ப்ரோக்கோலி சூப்

This gallery contains 2 photos.

தேவையான பொருட்கள்: பிரொக்கோலி -1 கப் வெங்காயம் – அரை கப் பூண்டு – 10 பற்கள் ஆலிவ் ஆயில் – 2 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன் செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பிறகு ப்ரோக்கோலி போட்டு வதக்கவும். பிறகு தண்ணீர் விட்டு வேக விடவும். Corn  flour மாவை நீர்க்கக் கரைத்து வேக விடவும். இவை … Continue reading

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – பகுதி 1:

This gallery contains 2 photos.

  “மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது குடிமக்களின் அடிப்படை உரிமை.” பேச்சளவில் சொல்லப்பட்ட இந்த விடயத்தை உண்மையாக்க கொண்டு வரப் பட்டது தான், தகவல் அறியும் உரிமைச் சட்டம். விகடன் வெளியீடாக வந்த’ தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற நூலை எழுதி இருப்பவர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி. இந்த நூல் முழுக்க பரக்கத் அலியின் உழைப்பு தெரிகிறது. இயன்றவரை எந்த வித ஒளிவுமறைவுமின்றி தன்னுடைய … Continue reading

கும்கி – திரை விமர்சனம்

This gallery contains 1 photo.

படம் முழுக்க தியாகத்தையும் மரியாதையையும் ஆத்தோ ஆத்துன்னு ஆத்தியிருக்கிறார்கள். இனி கதைக்குச் செல்வோம். பழங்குடி இன மக்கள் வாழ்கிற நிலப் பகுதியில் பெரும் பணமுதலைகளால் கட்டிடங்கள்  காடுகளில் எழுப்பப்படுவதால் யானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. அதில் கொம்பன் என்ற மதம் பிடித்த யானை  பழங்குடி மக்களின் நிலப் பகுதிக்குள் நுழைந்து சிலரைக் கொன்று விடுகிறது. அதையடுத்து கிராமத் தலைவர் மற்றும் பொது மக்களிணைந்து கொம்பனை அடக்க கும்கி யானையை  ஏற்பாடு செய்கிறார்கள். கும்கியின் பயிற்சியாளர் குடும்ப சூழ்நிலைக் … Continue reading

கவரி மான் – சிறுகதை :

This gallery contains 1 photo.

சார்…. சார்… உங்களை ரவிக் குமார் சார் கூப்பிடுறார். உடனே வரணுமாம். ஆபீஸ் அசிஸ்டன்ட் சொல்லி விட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சென்றான். அவனைப் பொறுத்த வரையில் மெசேஜை பாஸ் பண்ணனும். அவ்வளவு தான். என்ன மனுசன்டா இவன்னு நினைச்சுக்கிட்டே பாஸ் அறைக்குள் சென்றேன். சார்….. கூப்பிட்டீங்களா? யெஸ் … சிவா , ப்ளீஸ் உட்காருங்க. எப்படி இருக்கீங்கன்னு சகல உபசரிப்புடன் வழக்கம் போல குசலம் விசாரித்தார்.   எல்லா கம்பெனியிலும் ஏன் தனி நபர் மீதான அக்கறையைக் … Continue reading

பொட்டடோ பிங்கர் ப்ரைஸ்( potato finger fries)

This gallery contains 3 photos.

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 4 உப்பு  – தேவையான அளவு அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் – தேவையான அளவு பெருங்காயத் தூள் – சிறிது எள் – 1 டேபிள் ஸ்பூன் (தேவைப்பட்டால்) செய்முறை : உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு  பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விட்டு சிறிது உப்பு, உருளைக்கிழங்கு போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு … Continue reading

சாதியை ஒழித்து விட்டால் சமத்துவம் மலருமா??

This gallery contains 2 photos.

சாதிகள் எப்படித் தோன்றின? கி .மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து சாதியக் கட்டமைப்புகள் பலம் பெற்று வந்துள்ளன. அதற்கு முன்னர் வரையிலும் இனக் குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு குழுவிற்கான நிலப்பரப்பில் அன்னியர்கள் நுழைவதைத் தடுக்க, குழு அமைக்கப் பெற்று இருக்கலாம். அக்குழுவின் தலைவனாக ஒருவன் நியமிக்கப்பட்டு இருக்கலாம். அந்தக் குழு அமைப்புகள் தங்களை அறிமுகப்படுத்த வைத்திருந்த பெயர்கள் சாதியாக மாறி இருக்கலாம். சாதியை மதம் திட்டமிட்டு உருவாக்கி வைத்திருப்பது என்று சொல்வது முதிர்ச்சியற்ற ஒரு மன … Continue reading

தவிப்பு – சிறுகதை

This gallery contains 1 photo.

  மணி இரவு பத்து. மூன்றாம் பிறை வந்து போய் விட்டிருந்தது. கும்மிருட்டு. ஆலமரத்தடி. நான் மட்டும் தனியாக!. தென்றலாய்க் காற்று வீசுகிறது. தூரத்தில் தெரியும் சைக்கிளின் டைனமோ வெளிச்சம். மரத்திலிருந்து வரும் பறவையின் மெல்லிய முனங்கல். எதையும் ரசிக்க இயலாதவனாய் நான். இயலாதவன் என்பதைக் காட்டிலும் ரசிக்க விரும்பாதவனாய் நான்!. ஒன்பது முப்பதுக்கெல்லாம் வந்து விடுவேன் என்றாள். இன்னும் வரவில்லை. நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் நான். வருகிறேன் என்று அவளே ஒத்துக் கொண்டாள். ஆனாலும் … Continue reading

பிரட் ரோல்

This gallery contains 6 photos.

  தேவையான பொருட்கள் பிரட் ஸ்லைசெஸ் காய்கறிகளின் பூரணம் செய்ய: கோஸ் – 1 கப் (பொடியாக அறிந்து கொள்ளவும்) பீன்ஸ் (5- 6) – பொடியாக அறிந்து கொள்ளவும்) காரட்  – 1 (துருவிக்கொள்ளவும் ) காப்சிகம் – 1 (துருவிகொள்ளவும்) இஞ்சி,பூண்டு விழுது – சிறிது உப்பு – தேவையான அளவு மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாரு – சிறிது எண்ணெய்  – பொறிப்பதற்கு அரிசி மாவு – … Continue reading