எதிர்பாரா சந்திப்புகள்

friend meet

ஒவ்வொருவருக்கும் சில நேரங்களில் நடக்கிற நிகழ்வுகளில் ஏற்படுகிற அல்லது ஏற்பட்ட சுவாராஸ்யமான சம்பவங்கள் சுவையான அனுபவங்களாக நினைவுகளில் புதைந்து கிடக்கும். அம்மாதிரியாக  சந்திப்புகளில் ஏற்பட்ட சுவாராஸ்யத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன். கேட்பவர்களுக்கு, படிப்பவர்களுக்கு அது சுவாராஸ்யமா என்று தெரியாது. ஆனால் அதில் உடன்பட்டவர்களுக்கு அதன் சுகம் தெரியும். இது போன்ற சில சந்திப்புகள் உலகம் ரொம்பவே சிறியது என்ற எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது.
இந்த சம்பவம் நடந்த வருடம் 2000. ஒருமுறை சென்னையில் கே.கே. நகரிலுள்ள உள்ள நண்பன் அன்புவின் நண்பனான அருணாச்சலத்தைக் (நண்பனின் நண்பனைக்) காணச் சென்றேன். அவனுடைய ரூமுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, எங்கள் கிராமத்து நண்பன் கருணாநிதியைக் கண்டேன். கருணாநிதியும் நானும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். இன்ஜினியரிங் காலேஜ் படித்த போது பிரிந்து விட்டோம். கிராமத்தில் கருணாநிதியின் வீடு எங்கள் வீட்டுக்குப் பின்னாலுள்ள அடுத்த வீடே.
கருணாநிதி ஹீரோ ஹோண்டா splenderil வந்திருந்தான். எங்க போற கணேசு … (என்னுடைய அழைப்புப் பெயர்) என்றான். நான் அந்த பெருமாள்  கோவில் பக்கத்திலுள்ள நண்பன் ஒருவனைப் பார்க்கப் போறேன்னேன். அப்படியா… நானும் அந்தப் பக்கம்தான் போறேன் உன்னை இறக்கி விட்டுறேன் என்றான். ஓகேன்னு சொல்லிட்டு, என்ன பண்ணுறேன்னு கேட்டப்போ வேலைதான் தேடிக் கிட்டு இருக்கேன்னான். நானும் அதையே சொல்லிட்டு ஊருக்கு எப்ப போறேன்னு … வழக்கம் போல பேசிக்கிட்டே போனோம்.
கோவில் பக்கம் வந்ததும் நான் இறங்கிட்டேன். அப்ப அவன்கிட்டே யாரல்ல பார்க்கப் போறன்னேன். திருநெல்வேலி சைடுன்கிறதால வால…. போல…ன்னு பேசித்தான் பழக்கம். இங்க என்கூட ஒரு பையன் வடபழனி SSI ல JAVA படிச்சான். அவனும் நானும் மத்தியானம் ஒரு interview போறோம். அதான் கூப்பிட வந்தேன்னான். சரின்னு, சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சேன்.
அவன் பைக் பார்க் பண்ணுன பில்டிங்ல தான் நானும் என்னோட friend ஐ பார்க்கப் போறேன்னு அவனுக்கும்  தெரியாது. எனக்கும் தெரியாது. மக்கா, இந்தப் பில்டிங் ல தான் என் friend ம் இருக்கான்னு தெரிஞ்சவுடனே சிரிச்சுகிட்டு உன் friend கிரௌண்ட் ப்ளோரா first floor- ஆன்னு  கேட்க, first floor ன்னு சொல்ல, அப்படியா எந்த ரூம்ன்னு கேட்டேன்.அந்தக் கார்னர் வீடுன்னான்.
ஏய்  மக்கா… நானும் அங்கதாம்ல போறேன். அவன் யார்ல்ல  உன் friend அங்க இருக்கான்னேன். அருணாச்சலம்ன்னு கோவில்பட்டி காரன் ஒருத்தன்  இருக்கான். அவனைத் தான் கூட்டிட்டு போலாம்னு வந்தேன்னான். அடப் பாவி ,நானும் அவங்கிட்டதான் என் friend ரூம் key வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்னேன்.
ரெண்டு பேருக்கும் ஒரே ஆச்சர்யம்.  ஒரு விதமான சந்தோசம். ஒரே ஆளைப் பார்க்க ஒரே ஊர்க்காரனுக ரெண்டு பேர் யாரைப் பார்க்கப் போறோம்னு தெரியாம, அதுவும் அந்த அருணாச்சலம் ஒன்னும் எங்க ரெண்டு பேருக்கும் சென்னைக்கு வந்து கடந்த ஆறு மாசமாத் தான் தெரியும். அருணாச்சலமும் என்னோட நண்பன் அன்புவும் கோவில்பட்டியில பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒண்ணா படிச்சவங்க… அன்புவும் நானும் engineering காலேஜ் ல ஒண்ணா படிச்சோம். சென்னைக்கு வந்த பிறகு அன்புவின் மூலமாகத்தான்  எனக்கு அருணாச்சலத்தைத் தெரியும். அன்னைக்கு ரூம்ல உள்ளவர்களிடம் சொல்ல எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம்தான்!!.
friend meet 1
இன்னொரு சம்பவம் நடந்த வருடம் 2006. சவுதியில் நான் ரியாத்தில் வசித்து வருகிறேன். என்னுடன் பழைய கம்பெனியில் பணியாற்றிய நண்பன் ஹரிஹரன் கோபாரில் வேலை பார்த்து வந்தான். ஒருநாள் call பண்ணி, நாளைக்கு ரியாத் வர்றேண்டா… பார்க்கலாமா என்றான். சரிடா… ட்ரை பண்றேன். இங்க உள்ள சவுதி எலேக்ட்ரிசிடிக்கு உரிய substation ல witness activity போய்க்கிட்டு இருக்குடா, மூணு மணிக்கெல்லாம் போயிடுவாங்க . அதனால பார்க்கலாம். நீ எத்தனை மணி வரைக்கும் இருப்பேன்னப்போ எனக்கும் sec ல தான் வேலை. நானும்  மூணு மணி போல கோபாருக்கு கிளம்புவேன். எந்த substation ன்னு தெரியுமான்னு கேட்டப்போ, நாளைக்கு டேச்னிசியன் கூடப் போய் பார்த்தாத் தான் தெரியும்ன்னான். முடிஞ்சா பார்ப்போம்னான். சரின்னு சொல்லிட்டு போனை வச்சாச்சு.
மறுநாள் காலையில் SEC ல witness activity க்கு ரெடி பண்ணுற அவசரத்தில் அவனுக்குக் call பண்ணல. testing போய்க்கிட்டு இருந்தப்போ மேலேயும் கீழேயும் போய் current வருதான்னு பார்க்கணும். அப்படி first floor போனப்போ அங்க ஒரு நண்பனை சந்தித்தேன். அவன் பெயர் ஜேம்ஸ். அவனை 2002 ல் சட்டிஸ்கர் மாநிலம் கோர்பா (KORBA ) என்ற ஊரில் உள்ள Power Plant ஒன்றில் ஒன்றாகப் பணிபுரிந்தோம். அப்போது பார்த்தது. அவன் வேற கம்பெனி. நான் வேற கம்பெனி. அவன்கிட்ட பேசிட்டு திருப்பியும் witness காண்பிப்பதில் குறியானேன்.
10:00 மணிக்கு tea break டைம் ல ஹரிக்கு call பண்ணினேன். மக்கா… ரியாத்ல எங்கடா இருக்கேன்னேன். இங்க dirayah ன்னு ஒரு இடத்திலுள்ள substation ல இருக்கேன்னான். எந்த substation டா, நானும் அந்த ஏரியாவுல தான் இருக்கேன்னேன். 8097S / S ல இருக்கேன்னான். டேய் விளையாடாதே,,, நான் அங்கதான் இருக்கேன். நீ இங்க எங்கடா இருக்கே, எனக்குத் தெரியாம… ன்னேன்.
Scada  ரூம்லதான் என்றான். ரெண்டு மணி நேரமா current measure பண்ண போன first floor ல நான் test பண்ணுன ரூமுக்கு பக்கத்து ரூம் தான் scada room.  அந்த ரூம் door automatic கா close ஆகிக் கிடக்கிற door ங்கிறதால தெரியவே இல்ல. அப்புறம் அங்கேயே அவனைப் பார்த்தேன்.
இன்னொரு நண்பன் திருக்குமரன். ஜேம்சோட கம்பெனிதான். அவனும் நானும் கோர்பா வில் ஏழு மாதம் ஒண்ணா பணியாற்றினோம். பிறகு  ஒன்றரை வருடம் கழித்து துபாய்க்கு சென்றேன். நான் போன ஒரு வாரத்தில் ரெண்டு பேரும் ஒரே  கம்பெனிக்கு visit visa வில் பணியாற்ற வந்ததைப் பார்த்தபோது மகிழ்ச்சி. அங்க ஒரு ஆறு மாசம் ஒண்ணா வேலை செய்தோம். திரும்பியும் பிரிந்தோம். 2006 ல் சவுதியில் நான் இப்போது பணியாற்றுகிற அதே கம்பெனிக்கு visit விசாவில் வந்தான். என்னுடைய பாஸ் அவனை நான் testing செய்து கொண்டிருந்த யான்பு என்ற ஊருக்கு அனுப்பி வைத்தார். ரெண்டு பேருக்கும் ஒரே ஆச்சர்யம். அங்க ஒரு 5 மாதங்கள் என்னுடன் இருந்தான். பின்னர் கத்தார் போய் விட்டான். இப்ப திருப்பியும் சவுதிக்கு இன்னொரு கம்பெனிக்கு வந்த போது பார்த்தோம். உலகம் ரொம்பவே சிறியது. நமக்குத் தெரிந்த மனிதர்களை ஏதோ ஒரு சூழ்நிலையில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு ஊர்களில் கண்ட அனுபவங்கள் இன்னும் நிறைய உள்ளன. முடிந்தால் பகிர்கிறேன்.