உயிர்க்காற்றே…

This gallery contains 1 photo.

      காற்றே நீயும்       கடவுளின் சாயல்;       கடவுள் நீ ! என்ற       கருத்து  என்னிடம் உண்டு.         இல்லை, நீ அவரினும்         சிறந்தவன்;உயர்ந்தவன்;         ஆம் ! மும்மூர்த்திகளுக்கும்          கோயில்கட்டி  மூர்த்திகள் வைத்து          கோயில் செய்து பூட்டிவைத்ததாகக்           கூறிக்கொண்டாரின்           நாசிபடுகாற்று அல்லவா நீ!           இவ்வுலகில் மட்டுமன்று !            எவ்வண்டத்திலும்             எவரேனும் உனைச் சிறைவைத்தலோ             தனிச்சொந்தம் பாராட்டவோ              கூடுமோ!             எரிகின்ற எரிமலை … Continue reading

ஊக்கமே ஆக்கம்

This gallery contains 2 photos.

உதிர்ந்த இளைச்சருகுகளுக்காக வருந்தாது துளிர்விடும்  மரங்கள் !! தன் எடையிலும் அதிகம் தள்ள, இழுக்க,தாங்கி நடக்கின்ற எறும்புகள் !! வேரில்லாவிடினும் விழுதுகளால் வென்றுநிற்கும் ஆலமரங்கள் !! இரண்டுபட்டாலும் இறக்காமல் இரண்டாய் வளரும் மண்புழுக்கள் !! விளைந்தாலும் பயிர் அழிந்தாலும் வேளாண்செய்யும் விவசாயிகள் !! கற்பிக்கும் பாடம் புரிகிறதா !! ஊக்கமது கைவிடேல் !! அதுதான் உண்மையான ஆக்கம்!!! ( தயவுகூர்ந்து யாராகிலும் ஊக்க மது  கைவிடேல் என்று பிரித்து படித்து தவறாக  பொருள்கொள்ளாதீர்கள்! உலகில் சிறக்க ஊக்கம் … Continue reading

குடை மிளகாய் சட்னி

This gallery contains 2 photos.

தேவையான பொருட்கள்: குடை மிளகாய் – 1 (பெரியது) கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் உளுந்து – 1 டேபிள் ஸ்பூன் வேர்கடலை – 1 டேபிள் ஸ்பூன் தனியா – 1 டேபிள் ஸ்பூன் எள் – 1 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தாளிக்க : எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் சீரகம் – 1 டீ ஸ்பூன் செய்முறை: … Continue reading

ஒருமையின் பொருண்மை

This gallery contains 2 photos.

ஆக்கம் – திருமுருகன் ஒருமையின் பொருண்மை        நிலம் ,நீர் ,தீ , காற்று ,  வான்        தனியே சிந்தித்தால் ஒருமைதான் !       ஆய்ந்து ஆய்ந்து தனித்தனியே       ஒவ்வொன்றையும்  பன்மைசெய்கின்றான்        தனது சிற்றறிவால் இதயம்குறுகிய மனிதன் !        அன்பு, அருள், தூய்மை இவையும்         தனித்தனியே பார்க்கின்,ஒருமையே !         இவற்றின் விசாலம் பெரிதும்பெரிது!         மனிதன் உணரக்கூடும் ! -எவரால்          அளவிடக்கூடும்! அறிவுகள்,அன்புகள்,          தூய்மைகள் என்று … Continue reading

பீட்ரூட் வடை

This gallery contains 3 photos.

    தேவையான பொருட்கள் கடலைப் பருப்பு – 2 கப் துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் – 2 காய்ந்த மிளகாய் – 2 பச்சை மிளகாய் – 2 சோம்பு – 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – 1 கொத்து மல்லி இலை – சிறிது உப்பு – தேவையான அளவு    செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பை நன்கு தண்ணீரில் கழுவி 2 முதல் 3 … Continue reading

பாலக் பரோட்டா

This gallery contains 5 photos.

    தேவையான பொருட்கள்: கோதுமை மாவு -4 கப் உப்பு – தேவையான அளவு  பாலக் கீரை – 1 கட்டு  பச்சை மிளகாய் – 1 அல்லது 2  எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்  தண்ணீர் – தேவையான அளவு  செய்முறை  பாலக் கீரையின் பெரிய கம்புகளை ஆய்ந்து விட்டு 1 கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.  பாதி வெந்தால் போதும். வாணலியில் எண்ணெய் விட்டு அரிந்த பச்சை மிளகாய் போட்டு … Continue reading

தாராள மனசு – ஒரு பக்கக் கதை

This gallery contains 1 photo.

  யம்மா…ஏந்தான் இந்த அப்பா இப்படி இருக்காளோ …. சாப்பாட்டுத் தட்டுல மிச்சம் வைக்கக் கூடாதுன்னு வீட்டுல ரவுசு பண்ணுறார்னு பார்த்தா ஹோட்டல்ல வந்தும், பார்த்து ஆர்டர் பண்ணுங்க. மிச்சம் ஏதும் வச்சுறக் கூடாதுன்னு ஒரே அட்வைஸ். பத்தாக்குறைக்கு சாப்பாடோ, சப்ஜியோ மிஞ்சுச்சுனா பார்சல் போடுங்கன்னு வேற… ஏம்மா, அப்பா இப்படி பிச்சைகாரரா இருக்கார். தினம் தினம் ஏதும் மிஞ்சுதுன்னா பிரிட்ஜ்ல வச்சு காலையில் திண்கலாம்கிறார்.   போடி…. உங்க அப்பா எப்பவுமே இப்படித்தான். அவுக வீட்டுல … Continue reading

முள் முறுக்கு பொட்டு கடலை முறுக்கு

This gallery contains 3 photos.

முள் முறுக்கு பொட்டு கடலை முறுக்கு    இட்லி -அரிசி  4 கப்  பொட்டுகடலைமாவு – 1 கப் உப்பு – தேவையான அளவு வெண்ணை- 2 டேபிள் ஸ்பூன் சீரகம்- 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 டீ ஸ்பூன் செய்முறை : இட்லி அரிசியை நன்கு கழுவி 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் நன்கு மசிய அரைக்கவும். தண்ணீர் குறைய விட்டு அரைக்கவும். மாவு நீர்த்து போனால் காட்டன் … Continue reading