துப்பாக்கி – திரை விமர்சனம்

துர்பாக்கிய நிலையில் இருந்த விஜய்க்கு துப்பாக்கி நன்றாகவே கைகொடுத்திருக்கிறது!. “இங்க அடிச்சா அங்க  வலிக்கும். அவன் தானா வெளிய வருவான் பாருங்கன்னு” யூகிசேது ரமணாவில் ஒரு காட்சியில் சொல்வார். அதே தந்திரத்தை நம் கண்ணுக்குத் தெரியாமல் துப்பாக்கியிலும் இந்த ஸ்லிப்பர் செல்-சை பிடிக்கிறதால் ஒரு விஷயமும் கிடைக்கப் போறதில்ல, ஆனால் இவங்கள கொன்னுட்டா ,  தீவிரவாதியின் தலைவன் தானா நம்ம தேடி வர வாய்ப்பு இருக்கிறது என்று விஜய் சொல்கிற அந்தக் காட்சியில் இருந்து படம் சூடு பிடிக்கிறது.

தேசத் துரோகியான காவல் துறை அதிகாரியின் துணையோடு தப்பியோடுகிற கைதியை தன் வீட்டில் அடைத்து வைத்தும், அவன் வெளியில் வந்து யார் யாரைப் பார்க்கிறான் என்பதை 12 பேர் கொண்ட குழு தனித் தனியாகப் பிரிந்து செல்வோம். இறுதியில் வெறும் அடியாட்களான இந்த ஸ்லிப்பர் செல்-சை போட்டுத் தள்ளுவோம் என்ற ப்ளானை விஜய் அன்ட் கோ உளவுத் துறை குழுவினர் சரியாக முடித்து வைக்கிறது. அங்கிருந்து படம் ஜெட் வேகம் பிடிக்கிறது.

கைதியை தப்ப உதவிய காவல்துறை அதிகாரிக்கு லீகல் அண்ட் இல்லீகல் துப்பாக்கியை வைத்துப் பஞ்ச டயலாக் பேச முற்படும் போதே , காவல் துறை அதிகாரி தன் தேசத் துரோகத்தை உணர்ந்தவாறே இல்லீகல் துப்பாக்கியைக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

விஜய் பண்ணுன பிளானை வைத்து தனது நெட்வொர்க் மூலமாக கொலை செய்தவர்கள் கோர்ட் போட்டிருந்தார்கள் என்ற தரவுகள் மூலமாக இதை யார் செய்திருக்கக் கூடும் என்பதை அறிந்து கொண்டு, திருமணம் செய்த தம்பதியின் வீட்டிற்கு வந்து , அவர்களின் புகைப்படங்களையும் பயோ டேட்டாவையும்  தெரிந்து கொள்கிறது தீவிரவாதிக் கும்பல். விஜய் குழுவிலுள்ள  ஒருவனைப் போட்டுத் தள்ள , தீவிரவாதிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கையைத் தடுக்க விஜய் போடுகிற ப்ளான் என படம் நம்மைத் திரைக்கதைக்குள்ளேயே இருக்கச் செய்யும் முருகதாசின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

இரண்டாம் கட்ட நடவடிக்கையில் தன்  தங்கையைப் பணயம் வைத்து, தீவிரவாதிக் கும்பலின் அடுத்த நிலையிலுள்ள ஸ்லிப்பர் செல்- லை பாரத பூமிக்கு இரையாக்குகிறார் விஜய். மூன்றாம் கட்ட நடவடிக்கையாகத் தன் உயிரையே பணயம் வைக்கிறார். அதன் பின் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் எதிலும் ஒரிஜினல் தன்மை ஏதுமில்லாமல் கிளிசரின் போட்டு அழுவது போல ஏனோ காட்சிகள் ஒட்டாமல் இருக்கிறது.

அதுவும் கில்லியில் உடம்பில் உடைந்த ஒரு பகுதியை சரி செய்து விட்டு ஹீரோயிசம் காண்பித்திருப்பார். எங்கேயாவது விஜயை வைக்கலன்னா ரசிகர்கள் கோவிச்சுக்குவாங்களோன்னு விஜயும் முருகதாசும் பயந்து விட்டார்களோ என்னவோ!. ‘கயிறை  அவுத்து விடு, பிறகு தெரியும் இந்த காலை முரட்டுக் காளை மட்டுமல்ல , மரணம் தரக்கூடிய மிரட்டுக் காளை’ன்னு ப்ரூப் செய்கிறார்.

இந்தப் படத்துக்கு யார் திரை விமர்சனம் எழுதினாலும் விஜய்க்கு பஞ்ச டயலாக் அவ்வளவா இல்லன்னு சொல்லாம விடப் போறதில்ல. கிராமத்து மக்கள் புரியணும்கிறதுக்காக சத்யன் அவ்வப்போது இப்படி யாரவாது தங்கையைப் பணயம் வைப்பார்களா? என ஆங்காங்கே கேள்விகள் எழுப்புவதும்  , விஜய் நமக்கு பதில் சொல்லி தேசப் பக்தியை ஊட்டுவதும் மெய் சிலிர்க்கிறது!

ரொம்ப தேசப் பக்தியை காட்ட வேண்டிய அவசியமும் இல்ல, கதாநாயகி இல்லாம படம் எடுக்க வேண்டிய அவசியமும் இல்ல என்பதை நிருபிக்க காஜல் இருக்கிறார். ஒரு சில காட்சிகள் சுவாராஸ்யம் . விஜய் காஜல் வரும் சில காட்சிகள் அசுவாராஸ்யம். காஜலுக்கு காட்சிகளே சில. விஜய காந்த் படத்தில் வருகிற ஹீரோயின் போலவே இங்கும் கதாநாயகிக்கான வாய்ப்பு குறைவு. நல்ல வேலையாக ஜெயஹிந்த் படத்தில் ரஞ்சிதாவைக் கூட்டிக் கொண்டே போய் தீவிரவாதிகளைப் பிடிக்காமல் இருக்குமாறு செய்துள்ளமைக்கு முருகதாசுக்கு மீண்டும் நன்றி. மற்ற படி காஜல் நடிப்பில் சற்று முன்னேறி இருக்கிறார்.

ஆனாலும் ஜெயராம் காஜல் விஜய் சம்பந்தப் பட்ட காட்சிகள் கண்றாவி. மேலும் சூப்பர் ஹீரோவாக இருக்கிற விஜய்க்கு அவரோட  பாஸ் வெறும் ஜோக்கராக மட்டும் காண்பித்திருப்பது  படத்தை 2. 40 HRக்கு ஓட்ட மட்டுமே உதவுகிறது. இது போன்ற காட்சிகள் இல்லாம, வழக்கமாக உள்ள 2:15 HR க்கு படம் எடுத்திருந்தா படம் போர் அடிக்கிறதை சுத்தமாகத் தவிர்த்திருக்க முடியும்.

சத்யனுக்கு இன்னும் சில படங்கள் வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகத் தென்படுகின்றன. மற்றபடி, இசை இந்தப் படத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. பாடல்களும் சுமார் ரகம்தான். ஆனால் அதுதான் விஜய்க்கு வருத்தமாக இருக்கக் கூடும்.

இந்தப் படம் மூலமாக நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா என்னோட பதில் இதுதான். முருகதாசுக்கு இன்னும் ரெண்டு வருஷத்துக்கு தமிழ் பக்கம் வர வேண்டிய அவசியமில்லை. அப்படியே துப்பாக்கியை ஆந்திராவில் எடுத்து விட்டு,ஹிந்தியில் ஆமிர்கானையோ, சல்மான்கானையோ வைத்து எடுப்பதற்குத் தகுதியான காமன் லாங்வேஜ் அளவுக்கான கதை என்பதால் அவர் புதுக் கதைன்னு மூளையை குழப்ப வேண்டியதில்லை.

விஜய்க்கு என்ன சொல்லலாம்? நண்பன், துப்பாக்கின்னு ரெண்டு படத்தில் வாலை  சுருட்டிக் கொண்டு மார்க்கெட்டை காப்பாத்தியாச்சு!. இனிமே ரெண்டு மூணு படம் வில்லு, திருமலைன்னு இஷ்டத்துக்கு வசனம் பேச வைக்கிற டைரக்டர் படத்தில நடிச்சு,  தன்னோட பேரை வழிய போய்க் கெடுத்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு ஏதுமில்லை. ஏன்னா எப்பல்லாம் மரண அடி விழுகிறதோ, அப்போதைக்கு மட்டுமே விஜய் காதல், குடும்பம், டைரக்டரின்  செல்லப் பிள்ளை என இதுவரை நடித்திருக்கிறார் என்பதை அவரது முந்தைய வரலாறு சொல்லும். ஆகையால், விஜய் தன்  நிலையை உணர்ந்து இனி வரும் படங்களில் கதைகளை தேர்வு செய்ய வேண்டும்.

துப்பாக்கி- துர்(ப் )பாக்கியம் அல்ல, விஜய் அண்ட் முருகதாஸ் அன்ட் கோவிற்கும் , காசு சொடுத்து படம் பார்ப்பவர்களுக்கும்!

One response

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s