தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
அரிசி மாவு – 1 – கப்
எள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் அல்லது டால்டா – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – சிறிது
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை :
முதலில் மைதாவை துணியில் கட்டி இட்லி ஆவியில் வேக விடவும்.
(மாவு நன்கு சூடாகும் வரை வேக விடவும். 10-15 நிமிடம் வேக விடவும்.)
மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இட்டு ஒரு ஸ்பூனால் உடைத்து விடவும். (மாவு சூடாக இருப்பதால்)
பிறகு மாவுடன் உப்பு, மிளகாய்த் தூள், அரிசி மாவு, வெண்ணெய் (டால்டா) சேர்த்து விரல் நுனிகளால் பிசிறி விட்டு பிசையவும்.
தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து விரல் நுனிகளால் ரவை மாதிரி உதிர்த்து பிசையவும்.
(மைதாவின் வழவழப்பு இல்லாமல் அரிசி மாவு மாதிரி பிசைய வேண்டும்.)
கைகளில் ஒட்டாதவாறு கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடாக விடவும்.
ஒரு கண் உள்ள அச்சு எடுத்து முறுக்கு உரலில் இட்டு எண்ணெய் தடவி மாவை வைத்து பிழியவும்.
சிறிது நீளமாக பிழிந்து இரு நுனிகளையும் இணைத்து வட்டமாக முறுக்குகளை பிழியவும்.
எண்ணெய் சூடானதும் பிழிந்த முறுக்குகளை பொரித்து எடுக்கவும்.
சுவையான மைதா முறுக்கு தயார்.
(கடைகளில் இதற்கு சிறிது சிகப்பு கலர் சேர்த்து செய்து இருப்பார்கள். தேவையெனில் கலர் சேர்த்து செய்யவும்.)
(கடைகளில் இருக்கும் முறுக்கின் சுவையும், நிறமும் அப்படியே இருந்தது)
This is one of the fine and fast preparing item,very nice murukku.-
M.Sankara Madhavan, Ramanathapuram.