தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -4 கப்
உப்பு – தேவையான அளவு
பாலக் கீரை – 1 கட்டு
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
பாலக் கீரையின் பெரிய கம்புகளை ஆய்ந்து விட்டு 1 கப் தண்ணீர் விட்டு வேக விடவும். பாதி வெந்தால் போதும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். மிளகாய் நன்கு எண்ணெயில் பொரிந்ததும் கோதுமை மாவில் சேர்க்கவும்.
(குழந்தைகளுக்கு எனில் பச்சை மிளகாய் தவிர்த்து விடவும்)
கோதுமை மாவில் உப்பு, எண்ணெய் சேர்த்து கை விரல்களால் நன்கு பிசிறி விடவும்.
பின் அதனுடன் வேக வைத்த பாலக் கீரை,கீரை வேக வைத்த தண்ணீர் சேர்த்து பிசையவும். தண்ணீர் போதாவிட்டால் தேவையான அளவு விட்டு நன்கு தளர்த்தியாக பிசைத்து கொள்ளவும்.
சுவையான, சத்தான பாலக் பரோட்டா தயார்.
இதுவரை செய்ததில்லை… வீட்டில் குறித்துக் கொண்டாயிற்று…
செய்முறை குறிப்புக்கு நன்றி…