கற்குவேல் அய்யனார் கோவில் வரலாறு பகுதி 1

karku vel 1
கற்குவேல் அய்யனார் கோவிலின் வரலாற்றையும் , கோவில் குறித்த தகவலையும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகப் பெரிய உள்ளார்ந்த திருப்தி.
கற்குவேல் அய்யனார் நீதி கூறி மக்களை நல்வழிப்படுத்தி அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கச் செய்து அருள் பாவித்து வருகிறார். இங்கு எழுந்தருளியிருக்கும் கற்குவேல் அய்யனார், பொற்கலை , பூர்ணம், பேச்சியம்மன், பெரியாண்டவர், சுடலை மாடன், கருப்பன், பட்டவராயன், வன்னிய ராஜா, பலவேஷக்காரன், முன்னடியான், பின்னடியான், தளவை நல்ல மாடசாமி, உதிர மாடன், ஐவர் ராஜா, பிரம்ம சக்தி, இசக்கியம்மன், சங்கிலி மாடன், பகைடைச் சாமி, சொல்கேளா வீரன், சிவனனைந்த பெருமாள், நாகரிக சிவனனைந்த பெருமாள், செருக்கன், சூர்யர் பீடம், இலாட சன்னியாசி,ஆளியப்பர், பொங்கத்த அய்யனார் முதலிய பரிவாரத் தெய்வங்களும் எழுந்தருளி மக்களுக்கு அருள்மழை பொழிந்து வருகின்றனர்.
கற்குவேல் அய்யனார் கோவில் வரலாற்றை யாரிடம் எழுத ஒப்படைக்கலாம் என்று எண்ணிய பொழுது, சிறுதெய்வ வழிபாடு என்ற நூலை எழுதிய முனைவர் பேராசிரியர் கணபதி ராமன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
karku vel 2
கோவில் வரலாறு:
குதிரை மொழி:
ஆதித்த மன்னர்கள் குதிரை மொழி பகுதியை ஆட்சி புரிந்து வந்தனர். மானவீர வளநாடு, வடபத்து தென்பத்து மன்னர்களும் குதிரை மொழியில் உள்ள சுந்தர நாச்சியம்மன் கோவிலுக்கும் வெளிநின்ற பத்ர காளியம்மன் கோவிலுக்கும், கலியுகவரத அய்யனார் கோவிலுக்கும் நிலங்கள் வழங்கி  பூஜை நடைமுறைக்கு வழிவகை செய்தனர். இக்கோவில் கிபி 1639 லேயே அமைந்துள்ளது. கடந்த 500 வருடங்களுக்கும் முந்தைய வரலாறுடையது.
அய்யனார் அருள் காட்சி:
அரக்கர் வம்சத்தில் வல்லரக்கன் என்ற அரக்கன் பிறந்தான். சிறுவயது முதல் சிவனை நினைந்து வழிபட்டு வந்தான். வல்லரக்கன் ஒற்றைக்காலை ஊன்றி மறுகாலை ஊன்றிய காலின் மீது வைத்து நீண்ட தவம் புரிந்தான். ஆண்டுகள் பல ஓடின. சிவன் அறிந்தும் அறியாமலும் இருப்பதைக் கண்ட பார்வதி, பெருமானே அவன் தவத்திற்கு செவி சாய்க்கக் கூடாதா என்றார்.
பார்வதியின் விருப்பத்திற்கேற்ப வல்லரக்கனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு வல்லரக்கன் நான் யார் தலையில் கை வைக்கிறேனோ அவன் உடனே மரணமடைந்து விட வேண்டும் என்றானாம். சிவனும், தந்தேன்  என்றாராம். வரம் கிடைத்த மகிழ்ச்சியிலும் அகங்காரத்திலும் சிவன் தலையில் கை வைக்க நினைத்தானாம். இதையறிந்த விஷ்ணு வல்லரக்கனை மயக்க மோகினி வடிவமெடுத்து சென்றாராம். மோகினி வடிவத்தில் இருந்த விஷ்ணுவின் அழகில் மயங்கி  , நான் உன்னைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று மோகினியிடம் முறையிட்டானாம்.
உன்னை மணக்கிறேன். ஆனால் நான் செய்வதை நீயும் செய்தால் மணம் புரிகிறேன் என மோகினி வடிவில் இருந்த விஷ்ணு சொல்ல வல்லரக்கன் தலையாட்டினான். உடனே விஷ்ணு தன் தலையில் கைவைக்க, தான் வாங்கிய வரத்தை மறந்து தன் தலையிலேயே கைவைத்தான் வல்லரக்கன். அவன் வாங்கிய வரமே அவனுக்கு சாபமாய் மரணத்தைக் கொடுத்தது. சிவ விஷ்ணுவின் திருவிடையாடளுக்குப் பின் மோகினிக்கும், சிவனுக்கும் பிறந்த குழந்தைதான் ஹரிஹரன் என்ற அய்யனார் பிறந்தார்.
இந்தக் கதையை கோவிலுக்கு வில்லுப் பாட்டு பாட வருபவர்கள் சொல்வதுண்டு. கற்கை என்பதற்கு யானை மீது போடும் பலகை என்றும், வேலிப் பருத்திச் செடி என்றும் அகராதிகள் கூறுகின்றன. கற்கி என்பதற்கு கோவில் என்றும் பொருள் உண்டு. யானை மீது வைக்கப்படும் ஆசனத்தில் அய்யனார் அமர்ந்தருள்வதால் கற்கை அய்யனார் என்று சொல்லப் பெற்று பிற்காலத்தில் கற்குவேலை அய்யனார் என்று சொல்லப் பட்டிருக்கலாம். கற்கு என்பதற்கு கூர்மை என்ற பொருளும் உண்டு. சிலர் கூர்மையான வேல் – ஐக் கொண்ட என்பதைக் குறிப்பதானால் கற்குவேல் அய்யனார் என்று
அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.
karku vel 3
வேறு சிலர் கருவேல மரத்தில் எழுந்தருளி காட்சி தந்ததால் கருக்கோ அய்யனார் அன்று சொல்லப் பெற்றார். ” கற்கு வா” என்ற மரத்தின் மீதிருந்து
அருள் பாலித்ததால் “கற்குவா அய்யனார் ” என்றழைக்கப்பட்டு நாளடைவில் அதுவே கற்குவேல் அய்யனார் என மருவி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
கற்கு என்றால் கூர்மையான பகுதி என்ற பொருளும், மேலும் இப்பகுதி பனை மரங்கள் நிறைந்த பகுதியாதலால் அதன் பொருட்கொண்டும் இப்பெயர் அமையப் பெற்று இருக்கலாம் .
karku vel 4
அய்யனார் சன்னதியின் மகா மண்டபத்தில் விநாயகப் பெருமான் அமர்ந்தருளியுள்ளார். இலாட சன்னியாசி விநாயகருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். முனிவர் கோலம் முனீஸ்வரர், அய்யனாருக்கு ஆலோசனை கூறும் அமைச்சர் போன்றோர் வலது பக்கத்தில் உள்ளனர். மேலும் வலது பக்கத்தில் பரந்தாமனே ஆளியப்பராக அமர்ந்துள்ளார்.
அய்யனாரின் வாகனமாக குதிரை ஏன், மேலும் எவ்வாறு அய்யனார் அப்பகுதி மக்களுக்கு அருள் பாலித்தார் என்பது பற்றிய வரலாற்றை அடுத்த பகுதியில் காண்போம்.