பாதாம் சூப்

badham soup 1

தேவையான பொருட்கள்
பாதாம் – 20 முதல் 25 வரை
வொயிட் சாஸ் செய்ய :
மைதா – 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பால் – 1 கப்
வெஜிடபெல் ஸ்டாக் செய்ய
காய்கறி கலவை – 1 கப்
(காரட்,பீன்ஸ்,கோஸ்,குடை மிளகாய் – துருவிக்கொள்ளவும் அல்லது பொடிதாக அறிந்து கொள்ளவும்)
உப்பு- தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு

badham soup 2

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் வைத்து கொதிக்க விட்டு காய்கறி கலவையை போட்டு வேக விடவும்.
காய்கறி நன்கு வெந்த பிறகு தண்ணீரை நன்கு வடித்து விடவும்.  இது தான் வெஜிடபிள் ஸ்டாக்.
பாதாம் – ஐ தண்ணீரில் ஊறவைத்து, தோலுரித்து மிக்சியில் மையாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த பாதாம் – ஐ பாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.

badham soup 3

மற்றொரு வாண லியில் வெண்ணெய் சேர்த்து பிறகு 1டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து நன்கு வறுக்கவும். (சிறிது நிறம் மாறும் வரை)
இதனுடன் பால் கலந்து நன்கு கட்டி படாமல் கிளறவும். இந்த கலவை சிறிது கெட்டியாகும் வரை கிளறவும்.
இது தான் white sauce.
காய்ச்சிய பாதாம் பாலுடன் white sauce கலந்து நன்கு காய்ச்சவும்.

badham soup 4

பிறகு தேவையான அளவு வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும்.
வெந்த காய்கறி கலவை 1 அல்லது 2 டேபிள் ஸ்பூன்  கொதிக்கும் சூப்புடன் கலந்து கொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு,மிளகுத் தூள் மற்றும் சிறிது அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்க விட்டு சூடாக பரிமாறவும்.

badham soup 5

சுவையான சத்தான பாதாம் சூப் தயார்.

One response

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s