதியை எதிர்ப்பதால் மட்டும் தீண்டாமை ஒழியப் போவதில்லை. அது   வேறு வேறு வடிவங்களில் மனித உறவுகளுக்குள் ஏற்றத்தாழ்வுகளைப் பிறப்பித்துக் கொண்டே இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வுகளோடு தன்னை நிலைநிறுத்த /முன்னேற்ற, ஒரு சமூகம்/சாதி அல்லது தனி மனிதன் பயணிக்க வேண்டியது மட்டுமே உங்களை தீண்டாமையில் இருந்து காப்பாற்றுமே ஒழிய, சாதி ஒழிவதால் அல்ல. சாதி கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து , பல எதிர்ப்புகளையும் தாண்டி தன்னை நிலைநிறுத்துகிறது என்பதற்கு எது அடையாளம்? மனித இயல்பே தன்னை மற்றவர்களிடம் இருந்து உயர் குடியாளனாகக் காண்பிக்க முயல்வதே!!!! ஆகையால், எல்லா காலக் கட்டத்திலும் மனிதன் ஏற்றத்தாழ்வுகளை எதிர்நோக்க வேண்டியிருப்பதும் அதை எதிர்த்துப் போராடி தன்னை நிலைநாட்டுபவனுக்கு மட்டுமேயான உலகம் இது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

One response

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s