முள் முறுக்கு பொட்டு கடலை முறுக்கு
இட்லி -அரிசி 4 கப்
பொட்டுகடலைமாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
வெண்ணை- 2 டேபிள் ஸ்பூன்
சீரகம்- 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 டீ ஸ்பூன்
செய்முறை :
இட்லி அரிசியை நன்கு கழுவி 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் நன்கு மசிய அரைக்கவும்.
தண்ணீர் குறைய விட்டு அரைக்கவும்.
மாவு நீர்த்து போனால் காட்டன் துணியில் அரைத்த மாவை கொட்டி தண்ணீரை சற்று உறிஞ்சும் படி செய்து பொட்டுக் கடலை மாவு, சீரகம், பெருங்காயத் தூள் ,உப்பு,வெண்ணை சேர்த்து நன்கு பிசையவும்.
பிசைந்த மாவை முள் முறுக்கு(ஸ்டார் அச்சு ) அச்சில் வைத்து நீள கைப்பிடி வாய்த்த கரண்டியில் பிழிந்து பிறகு எண்ணையில் போடவும்.
முறுக்கு பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
(இட்லி அரிசியை அரைத்து செய்வதால் முறுக்கு நன்கு வெள்ளையாக இருக்கும்)
திரித்த மாவிலும் 4:1 என்ற விகிதத்திலும் செய்யலாம்.
எண்ணையில் நேரடியாக பிழிவதால் கையில் ஆவி அடிக்கும். (வெக்கை அடிக்கும்) . அதனால் தான் கரண்டியில் வைத்து பிழியவும்.
பிழியும் வேலையை மட்டும் நம்மிடம் கொடுத்து விடுவார்கள்… ஹிஹி…
செய்முறை விளக்கத்திற்கு நன்றி…
நன்றி தனபாலன் சார். எங்க வீட்டுலேயும் நமக்குத் தொழில் பிழிந்து தருவதுதான்.
ஹி….ஹி….ஹி…. எல்லார் வீட்டிலுமா? மானம் கெட்டதனம்தான்