தேவையானப் பொருட்கள்:
பூரணம் செய்ய :
பூரணம் 1:
தேங்காய் துருவல் – 1/2 கப்
வெல்லம் – 4 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)
நெய் – 2 டீ ஸ்பூன்
ஏலக்காய் -1 (தட்டிகொள்ளவும்)
பூரணம் 2
கடலை பருப்பு – 1/2 கப்
வெல்லம் – 1 கப் (பொடித்தது)
நெய் – 2 டீ ஸ்பூன்
ஏலக்காய் -1 (தட்டிகொள்ளவும்)
மேல் மாவு செய்முறை :
அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.
அரிசி மாவில் சிறிது உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீர் விட்டு போர்க் அல்லது ஸ்பூன் வைத்து நன்கு கிளறவும்.
நன்கு கெட்டியாக பிசையவும்.
பூரணம் 1:
வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டவும்.
வாணலியில் நெய் விட்டு தேங்காய் வதக்கி அதனுடன் ஏலம், வடிகட்டிய வெல்லம் சேர்த்து கிளறவும்.
நன்கு வற்றியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
பூரணம் 2:
கடலைப்பருப்பை கழுவிவிட்டு குக்கரில் 4 விசில் விடவும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி வேகவைத்து மசித்த கடலைப்பருப்பு சேர்க்கவும்.
இந்த கலவையில் சிறிது நெய்,ஏலம் சேர்.
நன்கு வற்றிய பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
கொழுக்கட்டை செய்முறை:
பிசைந்த அரிசி மாவை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து, கை விரலால் அழுத்தி வட்டமாக தட்டவும்.
மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க அவ்வப்போது சிறிது எண்ணெய் தொட்டு கொள்ளவும்.
அதன் நடுவில் மேற்கூறிய பூரணம் ஏதேனும் ஒன்று வைத்து, அரைவட்ட வடிவில் மடித்து மூடவும்.
(உருண்டை வடிவிலும் செய்யலாம்.)
மடித்த கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும்.
8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.
சுவையான பூரண கொழுக்கட்டை தயார்.